Published:Updated:

பணத்துக்குதான் கஷ்டம்... மகிழ்ச்சிக்கு பஞ்சமில்ல! - வாசகியின் ஷார்ட் & ஸ்வீட் காலேஜ் டைரி #MyVikatan

சோகமாகயிருந்தாலும் சந்தோசமாகயிருந்தாலும் நாங்கள் போகும் ஒரே இடம் கேன்டீன்தான்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அடிச்சு புடிச்சு ஒருவழியாக பள்ளிப்பருவத்தை முடித்து கல்லூரிக்குள் கால் வைத்துவிட்டோம். முதல் நாள் எதிர்காலத்தைப் பற்றி இருந்த ஆர்வத்தைவிட, எத்தனை பள்ளித்தோழிகள் இங்கு சேர்ந்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்தான் அதிகமாக இருந்தது. படித்த பள்ளியும் மகளிர் பள்ளிதான் சேர்ந்த கல்லூரியும் மகளிர் கல்லூரி. எங்கள் கல்லூரி விருதுநகரில் புகழ் பெற்ற கல்லூரி. 90 சதவிகிதம் பார்த்து பழகிய முகங்கள்தான் ஆசிரியர்களைத்தவிர.

பழகிய தோழிகள் எல்லாம் ஒருபுறம், புதிதாகச் சேர்ந்தவர்கள் எல்லாம் ஒருபுறம் என்று இருந்தோம். நாள்கள் நகரநகர கடலில் கிடைக்கும் சிப்பிபோல் ஆனோம்.

Representational Image
Representational Image
Vikatan Team

ஆட்டம், பாட்டம், கருக்குமுறுக்கு கேன்டீன் நேரங்கள் என்று பகிர்வதற்கு அதிக சுவாரஸ்யமான விஷயங்கள் இருந்தும் கற்ற கல்வியைப் பற்றித்தான் நான் முதலில் சொல்ல விரும்புகிறேன்.

விரிவுரையாளர்கள் கற்பிற்கும் விதமே என்னை அந்த subject-க்குள் கொண்டு செல்லும். எதைப் படிக்க வேண்டும் என்று மட்டும் சொல்லித்தரவில்லை, எப்படி கற்க வேண்டும் என்ற சூத்திரத்தையும் மனதில் பதியச் செய்தார்கள். படிப்பதற்கும் கற்பதற்கும் உள்ள நூலளவு வித்யாசம் அறிந்தது என்னுடைய கல்லூரியில்தான்.

உலகத்தில் எந்த மூளைக்குச் சென்றாலும், எந்த மனிதர்களிடையே வாழ நேர்ந்தாலும் என் தன்னம்பிக்கை சிறிதும் குறையாதவாறும், கற்ற கல்வி என்றும் மனதிலேயே பதியுமாறும் கற்றுக்கொடுத்தார்கள்.

Representational Image
Representational Image

மகளிர் கல்லூரியில் என்ன ஆட்டம் இருக்கப்போகிறது என்று கண்டிப்பாக நினைக்கத்தோன்றும். உண்மையில் பையன்கள் கூட இவ்வளவு ஆட்டம் போட்டிருக்க மாட்டார்கள். அவ்வளவு ஆட்டம்!

என் பிறந்தநாள் அன்று, எனக்கு இன்ப அதிர்ச்சி தருவதாக எண்ணி, எங்கள் வகுப்பு தோழிகள் அனைவரும் சேர்ந்து கணினி ஆய்வகத்துக்குள்ளயே, அங்கிருந்த கணினிகளுக்கிடையே கேக் வெட்ட, கேக்கின் மேல் மெழுகுவத்தியெல்லாம் ஏற்றினார்கள். ஒருபுறம் இன்ப அதிர்ச்சியோடு நான் ஆய்வகத்துக்குள் நுழைந்தேன் இன்னொரு கதவுவழி எங்க மேடம் நுழைந்தார்கள்.

"மொத்த கிளாஸ்சும் கெட் அவுட்" மட்டும்தான் வந்தது மேடமிடமிருந்து இருந்து. இது போல் சிக்கும்போதெல்லாம் "படிக்கத்தான் இங்க வருகிறீர்கள்!" என்று ஞாபகப் படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அக்கினி நட்சத்திர வெயில் சுட்டெரிக்கும் வகையில் கொளுத்தினாலும் 100 பேர் நிற்கும் அகலத்துக்கு ஒரு மரம் படர்ந்து ஓங்கி நிக்கும் எங்களது வகுப்பின் அருகில். அந்த மரத்துநிழலும் காற்றும்தான் எங்களது ஏசி அறை.

தினம் தினம் விதவிதமாக விருந்து சாப்பிடுவது அந்த மரத்தடி நிழலில்தான். இந்த நாள்கள் பாட்லக் (Potluck) விட மிக சிறப்பானது என்றால், அது எங்களது தரைவட்ட (இந்த காலத்து வட்டமேசை) விருந்து; வட்டத்தின் நடுவில் ஆறு ஆட்கள் படுத்துக்கொள்ளலாம், அவ்வளவு பெரிய வட்டமாகஇருக்கும்.

என் தோழிகளின் அம்மா அவர்களுக்கு மட்டும் சாப்பாடு கொடுத்து விட மாட்டார்கள், எனக்கும் சேர்த்துதான் எப்பொழுதும் தருவார்கள். என் அம்மாவும் கூட. என் சாப்பாட்டு பாத்திரத்தில் முதல்வாய் நான் எடுத்து சாப்பிட்டு தோழிகளிடம் சுத்திவிட்டால், காலியான டப்பாதான் திரும்ப என் கைக்கு வரும். எனக்குமட்டுமில்ல எல்லாருடைய டப்பாவும் அவர்களுக்கு அப்படித்தான் போகும். வயிறே குழம்பிப்போகும் என்னவெல்லாம் சாப்பிட்டாள் இவள் என்று.

Representational Image
Representational Image
Vikatan Team

சோகமாகயிருந்தாலும் சந்தோஷமாகயிருந்தாலும் நாங்கள் போகும் ஒரே இடம் கேன்டீன்தான். கோன் ஐஸ்கிரீம் மட்டும்தான் எல்லாருடைய விருப்பமான விசயம் கேன்டீன்ல. கேன்டீன் அக்கா என்னைப்பார்த்தால் மட்டும் கோன் கீழ்வழியாக பிய்த்துக்கொண்டுவரும் அளவுக்கு க்ரீம் வைத்துத்தருவார்கள். அந்த கிரீம் நாக்கில்பட்டதும் தனிருசியும் குளிர்ச்சியும் இருக்கும், தொண்டைவழியா குளிர்வண்டி சில்லென்று உடலுக்குள் போவதுபோல் இருக்கும்.

அனைவரும் சேர்ந்துதான் செல்வோம் கேன்டீன்க்கு. ஆனால், வருகையில் வேறு தோழிகள் எதிரில் பார்த்து என்னை மீண்டும் அவர்களோடு அழைத்துச் செல்வார்கள். இப்பொதானே ஐஸ் கிரீம் சாப்பிட்டோம் என்றக்கூச்சம் சிறிதும் இல்லாமல் மீண்டும் அதே கோன் ஐஸ் கிரீம்தான் வாங்குவேன். எத்தனை முறை சாப்பிட்டாலும் திகட்டாதது; எத்தனைமுறை நினைத்தாலும்கூட.

இரண்டாம் மேசையில் நான் இருப்பேன் முதல் வரிசையில் இருக்கும் தோழிகளின் சடைகளை, மேடம் கண்ணில் படாதவாறு அவிழ்த்துவிடுவேன். பின்னால் திரும்பினால் எல்லாரும் சிக்குவோம். அதனால், திரும்பவும் மாட்டார்கள், திரும்பி என்னைத் திட்டவும் முடியாது. அதில் ஒரு சந்தோஷம். வகுப்பு முடிந்து மேடம் வெளியே சென்றதுதான் சரி, சரமாரியாக திட்டுவிழும் அடியும்விழும். சிரித்துக்கொண்டே வாங்கிக்கொள்வேன் ஏனெனில் அதில் முழுஅன்புமட்டும்தான் இருக்கும். கல்லூரி பஸ் ஏற வரிசையில் நிற்பதும், நான் மட்டும் நடுவில் புகுவதும், அவ்வப்போது எங்கள் ஜூனியர் பிள்ளைகளின் வகுப்புக்குள் போய் அவர்களிடம் அன்பான கண்டிப்புகள் வைப்பதும், பொங்கல் திருவிழா, ஒரேமாதிரியான வண்ணத்தில் புடவைகள், கல்லூரி நாள் கொண்டாட்டங்கள் எனப் பல நினைவுகள் என் மனதையும் இதழையும் சிரிக்க வைக்கிறது.

Representational Image
Representational Image
Vikatan Team

புத்தக நகல் எடுக்கும் கடையில் வேலை (xerox), மாலையில் கம்ப்யூட்டர் கல்வி இன்ஸ்டிடியூட்டில் வேலை எனப் பல செய்துதான் என்னுடைய கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்தது. மூன்று ஆண்டுக்கல்விக்கு மொத்தமாக 30,000 செலவாயிருக்கும். (ஆனால், இன்றைய சூழ்நிலையில் முதல் வகுப்பின் இரண்டு தவணையே 40,000-த்தை தாண்டிவிட்டது). என் அன்புத்தோழிகள் என்னுடன் என்றும் துணைநின்றனர் இன்றுகூட!

`இயற்கை தந்த லாக்டெளன் அது!’ - ஜவ்வாது மலைவாசியின் மழை நாள் அனுபவம் #MyVikatan

வேலைவாய்ப்பு பெற எப்படித் தயார் செய்ய வேண்டும் என்று ரெங்கசாமி அவர்கள் எங்களுக்குள் இருந்த தாழ்வுமனப்பான்மையைப் போக்கினார். சரியான வழிகாட்டியும் நமக்கு தேவை, அதற்கு ரெங்கசாமி அவர்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பலர் தேர்ச்சிப்பெற்றோம், சிலர் மேல்படிப்பு, சிலருக்கு தேர்ச்சிபெற்றும் அழைப்புவரவில்லை. கடலில் கிடந்த சிப்பியாக இருந்த நாங்கள் எங்களுக்குள் இருக்கும் முத்தை வெளியே கொண்டு வரத் தொடங்கினோம். ஒவ்வொரு முத்தும் ஒவ்வொரு தனித்துவ அழகு. கஷ்டப்பட்டு கிடைத்த அந்த வேலை, என் வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு என்னை கொண்டுசென்றது.

Representational Image
Representational Image

வந்த வழியும் அனுபவித்த வலியும் என்றும் நினைவிலேயே இருக்கும். என்னைப்போல் கஷ்டப்பட்டவர்க்கு முடிந்தவரை புத்தக உதவியோ, கல்வி கட்டண உதவியோ செய்து தேவையில் இருப்போர்க்கு உதவ உந்துகிறேன்.

நானும் என்னால் முடிந்தவரை செய்கிறேன். உதவியாக எண்ணி அல்ல என் கடைமையாக எண்ணி! செய்ததைப் பகிர்வது, விளம்பரத்துக்காக இல்லை பலருக்கு எடுத்துக்காட்டாக இருப்பதற்கு.

நாம் வளர்ந்தால் மட்டும் போதாது; நம்மைச் சார்ந்தவர்களும் நம்மோடு சேர்ந்து வளர வேண்டும். என் தோழிகள் மாதிரி எல்லாருக்கும் கிடைத்தால், எந்தச் சூழ்நிலையிலும் வாழ்க்கை சிறப்பா போகும்.

- ஸ்ரீ காமாட்சி பாலமுருகன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு