Published:Updated:

கிளீன் இந்தியா கிளீன்! #MyVikatan

Representational Image
Representational Image

மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்துவிட்டு செல்லும் வெளிநாட்டவர்கள் சொல்லும் முதல் புகார் ' இந்தியாவில் எங்கே பார்த்தாலும் குப்பைகள் கொட்டி கிடக்கின்றன' என்பதுதான்.

இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள். தூய்மையான இந்தியா என்பது காந்தியின் கனவுகளில் ஒன்று. சுதந்திரத்திற்கு பின்பு இத்தனை ஆண்டுகளில் நாம் பொறுப்புடன் செயல்பட்டு, இந்தியாவை முழுமையாக தூய்மையானதாக மாற்றி விட்டோமா என்றால் இல்லை என்பதே கசப்பான உண்மை.

Representational Image
Representational Image

மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்துவிட்டு செல்லும் வெளிநாட்டவர்கள் சொல்லும் முதல் புகார் ' இந்தியாவில் எங்கே பார்த்தாலும் குப்பைகள் கொட்டி கிடக்கின்றன' என்பதுதான். இதைப் புரிந்துகொண்டதால்தான் நமது நாட்டின் பிரதமர்கூட தெருவில் இறங்கி சுத்தம் செய்தார். மற்ற பிரபலங்களையும் சுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள அழைத்தார். அந்தத் திட்டத்தை எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம் நாம்?

இங்கே என்னதான் பிரபலங்களை அழைத்து வந்து தெருவில் இறக்கி குப்பைகளைப் பெருக்க வைத்தாலும், ஒரு பக்கம் சுத்தம் செய்யச் செய்ய மற்ற மூன்று பக்கங்களில் நாம் குப்பைகளைக் கொட்டிக் கொண்டேதான் இருக்கிறோம்.

அரசு, ஊழியர்களையும் குப்பைகளை அள்ளும் கருவிகளையும் கொண்டு குப்பைகளைச் சேகரிக்க சாலையோரங்களில் குப்பைத்தொட்டிகளை வைத்தாலும், நாம் அவற்றைச் சுற்றிலும் குப்பைகளைக் கொட்டுகிறோமே தவிர குப்பைத்தொட்டிகளில் குப்பைகளைப் போடுவதேயில்லை.

Representational Image
Representational Image

குப்பைகளை அதற்குரிய தொட்டிகளில் போட சோம்பேறித்தனப்படும் நாம், பச்சிளம் குழந்தைகளை வீசியெரிய மட்டும் குப்பைத்தொட்டிகளைப் பயன்படுத்துகிறோம் என்பது கொடுமையிலும் கொடுமை. இந்நாட்டில் குழந்தைகளைக்கூட குப்பையாக கருதுகிறோம் என்பது பேரவலம்.

கண்ட கண்ட இடத்தில் பொறுப்பில்லாமல் குப்பைகளை வீசியெறிவதை நமது கடமையாக நினைத்து செயலபடுத்திக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. நம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்துக்கொண்டு வீட்டைச் சுற்றிலும் குப்பைகளைக் கொட்டி, குப்பை மலைகளை உருவாக்கிவிடுகிறோம். அதனால்தான் உடல் உபாதைகள் ஏற்பட்டு அடிக்கடி மருத்துவரைப் பார்க்கப் போகிறோம் என்பதை நாம் உணர்வதேயில்லை.

நமது நாட்டில் மறதி மட்டும் தேசிய வியாதி இல்லை, குப்பைகளை கையாளும் பொறுப்பில்லாமல் இருப்பதும் அதைச் செய்வது கௌரவக் குறைச்சலாக நினைப்பதும்தான்.

தேர்தல் வந்தால் ஓட்டு போடுகிறோமோ இல்லையோ எல்லோரும் தினமும் குப்பைகளை கண்டபடி கொட்டிக் கொண்டே தான் இருக்கிறோம். அது தவறென யாரேனும் சுட்டிக் காட்டினால் 'உன் வேலையைப் பார்' என அவர்களின் வாயையும் அடைத்துவிடுகிறோம்.

தேர்தல் காலங்களில் ஓட்டுகளை அரசியல் கட்சிகளுக்கு விற்றுவிடுவதால், குப்பைகளை நிர்வகிப்பது சம்பந்தமான கோரிக்கைகள் எல்லாம் காணாமல் போய்விடுகின்றன.

மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளைத் தரம் பிரிப்பது பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை அரசு செய்துகொண்டுதான் இருக்கிறது. நம்மில் எத்தனை பேர் அது குறித்து தெளிவாக அறிந்துகொண்டு செயல்படுகிறோம் என்பது முக்கியமான கேள்வி.

Representational Image
Representational Image

குப்பை என்பது அலட்சியப்படுத்தக் தக்க விஷயம் அல்ல. ஏனெனில் இது நம் நாட்டைப் பற்றிய அபிப்ராயத்தை நிர்ணயிக்கும் ஒரு காரணி என்பதுதான் நடைமுறை உண்மை.சிலரின் பொறுப்பின்மையால் மாநிலங்களின், நகரங்களின் எல்லை தாண்டிக் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் உடல் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பதை அவர்கள் உணர்வதேயில்லை.மின்சாதனப் பயன்பாடு அதிகரித்த நவீன வாழ்க்கையில், பயன்படுத்தி தூக்கியெறியப்பட்ட மின்சாதனக் கழிவுகள் தீப்பிடித்து எரிவதால் உண்டாகும் சுற்றுச்சூழல் கேடு பற்றி நமக்கு என்ன புரிதல் இருக்கிறது என்பது முக்கியமான கேள்வி.

Representational Image
Representational Image

குப்பைகளை சரியாக கையாளத் தவறினாலும், சரியாக நடப்பவர்களை கிண்டல் செய்ய மட்டும் நாம் தவறுவதேயில்லை. இப்படி செய்வதன் மூலம் நாமும் கெட்டு நாட்டையும் கெடுக்கிறோம்.

'குப்பைகளை ஒழிப்போம்' என துண்டுப் பிரசுரங்கள் மூலம் பிரசாரம் செய்தாலும், அதைப் படிக்காமலேயே குப்பையாக மாற்றிவிடும் அவலமும் நமது நாட்டில் நடக்கிறது.

பிளாஸ்டிக் ஒழிப்பை அரசு முன்னெடுத்தாலும் சுற்றுச்சூழல் மீதான நமது அக்கறையும் ஒத்துழைப்பும் அதற்கு மிக அவசியம் என்பதே உண்மை.

என்னதான் அரசுகள் தொலைநோக்கு திட்டங்கள் தீட்டினாலும், செயல்படுத்த முனைந்தாலும் நமது அலட்சியமும் சோம்பேறித்தனமும்தான் நமக்கு எதிரி. திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் 'திருட்டை ஒழிக்க முடியாது' என்பது இந்த குப்பை விஷயத்துக்கும் பொருந்தும்.

- ருத்ரன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு