Published:Updated:

ஒரே காட்சியில் குணசித்திர நடிகராக நிரூபித்த சூரி! - வாசகர் பகிர்வு

Actor Soori
Actor Soori

படம் முழுக்க காமெடியனாக வந்த சூரி அந்தக் காட்சியில் குணச்சித்திர பாத்திரமாக மாறியிருப்பார்....

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"சூரி" இந்தப் பேரை கேட்டாலே வெண்ணிலா கபடி குழுப் படத்தில் ஐம்பது புரோட்டா சாப்பிட்டுவிட்டு கோட்ட முதல்ல இருந்து போடுங்க... என்று சொன்ன அந்த காமெடி காட்சி தான் முதலில் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அந்த காமெடி நம் மனதில் ஆழப் பதிந்திருந்தது. இன்று வெற்றிமாறன் படத்தில் ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். அந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பது இன்னும் கூடுதல் சிறப்பு!

சூரி!" #HBDSoori
சூரி!" #HBDSoori

வெண்ணிலா கபடி குழுப் படத்தில் மாரிமுத்து என்கிற தன் நண்பன் இறந்ததும் அவனுக்காக வெட்டிய சவக்குழியில் இறங்கி கதறி அழும் காட்சியில் சூரி மனம் கவர்ந்திருப்பார். படம் முழுக்க காமெடியனாக வந்த சூரி அந்தக் காட்சியில் குணச்சித்திர பாத்திரமாக மாறியிருப்பார். அதே போல "மாவீரன் கிட்டு" படத்திலும் சூரியின் கதாபாத்திரம் அருமையாக எழுதப்பட்டிருக்கும்.

மாவீரன் கிட்டு படத்தில்...

கிட்டு என்கிற கிருஷ்ணா எங்கு ஒளிந்திருக்கிறான் அவனை காட்டி கொடுத்தால் உனக்கு நிறைய பணம் தருகிறோம் என்று வில்லன் குரூப் சூரியிடம் பணத்தாசை காட்டுவார்கள். சூரிக்கோ கிட்டு எங்கு ஒளிந்திருக்கிறான் என்ற பதில் தெரியும்... கண் முன்னாடியோ வில்லன்கள் நீட்டும் நிறைய பணம்... அதை வாங்கினால் லைஃப் செட்டில்... சூரியின் குடும்பத்தில் உள்ள பெண்கள் பணத்தை வாங்கிட்டு உண்மைய சொல்லிடு என்பார்கள். ஆனால் சூரி அதை செய்யாமல் சில கணம் யோசிப்பார். கட் பண்ணால் அடுத்த சீன்... பார்த்திபனிடம் வந்து நிற்கிறார்.

"அண்ணே நான் இனிமேல் உங்களோடு சேரும் தகுதியற்றவனாக மாறிவிட்டேன்..." என்பார் சூரி. பார்த்திபன் ஏன் என்று விசாரிக்கிறார். "என்னிடம் நம் எதிரிகள் பணத்தை நீட்டிகிட்டு எங்கு இருக்கிறான்னு கேட்டாங்க என சொல்லி தலைகுனிகிறார் சூரி. "டேய் கிட்டு இருக்குற இடத்த சொல்லிட்டியா..." என்று பார்த்திபன் பதறுகிறார். "இல்லண்ணே... சொல்லல்ல" என்று சூரி சொல்ல... "அப்புறம் ஏன்டா எங்கள விட்டு விலகுறேன்னு சொல்ற..." என பார்த்திபன் கேட்க "அந்த ஒரு நிமிசம் பணத்துக்கு ஆசப்பட்டுட்டேண்ணே..." என்று தன் மனசாட்சிக்கு நேர்மையாக இருப்பார் சூரி. சூரியின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான காட்சி அது.

சூரி
சூரி

"என் படத்துல சூரி இல்லாமலா..." என்று இயக்குனர் சுசீந்திரன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதே போல சூரியை ஹீரோவாக வைத்து "ஆறு ராஜாக்கள்" என்று ஒரு படம் எடுக்க இருப்பதாகவும் கூறியிருந்தார் சுசீந்திரன். வெண்ணிலா கபடி குழு படம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இன்றும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்து அக்கறையுடன் நட்புடன் பழகி வருகிறது சாதாரண சினிமா ரசிகர்களுக்கு நல்ல செய்தியாகவே இருக்கிறது. இருவரும் என்றைக்கும் பிரியாமல் இணைந்திருங்கள்!


இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் காமெடியில் வடிவேலுவுக்கு அடுத்து நீங்கள் தான் சூரி. கிராமத்தில் வாழும் எளிய மக்களுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வேலைன்னு வந்துட்டா வெள்ளகாரன், தேசிங்கு ராஜா போன்ற படங்களில் உங்கள் காமெடி ரொம்ப பிடித்திருக்கிறது. நிஜ வாழ்க்கையிலும் பல பேட்டிகளில் பார்க்கும் உங்களை அவர்களுக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது. உங்கள் இனிய பயணம் தொடரட்டும்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூரி!

- மா. யுவராஜ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு