Published:Updated:

குண்டு எறும்பு..! - சிறார் குறுங்கதை #MyVikatan

Ant
Ant ( AnneGathow from Pixabay )

உங்கள் குழந்தைகளுக்கு சொல்ல அழகான ஒரு பெட் டைம் ஸ்டோரி..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கட்டெறும்பு எப்படி இருக்கும்?. கறுப்பா குட்டியா இருக்கும். சூசூ எறும்பும் கறுப்பாதான் இருந்துச்சு. ஆனா, குண்டா பெருசா. பெருசுனா ரொம்ப பெருசு. எவ்வளவு பெருசுனா, ரெண்டு யானை உசரம்.

ஆ... அவ்வளவு பெருசா? ஆமாம்.

அதுவும் சின்னதா குட்டியா இருந்த எறும்புதான். குட்டினா ரொம்ப குட்டி, இத்துணூன்டு.

ரொம்ப குட்டியா இருக்கேனு சூசூவுக்கு கவலை. மற்ற விலங்குகள் மாதிரி காடு காடா சுற்றி பார்க்க முடியலனு வருத்தம்.

விளையாடப் போனா யாராச்சும் தெரியாம மிதிச்சா சூசூ கை, காலை உடைச்சிடும். டாக்டர் எறும்பு வந்து கட்டுப்போட்டு, ஊசி போட்டு விட்டுட்டு போகும். அதனால எந்த விலங்கும் அதை விளையாட்டுக்கு சேர்க்கலை.

சூசூ குண்டா ஆகணும் என முடிவு பண்ணியது. குண்டாக மாற என்ன பண்ணனும்? சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கணும்.

Ant
Ant
AnneGathow from Pixabay

அதைத்தான் சூசூ பண்ணியது. எந்த வேலையும் செய்யாம நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கியது.

கொஞ்ச நாள்ல குண்டா மாறுச்சு. ரெண்டு யானை உசரம் அளவுக்கு குண்டாச்சு. சூசூவுக்கு யானை எல்லாம் எறும்பு மாதிரி தெரிந்தது. அதனால நடந்து போக முடியல.50 யானை சேர்ந்து தள்ளுனாதான், கொஞ்சம் நகர்ந்தது.

எங்காவது போகணும்னா மற்ற விலங்குகளை தள்ளச் சொல்லி உருண்டு போனது. உருண்டு போகும்போது, கறுப்பு மலை உருண்டு போகுற மாதிரி இருந்தது. மற்ற விலங்குகள் எல்லாம் ஆச்சர்யத்தோடும் அச்சத்தோடும் பார்த்தன.

சூசூ அமர்ந்து உறங்கிக்கொண்டிருந்தது. ஆ என வாயைத் திறந்து தூங்கியது. வலசை வந்த எட்டு யானைகள் கொண்ட கூட்டம் ஏதோ மலையென தான் இருக்குனு நினைச்சு, மலையேறியது.

எவ்வளவோ மலையேறி இருக்கிறோம். இப்படி ஒரு மலையேறியது இல்லையென யானைகள் பேசிக் கொண்டன. கஷ்டப்பட்டு வியர்க்க விறுவிறுக்க மலையேறின.

Elephant
Elephant
Pixabay

குட்டி யானை வேக வேகமாக ஏறுச்சு. எறும்பின் வாய்க்கிட்ட போனது. எறும்பு 'ஆ' என வாயைத் திறந்திருந்ததைப் பார்த்து, ஏதோ பள்ளம் என நினைத்து எட்டிப்பார்த்தது.

கால் சறுக்கி குட்டி யானைத் தொபுக்கடீர் என எறும்பு வாய்க்குள் விழுந்துவிட்டது. தொண்டைக்குள் சிக்கி நின்றது. எறும்பு அலட்டிக்காம அப்படியே உறங்கியது.

மற்ற யானைகள் குட்டியை வெளியே எடுக்க முயன்றன. யானைகள் வரிசையாக ஒன்றின் வாலை இன்னொன்று பிடித்துக் கொண்டு, ஒரு யானையை எறும்பின் தொண்டைக்குள் இறக்கின.

யானை தலை கீழாகத் தொங்கியபடி, எறும்பின் தொண்டைக்குள் போச்சு. குட்டி யானையின் தும்பிக்கையோடு, தும்பிக்கையை பிணைத்து இழுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து இழுத்து ஒரு வழியா குட்டி யானையை வெளியே எடுத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Elephant
Elephant
Iswanto Arif on Unsplash

வெளியே வந்த குட்டி யானை தெரியாத்தனமாக எறும்பின் மூக்கை மிதிச்சிடுச்சு.

எறும்பு "அச்" என தும்மியது. யானைகள் எல்லாம் தொப்பென தெறிச்சு விழுந்தன. நல்ல வேளை யாருக்கும் எதுவும் ஆகவில்லை.

சூசூ "ஆச்சு... ஆச்சு..." என தும்மிக்கொண்டே இருந்துச்சு. வாயில் இருந்து மழை போல எச்சில் கொட்டியது.

"அய்யய்யோ... இது ஏதோ எரிமலையா இருக்கும்போல" என யானைகள் அலறியடிச்சு ஓட்டம் பிடித்தன.

குண்டு எறும்பு சூசூ தும்மித் தும்மி கடைசியில துரும்பா இளைச்சிடுச்சு.

.......

- பிரசாந்த் வே

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு