Published:Updated:

முதல்வர் நிவாரண நிதி: பில்ராத்‌ மருத்துவமனை ரூ. 50 லட்சம்‌ நிதியுதவி!

பில்ராத்‌ மருத்துவமனை நிதியுதவி
பில்ராத்‌ மருத்துவமனை நிதியுதவி

தமிழக முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதிக்கு பில்ராத்‌ மருத்துவமனை ரூ. 50 லட்சம்‌ நிதியுதவி!

சென்னையைச்‌ சேர்ந்த முன்னணி தனியார்‌ மருத்துவமனைகளில்‌ ஒன்றாகிய பில்ராத்‌ மருத்துவமனை (Billroth Hospitals), கோவிட்‌ பெருந்தொற்றுக்கு எதிராக தற்போது நடைபெறும்‌ போரில்‌ அரசுடன்‌ இணைந்து பங்கேற்கும்‌ விதமாக, முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதிக்கு 50 லட்சம்‌ ரூபாயை வழங்கியுள்ளது. பில்ராத்‌ மருத்துவமனையின்‌ தலைமை செயல்‌ அதிகாரியான மருத்துவர்‌ கல்பனா ராஜேஷ்‌, இந்த நன்கொடைக்கான காசோலையை மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌ திரு மு.க. ஸ்டாலின்‌ அவர்களை நேரில்‌ சந்தித்து அண்மையில்‌ வழங்கினார்‌.

மருத்துவர்‌ கல்பனா ராஜேஷ்‌ இது குறித்து பேசுகையில்‌, “சவாலான இந்த நேரத்தில்‌ பிரச்னையைச்‌ சமாளிக்க அரசு வழிகாட்டுதலின்படி கோவிட்‌ பாதிப்பு பரவாமல்‌ தடுக்க பொதுமக்களும்‌ துணை நிற்க வேண்டும்‌. எங்களது மருத்துவமனை தரப்பில்‌ இருந்து அரசுக்கு இந்த நெருக்கடியான நேரத்தில்‌ முழுமையான ஆதரவு தந்து துணை நிற்பதுடன்‌, தொற்று பரவல்‌ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ அனைத்தையும்‌ தவறாமல்‌ கடைபிடித்து தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான மருத்துவ சேவையை வழங்குவோம்‌” எனத் தெரிவித்தார்‌.

அடுத்த கட்டுரைக்கு