Published:Updated:

பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ரூ.1.30 கோடி நிதியுதவி!

கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில் தமிழ்நாட்டிலும் நாளொன்றுக்கு சராசரியாக 30,000-க்கும் மேல் புதிய தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வரின் நிவாரண நிதிக்கு மக்களும் பெரும் நிறுவனங்களும் நிதியுதவி அளித்துவருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களை மே 19 அன்று தலைமைச்‌ செயலகத்தில்‌, B.S.Abdur Rahman Crescent Institute of Science & Technology வேந்தர்‌ திரு. ஆரிப்‌ புஹாரி மற்றும்‌ இணை வேந்தர்‌ திரு. அப்துல்‌ காதிர்‌ ரகுமான்‌ ஆகியோர்‌ சந்தித்து, கொரோனா நிவாரணப்‌ பணிகளுக்காக முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதிக்கு 1 கோடியே 30 லட்சம்‌ ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்‌. உடன்‌ மாண்புமிகு ஊரகத் தொழிற்‌துறை அமைச்சர்‌ திரு. தா.மோ. அன்பரசன்‌, அக்கல்வி நிறுவனத்தின்‌ செயலாளர்‌ திரு. காலித்‌ புஹாரி ஆகியோர்‌ உள்ளனர்‌.

அடுத்த கட்டுரைக்கு