Published:Updated:

“சரிகை தர உத்தரவாத அட்டை" - கோ-ஆப்டெக்ஸின் புதிய முன்னெடுப்பு!

காஞ்சிபுரம் பட்டு சேலையின் சரிகையில் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் இதன் தூய்மை பரிசோதிக்கப்பட்டு தர அளவீடு உறுதி செய்யப்படுகிறது

இந்தியாவின் முதன்முதலாக கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காஞ்சிபுரம் பட்டு சேலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள சரிகையில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியின் அளவு அரசு நிர்ணயித்துள்ள தர அளவீடுகளின்படி ஊள்ளதா என்பதை வாடிக்கையாளர்கள் அறியும் பொருட்டும், அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் விதத்திலும் சுத்தப்பட்டு சேலைகளில் புதிதாக “சரிகை தர உத்தரவாத அட்டை” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு காஞ்சிபுரம் பட்டு சேலையின் சரிகையில் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் இதன் தூய்மை பரிசோதிக்கப்பட்டு தர அளவீடு உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் சேலையில் சரிகை தர உத்தரவாத அட்டையை இணைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சரிகை தர உத்தரவாத அட்டை
சரிகை தர உத்தரவாத அட்டை
கோ-ஆப்டெக்ஸில் இந்த தர உத்தரவாத அட்டையை காஞ்சிபுரம் பட்டு சேலையில் இணைப்பதன் மூலமாகவும், புதிய 100 வடிவமைப்புகள் தீபாவளிக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாலும் வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பை பெற்று கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் சேலை ரகங்கள் அதிக அளவில் இந்த தீபாவளிக்கு விற்பனை நடைபெற்று வருகின்றது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு