Published:Updated:

``பசங்களுக்குப் பணம் அனுப்பினோம்; அவங்க வருத்தத்தோடு சொன்னது...!" - சர்க்கஸ் தம்பதியின் கதை

சர்க்கஸ் தம்பதி

``பலமுறை கீழே விழுந்து எனக்கு அடிபட்டிருக்கு. ரத்தக் காயங்களும் ஏற்பட்டிருக்கு. இந்த ரெண்டு சாகசங்களும் ரொம்பவே சிரமமானது. உடன் சாகசம் செய்ற ஒரு கலைஞர் கவனத்தைச் சிதறவிட்டாலும், மற்ற எல்லோருக்குமே பெரிய ஆபத்துதான்."

``பசங்களுக்குப் பணம் அனுப்பினோம்; அவங்க வருத்தத்தோடு சொன்னது...!" - சர்க்கஸ் தம்பதியின் கதை

``பலமுறை கீழே விழுந்து எனக்கு அடிபட்டிருக்கு. ரத்தக் காயங்களும் ஏற்பட்டிருக்கு. இந்த ரெண்டு சாகசங்களும் ரொம்பவே சிரமமானது. உடன் சாகசம் செய்ற ஒரு கலைஞர் கவனத்தைச் சிதறவிட்டாலும், மற்ற எல்லோருக்குமே பெரிய ஆபத்துதான்."

Published:Updated:
சர்க்கஸ் தம்பதி

பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது சர்க்கஸ் அரங்கம். அதில், பகல் காட்சிக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. பின்புறம், இருவர் மட்டுமே தங்கும் சிறிய கூடாரங்கள் காற்றில் அசைந்தவாறு நம்மை வரவேற்கின்றன. அங்கு தங்கியிருக்கும் சர்க்கஸ் கலைஞர்கள், மொழி எல்லைகளைக் கடந்து ஒருவருக்கொருவர் அன்பாகப் பழகுகிறார்கள். 

சர்க்கஸ் தம்பதி
சர்க்கஸ் தம்பதி

சர்க்கஸ் நிகழ்ச்சிக்கான வரவேற்பு குறைந்துவரும் இன்றைய சூழலிலும், இந்தத் தொழிலையே நம்பி ஏராளமான குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழுமலை - ஜானகி தம்பதி நம் கண்ணில் பட்டனர். இவர்கள், சென்னையில் நடைபெற்றுவரும், `கிரேட் பாம்பே சர்க்கஸ்' நிகழ்ச்சியில் வேலை செய்கிறார்கள். திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், பல்வேறு சவால்களையும் வலிகளையும் கடந்து,  சர்க்கஸ் நிகழ்ச்சியில் வேலை செய்கிறார்கள். இருவரும் தங்கள் சர்க்கஸ் வாழ்க்கைக் கதையை மகிழ்ச்சியுடன் பகிர்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``என் பெற்றோர் ஜெமினி சர்க்கஸ்ல சமையல் வேலை செய்தாங்க. சர்க்கஸ் கூடாரத்துலயேதான் நான் பிறந்தேன். ஸ்கூல் போனதில்லை. சர்க்கஸ்லயேதான் வளர்ந்தேன்; விளையாடினேன். இதைத் தாண்டி வேறு ஒரு வெளியுலக வாழ்க்கையே எனக்குத் தெரியாது. சர்க்கஸ்லயே பாடம் சொல்லிக்கொடுத்தாங்க. ஆறாவது வரை படிச்சேன். 

சர்க்கஸ் தம்பதி
சர்க்கஸ் தம்பதி

வெவ்வேறு மாநிலங்கள்ல அடுத்தடுத்து சர்க்கஸ் நடத்துவோம். அதனாலயும் எங்க சர்க்கஸ்ல வேலை செய்த பல மொழிகளைச் சேர்ந்தவங்க வாயிலாகவும் பல்வேறு மொழிகளில் பேசக் கத்துகிட்டேன். எனக்கு ஆறு மொழிகள் தெரியும். சின்ன வயசுலயே சர்க்கஸ் வேலையில் சேர்ந்தேன். ஆரம்பத்தில், சைக்கிள் சாகசம், பறவைகளை வெச்சு சாகசம் செய்றது, ரிங் சுத்துறதுனு பல வேலைகளைச் செய்தேன். படிப்படியா கடினமான சாகசங்கள் செய்ய ஆரம்பிச்சேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தரத்துல கயிற்றில் சாகம் செய்தும், ஸ்விங் சாகம் செய்தும் பலமுறை கீழே விழுந்து எனக்கு அடிபட்டிருக்கு. ரத்தக் காயங்களும் ஏற்பட்டிருக்கு. இந்த ரெண்டு சாகசங்களும் ரொம்பவே சிரமமானது. உடன் சாகசம் செய்ற ஒரு கலைஞர் கவனத்தைச் சிதறவிட்டாலும், மற்ற எல்லோருக்குமே பெரிய ஆபத்துதான்.

சர்க்கஸ் தம்பதி
சர்க்கஸ் தம்பதி

இந்தச் சாகசம் செய்யும்போது சிலர் உயிரிழந்த நினைவுகள் என் மனசுல ஆழமா பதிஞ்சிருக்கு. ஒருகட்டத்துல இந்த வேலை வேண்டாம்னு வேறு வேலைக்குப் போனேன். ஆனாலும், அதெல்லாம் ஒத்துவரலை. மீண்டும் சர்க்கஸ் வேலைக்கே வந்துட்டேன்" என்கிற ஏழுமலை, அருகிலுள்ள மனைவி ஜானகியைப் பார்த்துச் சிரிக்கிறார்.

``நானும் திருவண்ணாமலைதான். மூணாவதுதான் படிச்சிருக்கேன். பெற்றோர் பார்த்து முடிவு செய்த கல்யாணம்தான் எங்களுடையது. நாமதான் படிக்கலை. நம்ம நிலைமை குழந்தைகளுக்கு வரக்கூடாதுனு நாங்க இருவரும் தீர்க்கமா முடிவெடுத்தோம். எங்க ரெண்டு குழந்தைகளையும் நல்லா படிக்க வைக்கிறதுதான் எங்க முக்கிய நோக்கம். அதனால, கணவருடன் சேர்ந்து நானும் சர்க்கஸ் வேலைக்குச் சேர்ந்தேன். ஆரம்பத்துல நான் எந்த சாகசமும் செய்ய மாட்டேன். தரையில இருந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்துற வேலையை மட்டும்தான் செய்வேன். 

சர்க்கஸ் தம்பதி
சர்க்கஸ் தம்பதி

பறவைகளை வெச்சு சாகசம் செய்றது, ஆட்களை உட்கார வெச்சு சைக்கிள் ஓட்டி சாகசம் செய்றது, தலா ஓரடி உயரமும் அகலமும் உடையப் பாதையில் சைக்கிள் ஓட்டுறது, நெருப்பு டான்ஸ்னு இப்போ பல்வேறு சாசகங்கள் செய்றேன். எனக்கும் பலமுறை அடிபட்டிருக்கு. சர்க்கஸ் வேலையில அடி படுவதையும் காயம் ஏற்படுவதையும் தவிர்க்க இயலாது" என்கிற ஜானகி, தன் கையில் இருக்கும் காயத்தின் சுவடுகளைக் காட்டினார்.

``என் சின்ன வயசுல கேரளாவில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தினோம். அங்க `அபூர்வ சகோதரர்கள்' படத்தில் அப்பு கமல் வரும் காட்சிகளைப் படமாக்கினாங்க. அப்போ கமல் சார்கூட பேசிப் பழகினேன். இந்த வேலையில் எனக்கு 45 வருஷ அனுபவம். என் மனைவிக்கு 10 வருஷ அனுபவம். இப்போ ரெண்டு மாதத்துக்கு சென்னையில சர்க்கஸ் நடக்கும். 

வீட்டுக்குப் பணம் அனுப்பிவெச்சு, `புது டிரஸ் வாங்கி, பொங்கல் கொண்டாடுங்க'னு பசங்ககிட்ட சொன்னோம். `இந்தப் பண்டிகைக்குக்கூட நீங்க வரலை. எங்களுக்கு எதுக்குக் கொண்டாட்டம்'னு பிள்ளைங்க ஆதங்கத்தோடு சொன்னாங்க.
சர்க்கஸ் தம்பதி

அடுத்து வேற மாநிலத்துக்குப் போயிடுவோம். அதனால, நல்லா ஊர் சுத்தலாம். சர்க்கஸ்ல எல்லா வேலைகளையும் பார்த்திருக்கேன். ஆனா, இப்போ உடல்நிலைப் பிரச்னைகளால் ரொம்பவே ரிக்ஸ்க்கான சில சாகசங்களை மட்டும் நான் செய்றதில்லை" என்கிறார், ஏழுமலை.

உரையாடல், பண்டிகை காலங்கள் குறித்துத் திரும்பியது. ``பண்டிகை மற்றும் திருவிழா காலங்கள்லதான் சர்க்கஸ்ல கூட்டம் அதிகம் வரும். அதனால, பெரும்பாலான பண்டிகை நேரத்துல ஊருக்குப் போக மாட்டோம். இப்போகூட பொங்கல் பண்டிகைக்கு நாங்க ஊருக்குப் போகலை. மாமியார்தான் எங்க பசங்களைப் பார்த்துக்கிறாங்க. வீட்டுக்குப் பணம் அனுப்பிவெச்சு, `புது டிரஸ் வாங்கி, பொங்கல் கொண்டாடுங்க'னு பசங்ககிட்ட சொன்னோம். 

சர்க்கஸ் தம்பதி
சர்க்கஸ் தம்பதி

`இந்தப் பண்டிகைக்குக்கூட நீங்க வரலை. எங்களுக்கு எதுக்குக் கொண்டாட்டம்'னு பிள்ளைங்க ஆதங்கத்தோடு சொன்னாங்க. எங்களுக்கும் வருத்தம்தான். ஆனா, இதையெல்லாம் தவிர்க்க முடியாது. அப்பப்போ ஊருக்குப் போய் குடும்பத்தினரைப் பார்த்துட்டு வருவோம். எவ்வளவு சிரமப்பட்டு நாங்க இந்தத் தொழில் செய்றோம்னு பிள்ளைங்களுக்குத் தெரியும். பையன் பத்தாவது, பொண்ணு ஏழாவது படிக்கிறாங்க. அவங்க பெரியவங்களா வளர்ற வரைக்கும் நாங்க இந்தத் தொழில் செய்துதான் ஆகணும்" என்று மெல்லிய குரலில் ஆதங்கத்துடன் கூறுகிறார், ஜானகி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism