Published:Updated:

பிள்ளையாரும் பிடிக்கொழுக்கட்டையும்! - வாசகியின் காமெடி துணுக்கு #MyVikatan

Representational Image ( Pixabay )

மருமகள் ராணி விநாயகரை அலங்காரம் செய்தபின் சுவரில் ஹாப்பி பெர்த்டே அஞ்சு என்று ஒரு சுவரொட்டியை ஒட்டினாள்...

பிள்ளையாரும் பிடிக்கொழுக்கட்டையும்! - வாசகியின் காமெடி துணுக்கு #MyVikatan

மருமகள் ராணி விநாயகரை அலங்காரம் செய்தபின் சுவரில் ஹாப்பி பெர்த்டே அஞ்சு என்று ஒரு சுவரொட்டியை ஒட்டினாள்...

Published:Updated:
Representational Image ( Pixabay )

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

அன்று விநாயகர் சதுர்த்தி. பாட்டி வள்ளியம்மை சுறுசுறுப்பாக பூஜைக்கு வேண்டிய கொழுக்கட்டை, வடை எல்லாம் செய்து கொண்டிருந்தார்.

மருமகள் ராணி விநாயகரை அலங்காரம் செய்தபின் சுவரில் ஹாப்பி பெர்த்டே அஞ்சு என்று ஒரு சுவரொட்டியை ஒட்டினாள். அன்று பாட்டியின் மூன்று வயது செல்லக்குட்டி பேத்தி அஞ்சனாவின் பிறந்தநாளுமாகும்.

ராணி : அம்மா அடுக்களையில் உங்கள் வேலை முடிந்ததா? நான் அஞ்சுக்கு கேக் பேக் பண்ணணும்...

Representational Image
Representational Image
Vikatan Team

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"ஆச்சு" என்று சொல்லிக்கொண்டே செய்ததை எல்லாம் விநாயகருக்கு முன் வைத்து தன் கணவர், மகன், மருமகள், பேத்தி அஞ்சனா அனைவரையும் பூஜைக்கு அழைத்தார். பூஜை சிறப்பாக முடிந்தது.

அஞ்சனா : இதெல்லாம் என்ன பாட்டி?

பாட்டி : இன்னைக்கு பிள்ளையாருக்கும் பர்த்டே ஆச்சே. மூத்த கடவுள் இல்லையா... அதனால இது பிள்ளையாருக்கு பூர்ண கொழுக்கட்டை, பிடிக்கொழுக்கட்டை அப்புறம் வடை.

ராணி : கேக் தயார். அஞ்சுமா கேக்கை வெட்ட வாம்மா.

எழுந்து வராமல் வருத்தமாக அமர்ந்திருந்தாள் அஞ்சனா. அனைவரும் ஏன் என்ன ஆச்சு என்று வினவினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அஞ்சனா : பாட்டி நான் உன்கூட டூ!

பாட்டி : நான் என்ன செய்தேன் கண்ணா? ஏன் என் கூட அஞ்சுமா டூ விட்றா?

அஞ்சனா : பி ஃபார் பிள்ளையார் ரைட்டா?

பாட்டி : சரிதான்.

அஞ்சனா : அ ஃபார் அஞ்சனா ரைட்டா?

பாட்டி : ரைட்டுதான்.

Representational Image
Representational Image
Vikatan Team

அஞ்சனா : பிள்ளையாருக்கு பூர்ணக்கொழுக்கட்டையும் பிடிக்கொழுக்கட்டையும், வடையும் செய்திருக்க பாட்டி அப்போ எனக்கு மட்டும் ஏன் கேக்?

பாட்டி : என் அஞ்சனா குட்டிக்கு வேற என்ன வேணும் சொல்லு உடனே செய்து தரேன்.

அஞ்சனா : எனக்கு ஆறின கொழுக்கட்டை யும், அடி கொழுக்கட்டையும் அன்ட்... அன்ட் அடையும் வேணும்.

அனைவரும் சிரித்தார்கள். பாட்டிக்கும் சிரிப்பு அடக்கமுடியலை. ஆனாலும் அடுக்களைக்குள் சென்று தட்டு ஒன்றில் ஆறிப்போன பூரணக்கொழுக்கட்டையும், பிடிக்கொழுக்கட்டையை இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியையும், வடையை நன்றாக கைகளினால் நசுக்கி அடைபோல செய்து எடுத்து வந்து...

பாட்டி : அ ஃபார் அஞ்சனா குட்டிக்கு பாட்டி செய்த ஆறின கொழுக்கட்டை, அடி கொழுக்கட்டை அன்ட் அடை தயார் ஆ காமி...

அஞ்சனா : சூப்பர் பாட்டி.

என்றபடியே உண்டு முடித்தபின் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்கள்.

பிள்ளைகள் எப்போது எதைக் கேட்பார்கள் என்பது எவராலும் கணிக்க முடியாத ஒன்றாகும். ஆனால், அதை அழகாகக் குழந்தை மனம் கோணாமல் லாவகமாகக் கையாண்டு சபாஷ் வாங்குவதில் பாட்டிகளை மிஞ்ச யாரும் இல்லை.

- பார்வதி நாராயணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/