Published:Updated:

`என் தேவைக்குப் போக மக்கள் தரும் பணம் மக்களுக்கே போகட்டும்!' -நெகிழவைத்த மனிதர்

பூல் பாண்டியன்
பூல் பாண்டியன் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

இந்த நிலையில், என்னிடம் இருந்த பணத்தில் ஒரு பகுதியை மதுரை கலெக்டரிடம் கொடுக்க விரும்பினேன். அதை அதிகாரிகளிடம் சொன்னதும் ஏற்பாடு செய்தார்கள்.

ஊரடங்கு நேரத்தில் தெருத்தெருவாக அலைந்து மக்களிடம் யாசகம் பெற்று சேர்த்த பணத்தை, கொரோனா நிவாரணத்துக்கு கொடுத்துள்ள பெரியவர் பூல் பாண்டியனின் செயலை மக்கள் அனைவரும் நெகிழ்ச்சியாகப் பார்க்கிறார்கள்.

பூல் பாண்டியன்
பூல் பாண்டியன்
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு ருத்ராட்சை மாலை,காவி உடையணிந்து, கையில் தட்டுடன் வந்த பெரியவர் பூல்பாண்டியன், தன்னிடமிருந்த ரூ.10,000-ஐ முதல்வரின் நிவாரண நிதிக்குக் கொடுத்தார்.

பணம் கொடுத்த ரசீதை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தவரிடம் இதுபற்றி கேட்டதற்கு, ''என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி ஆலங்குளம். பல வருடங்களாகத் தென் மாவட்டங்களிலுள்ள புண்ணியத் தலங்கள், சுற்றுலாத் தளங்களில் யாசகம் பெற்று வாழ்ந்துவருகிறேன். கிடைக்கும் பணத்தில் என் தேவைக்குப் போக பொதுக் காரியங்களுக்கு கொடுத்துவருகிறேன். எந்த மாவட்டத்தில் பிச்சை எடுக்கிறேனோ அங்கு எனக்கு கிடைக்கும் பணத்தில் அங்குள்ள பள்ளிகளுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் செலவுசெய்கிறேன்.

பணம் செலுத்திய ரசீது
பணம் செலுத்திய ரசீது
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுரையில் பிச்சை எடுக்க வந்த நேரத்தில், கொரோனா ஊரடங்கு வந்துவிட்டது. இங்கு பல இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நிலையில், அதிகாரிகள் என்னை பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைத்துவிட்டார்கள்.

அதனால் ஒரு மாதம் பிச்சை எடுக்கச் செல்ல முடியவில்லை. இந்த நிலையில், என்னிடம் இருந்த பணத்தில் ஒரு பகுதியை மதுரை கலெக்டரிடம் கொடுக்க விரும்பினேன். அதை அதிகாரிகளிடம் சொன்னதும் ஏற்பாடு செய்தார்கள். அடுத்ததாக, தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.10,000 கொடுக்க உள்ளேன்.

பூல் பாண்டியன்
பூல் பாண்டியன்
ஈ.ஜெ.நந்தகுமார்

இதேபோல், நான் பிச்சை எடுத்த ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நிவாரண நிதி வழங்க உள்ளேன். எனக்கு மக்கள் தரும் பணத்தை என் தேவைக்குப் போக அதை மக்களுக்கு திருப்பிக் கொடுக்கிறேன்'' எனக் கூறி நெகிழவைத்தார்.

அடுத்த கட்டுரைக்கு