Published:Updated:

அம்மாவின் கிருஷ்ண ஜெயந்தி..! - மகனின் நெகிழ்ச்சி பகிர்வு #MyVikatan

கீழே லோயர் பெர்த்தில் இருந்த அம்மாவும் அவர் 5 வயது பையனும் அவர்களது பேச்சும் என்னை‌ பிளாஷ்பேக்கிற்கு அழைத்து சென்றது...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஆறு மாதங்களுக்குப் பிறகு வீட்டிற்கு விடுமுறையில் செல்கிறேன்... வழக்கம் போல அப்பர் பெர்த் சுந்தருக்கே....

இன்று கிருஷ்ண ஜெயந்தி... அம்மாவின் வாழைப்பழ அப்பத்தின்‌ சுவையை இன்று ருசித்திடலாம்... அதுவும் சர்ப்ரைஸாக போவதால் அம்மாவின் மகிழ்ச்சி அதிகமாகப் போகிறது.

கீழே லோயர் பெர்த்தில் இருந்த அம்மாவும் அவர் 5 வயது பையனும் அவர்களது பேச்சும் என்னை‌ பிளாஷ்பேக்கிற்கு அழைத்துச் சென்றது.

seedai
seedai

மாடியில் காயவைக்கப்பட்டிருந்த ஊற வைத்த பச்சரிசி காக்காய்களுக்கு மட்டுமா பிடிக்கும் எனக்கும்தான். ஒரு கை நிறைய அள்ளி அதை சுவைத்து சாப்பிடும்போது பால் போன்ற சுவையான திரவம் ...ம்ம்ம் சுவையோ சுவை...

அம்மாவின் கைபிடித்துக்கொண்டு ரைஸ் மில்லில் அரிசி அரைக்க‌ போய்வருவதும்... ரைஸ்மில்லின் அரவை இயந்திரம் ஒரு பெரிய பாத்திரம் அதன் பக்கவாட்டில் மூங்கில் குச்சி ஒன்று... அதை அவ்வப்போது அந்த பாத்திரத்தில் தட்டும் அந்த லாவகம், மேலே அந்த பாத்திரத்தில் போட்ட அரிசி கீழே இருக்கும் வாளியில் மாவாய் கொட்டுவதையும் அதிசயங்களாய் பார்த்திருக்கிறேன்...

அரைத்து வந்த மாவில் அம்மா செய்யும் சீடை, முறுக்கு, வாழைப்பழத்தை கலந்து செய்யும் அப்பம் ‌‌‌‌என அனைத்தும் அன்று கிருஷ்ண ஜெயந்தி என்பதை நினைவூட்டும்.

மாலையில் அரிசி மாவில் சிறிது மஞ்சள் சேர்த்து போடும் கோலமும் எட்டு எட்டாக வரைந்து அதனை அழகிய குழந்தையின் காலடி தடமாக மாற்றும் மேஜிக்கல் டிராயிங்கிற்கு எப்போதும் நான் மிகப்பெரிய ரசிகன்...

வீட்டில் இருக்கும் கிருஷ்ணர் படங்களை கீழே சிறிய பலகையில் வைத்து வாழையிலை இரண்டை சேர்ந்தாற்போல் விரித்து நெய் மணக்கும் அப்பம், இனிப்பு சீடை, காரசீடை, முறுக்கு, அவல், ஒரு சிறிய கிண்ணத்தில் மணமணக்கும் வெண்ணெய் என இலை நிரம்பி வழியும்.

அப்பா வந்ததும் ஆரம்பிக்கும் பூஜையில் ஹரே கிருஷ்ணா மந்திரம் சொல்லிக்கொண்டே நெய்வேத்யம் செய்து கற்பூரம் காட்டி முடியும் வரை பிரசாதத்தை சாப்பிட முடியாமல் கற்பூரம் சீக்கிரமாய் மலையேற கடவுளை வேண்டி கொள்வேன்...

அந்த இலையில் ஒளிந்து கொண்டிருக்கும் சாக்லேட்டுகளும் பிஸ்கட்டுகளும் அம்மாவிற்கு ஐயமில்லாமல் நான் செய்த வேலைதான் என தெரியும்...

Lord Krishna
Lord Krishna
Vivek Sharma on Unsplash

இப்படி அம்மாவிடம் செய்யும் சிறு சிறு குறும்புகளை ரசித்துக் கொண்டே போடி கழுதை என்ற செல்லமான திட்டலும் வலிக்காத காது திருகல்களும் அடிக்கடி நிகழ்ந்தேறும்...

ரயிலில் இருந்து இறங்கி ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது மணி 11 ஆகியிருந்தது. காலிங் பெல்லை அடித்தேன்...

காலடி தடங்கள் ஆங்காங்கே சிதைந்திருந்த போதும் தன் கண்ணன் வந்துவிட்டதை எட்டிப்பார்த்த அம்மாவிற்கு மகிழ்ச்சியில் வார்த்தைகள் வாய்வழி வராது கண்களில் வந்தது... என்னை கட்டி அணைத்துக்கொண்ட அப்பாவிற்கும்தான்...

கண்களை கசக்கியபடியே வந்த தங்கையோ மகிழ்ச்சியில் கத்த என சந்தோசத்தின் உச்சம்..!


- சுக்கிரன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு