Published:Updated:

`பெண் தோழி மட்டும் இல்லீங்க... மாப்பிள்ளைக்கும் தோழி!' -நெகிழ்ச்சிப் பகிர்வு #MyVikatan

Representational Image
News
Representational Image ( Pixabay )

காபியை வாயில் வைத்ததும் நாக்கில் சுட்டுவிட்டது. நான் பொய் சொல்லிவிட்டேன் என்பதால் காபி என்னிடம் கோபித்துக்கொண்டது போலும்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"ரேவதி, உண்மைய சொல்லுமா... அக்சய் யாரயாவது லவ் பண்றாளா..."

எனக்கு கை கால் எல்லாம் உதற ஆரம்பித்துவிட்டது. அக்சயாவின் அம்மா இவ்வாறு என்னிடம் கேட்டதும்.

"இல்லம்மா. அதெல்லாம் ஒண்ணும் இல்லை. இப்போதான காலேஜ் முடிச்சோம், அக்சய் கொஞ்சநாள் வேலைக்கு போனும்னு ஆசைப்பட்றா, அதான் கல்யாணம் வேணான்னு சொல்றாம்மா."

"அதெல்லாம் எதுக்கு ரேவதி... நாங்க ஆரோக்கியமா இருக்கப்பவே கல்யாணம் பண்ணி வெச்சிர்லாம்னு ரொம்ப ஆசைப்பட்றோம்."

"அதெல்லாம் நல்லா இருப்பீங்கம்மா... கவலைப்படாதீங்க. நானும் அவகிட்ட இதுபத்தி பேசுறேன்மா."

"சரி ரேவதி, அந்த காபிய குடிச்சிட்டுப் போ."

Representational Image
Representational Image
Vikatan Team

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காபியை வாயில் வைத்ததும் நாக்கில் சுட்டுவிட்டது. நான் பொய் சொல்லிவிட்டேன் என்பதால் காபி என்னிடம் கோபித்துக் கொண்டது போலும்.எனக்கா தெரியாது அக்சயா காதலிக்கிறாளா இல்லையான்னு! அக்சயா காதல் கொண்டுள்ளது என் பால்ய காலத்து நண்பன் கெளதம் உடன்தான்.

காதலர்கள் தன் தோழியை கூட்டிக்கொண்டு மூவராகச் சுற்றிய கதை தெரியுமா...

கல்லூரியில் பல நேரங்களில் மூவரும் சேர்ந்து அமர்ந்து உரையாடியுள்ளோம். நானே ஒருமுறை அவளிடம் கேட்டுவிட்டேன்.

"எனக்கே வெக்கமா இருக்கு. ரெண்டு பேரும் தனியாதான் போய் லவ் பண்ணுங்களேன். நான் எதுக்கு..."

"காலேஜ்ல தனியா போய் லவ் பண்ண என்னடி இருக்கு. அதான் போன்ல பேசிக்கிறோம்ல" - அக்சயா

Representational Image
Representational Image
Unsplash

அவர்களுக்குள் என்றுமே ஆரோக்கியமான காதலைத்தான் பார்த்துள்ளேன். பலமுறை வியந்துள்ளேன்.

ஒருநாள், உணவகத்தில் இருவருக்குள்ளும் ஏதோ சண்டை.

"நீ சொல்லு ரேவதி... அவ பண்ணதுதான தப்பு" - கெளதம்

"சொல்லுடி நான் பண்ணதுல என்ன தப்பு?" - அக்சயா

நானோ...

"இன்னொரு பரோட்டா ஆர்டர் பண்ணிக்கட்டுமா..." அவர்கள் காதலுக்குள் பெரும்பாலும் நான் மூக்கை நுழைப்பதில்லை. எப்படியும் நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அவர்களே சமாதானம் ஆகிவிடுவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திரைப்படங்களில் எதை எதையோ காதல் என்று காட்டுகின்றனர்.

ஒரு காதலன் காதலியின் இயல்பு. சண்டையில் இருவரின் கருத்துகள், அவர்களின் மனநிலை போன்ற வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லாமல் சொல்லிப் போனவர்கள் என் தோழமைகள்.

நாங்கள் மூவரும் சேர்ந்து இருக்கும் நேரங்களில்...

Representational Image
Representational Image

நானும் அக்சயாவும்... ரவீந்தர்சிங்கின் நாவல் கதாபாத்திரங்களையும் நயன்தாராவின் அடுத்த படத்தைப் பற்றியும் உரையாடுவோம். நானும் கெளதமும்... இளையராஜாவின் இசை மகத்துவத்தையும், அறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன் கதைகளையும், சோவின் அரசியல் நுட்பத்தையும் ஆலோசிப்போம்.

என் நட்பால் அவர்களின் காதலுக்கோ, அவர்கள் காதலால் என் நட்பிற்கோ என்றுமே சங்கடம் விளைந்ததில்லை.

அன்றே நான் யூகித்ததுதான். அவர்கள் காதல் நிச்சயம் வெற்றி அடையும் என்று.

என் யூகம் சரியானது. நாளை அதிகாலை ஐந்து மணிக்கு முகூர்த்தம். மூன்று மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பத் தயாராகிவிட்டேன். தாலி கட்டும் நொடியில் உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு. கெளதம் அண்ணா திருமணம் முடிந்த பின்பு, அக்சயாவின் ஒரு வருட வேலை அனுபவத்திற்குப்பின் இருவரும் வீட்டில் தக்க சமயத்தில் கூறி தன் காதலுக்கு பச்சைக் கொடியைப் போராடி பெற்றுள்ளனர். இந்தப் போராட்டமும் நெஞ்சில் உறுதியும் இருந்தால், இன்னும் பல காதல் கதைகள் வெற்றியில் முடியுமோ என்னவோ...

"பொண்ணோட மாலைய கொஞ்சம் சரி பண்ணி விடுங்க." காதுக்குள் ஊடுருவிய போட்டோகிராஃபரின் குரல் என் சிந்தனைகளைக் கலைத்தது.

போட்டோகிராஃபருக்கு பெண்ணின் மாலை அழகாகவே இருந்தாலும்... பெண்ணின் சேலை எத்தனை நேர்த்தியாக இருந்தாலும் யாராவது ஒருவர் மீண்டும் அதைச் சரிசெய்ய வேண்டும். அப்போதுதான் அவர் திருப்தியாக புகைப்படம் எடுப்பார்.

Representational Image
Representational Image
Vikatan Team

நான் ஓடிச்சென்று சேலையைச் சரிசெய்தேன். சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்துவிட்டு அக்சயாவின் தாலியை கையில் தொட்டேன். சிறு வயதிலிருந்தே ஈர மஞ்சள் கயிறு தாங்கும் புதுப்பெண் தாலியைத் தொட வேண்டும் என்ற ஆசை. ஆனால், அத்தகைய உரிமையை யாரிடமும் கொண்டதில்லை. என் தோழி என்ற கர்வத்துடன் கையில் ஏந்தினேன். தொட்டதும் கைகளுக்குள் ஒரு வெப்ப அதிர்வு. அவளை கட்டி அணைத்துக்கொண்டேன். ஏதோ ஒரு சிலிர்ப்பில் மேடையை விட்டு கீழே இறங்கினேன்.

அங்கே ஒரு பாட்டி என்னை அழைத்து என் காதருகே...

"நீ பொண்ணுக்கு சிநேகிதியா கண்ணு?" என்றார்.

"பொண்ணுக்கு மட்டும் இல்ல பாட்டி... பையனுக்கும் நான் சிநேகிதி தான்" - முகம் முழுதும் படர்ந்திருந்த மகிழ்ச்சியோடு கூறினேன்.

-செ. ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/