பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
பெரும்பாலும் பிரபலங்களின் லைஃப் ஸ்டைலைதான் தெரிந்துக் கொள்ள நாம் ஆர்வம் காட்டுகிறோம். ஒரு கிராமத்தில் வாழும் எளிமையான கூலித் தொழிலாளிகளின் வாழ்வியலை இங்கே எழுதியிருக்கிறேன்... வாசியுங்கள்..
1. கூலித் தொழிலாளிகளுக்கு மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னைகள் வரும்... அவர்களின் கவனத்தை மீறியும் கீழே விழுந்து அவர்கள் கட்டுப் போடாத நாட்கள் குறைவு. அவர்கள் வீட்டில் எக்ஸ்ரேக்கள் குவிந்துக் கிடக்கும்.
2. அவர்களின் வீடுகளில் காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி தைல டப்பாக்கள் ஆங்காங்கே பாதி தீர்ந்து பாதி தீராமலும் ஆங்காங்கே கிடக்கும். தைல டப்பாக்கள் தான் பெரும்பாலான நேரங்கள் அவர்களுக்கு மருத்துவச் செலவை குறைத்து வைக்கிறது.

3. வட்டி கடைக்காரனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்தாலும் நம்பிக்கையை இழக்காமல் சந்தோசத்துடன் இருப்பார்கள். கன்னங்கள் ஒடுக்கு விழுந்து இருக்கும். இப்போதைய சினிமாக்கள் போன்றவற்றை பார்க்க மனமின்றி செய்திகளை மட்டும் பார்த்துவிட்டு இரவில் நேரமாக உறங்கி அதிகாலையில் நேரமாக எழுந்து வேலைக்கு ஓடுபவர்களாக இருப்பார்கள்.
4. ஆண் பெண் இருவரின் பாதங்கள் வெடிப்பு விழுந்தும் கைகள் மரத்துப் போயும் காணப்படும். தேங்கெண்ணை என்று ஒன்று இல்லாவிட்டால் வெயிலில் உழைக்கும் அவர்களின் உடல் முழுவதும் வெடிப்பு விழுந்து காணப்பட்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.
5. அவர்கள் வீட்டில் ஒரு ஓரத்தில் வயதான டிவிஎஸ் மற்றும் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அவை பெரும்பாலான நேரங்கள் செலவு வைக்க கூடியதாக இருந்தாலும் ஆசையாக வாங்கிய அவற்றை பிரிய மனமின்றி அதை வைத்தே சமாளித்தபடி காலம் கழிப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS6. மகனுக்காக அல்லது மகளுக்காக எந்த துன்பங்களும் நேராமல் இருக்க அவர்களுக்கு எல்லா பாக்யங்களும் கிடைத்திட கடவுளிடம் எதாவதொரு வேண்டுதல் வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். வாரத்தில் சில நாட்கள் விரதம் இருப்பது போன்று ஏதாவதொரு பக்திமயமான காரியங்களில் ஈடுபடுவர்.
7. எவ்வளவு தான் உடல் வலியாக இருந்தாலும் வேலைக்கு மட்டும் செல்லாமல் இருக்கமாட்டார்கள். மனதிற்குள்ளேயே கடவுளை வேண்டிக் கொண்டு வேலைக்கு ஓடிவிடுவார்கள். சும்மா மட்டும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களின் தலையிலும் தோளிலும் எந்நேரமும் துண்டு ஒன்று வியர்வையை துடைப்பதற்காக இருக்கும்.
8. 45 வயதை தாண்டிய பெற்றோர்கள் தீபாவளி, பிறந்தநாளுக்கு எல்லாம் புதுத்துணி எடுக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. இருப்பது நான்கு துணி ஆயினும் அதை சுத்தமாக்கி பயன்படுத்த தெரிந்தவர்கள். ஆண், பெண் வித்தியாசமின்றி ஆற்றிலோ வாய்க்காலிலோ துணி துவைத்து குளித்துவிட்டு வருவார்கள்.

9. ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவுக்காக கடைக்குச் சென்று கடை கோழிக்கறி எடுத்து வராமல் வீட்டுலேயே வளர்க்கும் நாட்டுக்கோழியை அடித்து சாப்பிடுவார்கள். கடையிலும் கூட நாட்டுக்கோழி உணவை கேட்டு வாங்கி வருவார்கள்.
10. 2021லும் கீபேட் மொபைல் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள். தேவைப்படுபவரின் தெரிந்தவரின் போன் நம்பர்களை தமிழில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். ரிங்டோன் கண்டிப்பாக எதாவதொரு சாமி பாடலாக இருக்கும்.
11. வீட்டுக்கு ஒரு மரம் கண்டிப்பாக வளர்த்து வைத்திருப்பார்கள். அழகான கிராமம் என்றால் கண்டிப்பாக அங்கு பூவரச மரம், ஆலமரம், வேப்ப மரம் காணப்படும். அதன் நிழலில் அமர்ந்து கதைப் பேசுவதை பொழுதுபோக்காக வைத்திருப்பார்கள்.
12. ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற உயிரினங்களை குடும்ப உறுப்பினர்களை போல பாதுகாப்பார்கள். அவர்கள் ஆட்டுக்கால் சூப், மீன் முட்டை பொறியல் போன்றவற்றை அருமையாக செய்ய தெரிந்து வைத்திருப்பார்கள்.
13. மயில்களின் இன்னிசை நிறைந்து காணப்படும் அதே கிராமத்தில் பாம்புகளும் நிறைந்து காணப்படும். கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகளான குட்டி சிறுவர் சிறுமிகள் கூட பாம்புகளை இனம் அறிந்து அதை விரட்டி அடிக்கும் அல்லது கொல்லும் வித்தை தெரிந்தவர்களாக இருப்பார்கள்.
இப்படிப்பட்ட எளிய மக்கள் வாழும் கிராமங்களுக்கு பொங்கலுக்கு மட்டும் செல்பவராக இல்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போய் வாருங்கள். வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்பது நன்கு புரிய ஆரம்பிக்கும்.
- ராசு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.