மெஸ்ஸியர் 31 என்றும் அழைக்கப்படும் ஆண்ட்ரோமெடா (Andromeda) விண்மீன் திரள் (Galaxy) நமது பால்வெளி மண்டலத்திற்கு அருகில் உள்ள விண்மீன் திரள் ஆகும். மேலும், பூமியிலிருந்து வெறும் கண்ணால் பார்க்க கூடிய சில விண்மீன் திரள்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால், புவியின் மேல் உள்ள அனைவரும் அதை ஒரே நேரத்தில் காண இயலாது, வடக்கு அரைக்கோளத்தில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் ஆண்ட்ரோமெடாவை நாம் காணலாம். ஆனால், தெற்கு அரைக்கோளத்தில், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் தான் நாம் பார்க்கலாம்.

ஆண்ட்ரோமெடா விண்மீன் திரள் பூமியிலிருந்து சுமார் 2.2 மில்லியன் (22 லட்சம்) ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது பூமியிலிருந்து 1.98X10^7 டிரில்லியன் கிமீ தொலைவில் உள்ளது. அதாவது, ஆண்ட்ரோமெடாவிலிருந்து செலுத்தப்படும் ஒளியானது பூமியை அடைய 22 லட்சம் ஆண்டுகள் ஆகும். இதில், தூரத்தைப் பற்றி வியக்க வேண்டாம், பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களின் தூரத்தை, பூமியின் மேல் உள்ள தூரத்துடன் ஒப்பிடும் போது, அது பூமியில் உள்ள ஒன்று , இரண்டு மீட்டர்களை போன்றதாகும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவானியல் செய்திகளைப் பின்பற்றும் பலர் ஆண்ட்ரோமெடா நமது பால்வெளி மண்டலத்துடன் மோதும் என்ற செய்தியை கேள்விப்பட்டிருப்பார்கள். இது உண்மையா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அது கூட நடக்குமா? இது முடியுமா? பல கேள்விகள் உங்கள் எண்ணங்களை அலைக்கழித்திருக்கும். சரி, அந்தக் கேள்விகளுக்கெல்லாம் எளிய பதில் ஆம். ஆனால் காத்திருங்கள், இது விரைவில் நடக்காது. இது நடக்க பல பில்லியன் ஆண்டுகள் ஆகும், அதுவரை நம் பூமியும் இந்த பால்வெளி மண்டலத்தில் இருக்க வாய்ப்பில்லாமல் கூட இருக்கலாம். உண்மையில் பூமியே அழிந்து போயிருக்கலாம்.

டிசம்பர் 1912 இல், வெஸ்டோ மெல்வின் ஸ்லிபர் என்ற வானியல் அராய்ச்சியாளர் , ஆண்ட்ரோமெடா நெபுலாவின் நிறமாலைகளைப் ஆராயத் தொடங்கினார். அதன் பிறகு ,01 ஜனவரி 1913 அன்று, தீவிரமான ஆராய்ச்சிக்குப் பிறகு, இந்த நெபுலாவின் வேகம் அதிகமாக இருப்பதாக அவர் உணர்ந்தார். அதன் பின் , பிப்ரவரி 1913 இல், ஆண்ட்ரோமெடா நெபுலா பூமியை நோக்கி 300 கிமீ/நொடியில் நகர்வதைக் கண்டறிந்தார். மேலும், அவர் தனது ஆராய்ச்சியை 1914 ஆண்டு நடுப்பகுதி வரை தொடர்ந்தார். இறுதியாக , அவரது கோட்பாட்டின் அடிப்படையில், ஆண்ட்ரோமெடா நமது பால்வெளி மண்டலத்துடன் மோதுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று அவர் முடிவு செய்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா, ஆண்ட்ரோமெடா பால்வெளி மண்டலத்துடன் மோதுவதற்கு ஏழு பில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டு இருக்கிறது. மேலும், இப்போது இருந்து ,நான்கு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, ஆண்ட்ரோமெடா, பால்வெளி மண்டலத்திற்கு அருகில் வந்திருக்கும். அதன் பிறகு, மோதல் நடக்க மேலும் இரண்டு பில்லியன் ஆண்டுகள் ஆகும். எனவே, சுமார் ஏழு பில்லியன் ஆண்டுகளில் முழு மோதலும் நடந்திருக்கும். அந்த மோதலுக்கு பிறகு , ஆண்ட்ரோமெடா மற்றும் பால்வெளி மண்டலம் இரண்டும் ஒரு பெரிய நீள்வட்ட ஒற்றை விண்மீன் திரளாக(single galaxy) உருவாகும்.

ஈர்ப்புவிசை காரணமாக, விண்மீன் திரள்கள் ஒன்றுக்கொன்று ஈர்க்கும். எனவே, பால்வெளி மற்றும் ஆண்ட்ரோமெடா விண்மீன் திரள்கள் அவற்றின் பரஸ்பர ஈர்ப்பு விசையால் ஒன்றாக இழுக்கப்படுகின்றன. மேலும், இது மணிக்கு 4,02,000 கிமீ வேகத்தில் ஒன்றுக்கொன்று வேகமாக நகர்கிறது. இந்த வேகத்தில், பூமியை அதன் பூமத்திய ரேகையில் நாம் ஒரு மணி நேரத்திற்கு பத்து முறை கடக்க முடியும் என்றால் ஆண்ட்ரோமெடா நமது பால்வெளி மண்டலத்தை நோக்கி எவ்வளவு வேகமாக நகர்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள். உண்மையில், இந்த வேகத்தில் கூட, அடுத்த நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு ஆண்ட்ரோமெடா நம்மை அடையாது.
இந்த இரண்டு விண்மீன் திரள்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகையில், அவை ஒன்றையொன்று அழிக்காது. மாறாக, இந்த விண்மீன் திரள்களில் உள்ள நட்சத்திரங்கள் அல்லது சூரிய குடும்பங்கள் ஒன்றுக்கொன்று இடமளிக்கலாம். ஏனென்றால், இந்த விண்மீன் திரள்களில் உள்ள நட்சத்திரங்களுக்கிடையேயான அதிக தொலைவு காரணமாக, அது ஒன்றுக்கொன்று கடந்து செல்ல முடியும். அதாவது , மோதல் நேரத்தில், இரண்டு விண்மீன் திரள்களிலும் உள்ள நட்சத்திரங்கள் இடம்பெயர்ந்து புதிய விண்மீன் திரளை உருவாக்கும். பால்வெளி மண்டலத்தில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரங்களும், ஆண்ட்ரோமெடாவில் ஒரு டிரில்லியன் நட்சத்திரங்களும் உள்ளன.

இவ்வாறு, இந்த விண்மீன் திரள்கள் மோதலுக்குப் பிறகு , இரண்டு விண்மீன் திரள்களின் விண்மீன்கள் சேர்ந்து கோடிக்கணக்கான நட்சத்திரங்களை கொண்ட ஒரு பெரிய விண்மீன் திரளாக உருவாகும். இதன் விளைவாக, விண்மீனின் அளவு அதிகரிக்கும். புதிதாக உருவாகியுள்ள இந்த விண்மீன் திரளின் வானம், பூமியிலிருந்து காணும் போது முழு நிலவின் இரண்டு முதல் மூன்று மடங்கு பிரகாசத்தைக் கொண்டிருக்கும். மேலும், வானம் முன்பை விட பிரகாசமாக மாறும். ஆனால், இந்த வானியல் நிகழ்வை காண நாம் இருப்போமா என்பது மிகப்பெரிய கேள்வி?
-க.சேதுராமன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.