Published:Updated:

அப்பாவின் கண்கள்ல நான் பார்த்த மரியாதை..! - பெண்ணின் குற்ற உணர்வும் அரசு வேலை கனவும் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

"அப்பா.. பேங்க் வேலைக்கு நான் போறது தான் எனக்கு சந்தோசம்.. அவன் சம்பாரிச்சிக் கொண்டு வர காசுல எனக்கு சந்தோசம் இல்லை.. இன்னும் ரெண்டு வருஷம் கல்யாணத்தப் பத்திப் பேசாதீங்க.. அதுக்குள்ள வேலைக்கு போய்டுவேன் ப்ளீஸ்"

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"1,000 ரூபா பணம் எடுக்கணும் மா" வங்கியில் பணம் எடுக்கும் இடத்தில் உள்ள பெண்ணிடம் அப்பா கேட்டார்.

அப்பாவை விட மிக இளமையான பெண். ஆனால் அப்பா மரியாதை ஆக பேசினார்.

அன்று மட்டும் இல்லை. பெரும்பாலும் வங்கியில் தன்னை விட இளையவர்களையும் அப்பா மரியாதையாகத் தான் அழைப்பார்.

அந்த கண்களில் அன்று குடியிருந்த மரியாதை என்னுள் பதிந்து போனது.

Representational Image
Representational Image

பட்டம் பெற்றேன். எதிர்காலம் அடுத்து என்ன என்ற கேள்வியை கேட்டு என்னை பயமுறுத்தியது.

"அரசு தேர்வுகள் எழுது நல்ல வாழ்க்கை உண்டு" சித்தி அறிவுறுத்தினார்.

அப்பொழுதுதான் சின்ன வயதில் எனக்குள் பதிந்து போன ஆசை மேல் எழுந்தது. வங்கியில் வேலை வாங்க வேண்டும் என்பதை அடுத்த லட்சியமாக வைத்தேன்.

போட்டித் தேர்வுகளைப் பற்றி ஆராய்ந்தேன்.

வங்கித் தேர்வின் பாடங்கள் என்னைக் கவர்ந்தது.

கேள்விகள் கேட்கப்படும் பகுதியாக தருக்க பகுத்தறிவு, கணக்கு சூட்சமம், ஆங்கிலம் மற்றும் பொது அறிவு கேள்விகள் இருந்தன.

மனதுக்குள் ஆனந்தம் பொங்கியது.

பிடித்த பாடங்கள் மற்றொரு காரணம் அப்பாவின் கண்களில் அன்று நான் பார்த்த மரியாதை.

மக்களோடு தொடர்புடைய வேலை என்பதில் இன்னொரு சந்தோசம்.

தேர்வுகளைச் சந்திக்க ஆரம்பித்தேன்.

பிடித்த பாடம் என்றாலும் தெரிந்த பாடம் என்றாலும் தேர்ந்த பயிற்சி மற்றும் போதிய நேரம் அதற்காக செலவிட்டு மேலும் கற்க வேண்டும்.

பயிற்சி கூடத்தில் வெகு நேரம் படிக்கலாம் சில யுக்திகள் கற்றுக்கொள்ளலாம். அதனால் பயிற்சி கூடம் சேர்ந்தேன்.

ஆரம்பித்தில் முதல் நிலை தேர்வைக்கூட தாண்ட வில்லை.

கற்றுக்கொண்ட யுக்தியை விட தாமாக முயற்சி செய்து பின் யூகித்து கற்கும் யுக்தி சாலச் சிறந்தது என்பதை அறிய ஆரம்பித்தேன்.

Representational Image
Representational Image
Pixabay

கல்லூரி காலத்து விளையாட்டுத் தனம் மீதம் இருந்ததது.. அதை துறந்தேன். முழு மூச்சோடு இறங்கினேன் போட்டித் தேர்வு என்னும் நீருக்குள்.

அடுத்து வந்த ஸ்டேட் பேங்க் வங்கியின் புகுமுக தேர்வில் வெற்றி கண்டேன்.

அடுத்து முதனிலை தேர்வு, பொது அறிவு கேள்விகளை முதல் முறையாக எதிர் கொள்ள சிரமமாக இருந்தது. தோல்வி எஞ்சியது.

அடுத்த தினம் முதல் பொது அறிவு கேள்விகளை ஆழமாக படிக்க ஆரம்பித்தேன். தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற அவா பெருக்கெடுத்தது.

"பேங்க் வேலைல இருக்க மாப்பிள்ளை வந்துருக்கு.. பேசலாமா" என்றார் அப்பா.

"அப்பா.. பேங்க் வேலைக்கு நான் போறதுதான் எனக்கு சந்தோசம்.. அவன் சம்பாரிச்சிக் கொண்டு வர காசுல எனக்கு சந்தோசம் இல்லை.. இன்னும் ரெண்டு வருஷம் கல்யாணத்தப் பத்திப் பேசாதீங்க.. அதுக்குள்ள வேலைக்கு போய்டுவேன் ப்ளீஸ்"

ஒரு வழியாக அப்பாவின் மனதை வென்றாயிற்று.

"உங்க பொண்ணு வேலைக்கு எங்கயும் போலையா" வீடு தேடி இதற்காகவே வருவார்கள் போல! அன்பு உறவினர்கள்..

"இல்லை படிச்சிட்டு இருக்கா" அம்மா

"என்ன படிக்கிறா? "

"பேங்க் எக்ஸாம் எழுதற"

"அதெல்லாம் கிடைக்குமா.. கிடைச்சாலும் பணம் செலவாகுமே.. உங்க கிட்ட அவ்ளோ இருக்கா"

"எக்ஸாம் கிலீயர் பண்ணா போதும்.. தெரியாம பேசாதீங்க" என்னை மீறி நான் குமுற பெற்றோர்கள் என்னை முறைக்க உள்ளே சென்றேன்.

இந்த மாதிரியான குமுறல்கள் அடிக்கடி அரங்கேற ஆரம்பித்தன.

"அரசாங்க வேலை கிடைக்க அதிர்ஷ்டம் வேணும் " ஒருவர்.

"டிகிரி முடிச்சிட்டால ஏன் கல்யாணம் பண்ணாம வீட்ல வெச்சிருக்கிங்க" மற்றொருவர்.

Representational Image
Representational Image
Pixabay

"இன்னுமா கிடைக்கல எதுக்கும் ஜாதகத்தில பேங்க் வேலை இருக்கானு பாத்துக்கோங்க" மற்றொருவர்.

"இவங்கல்லாம் எங்கம்மா இருக்காங்க.. ச்ச என்ன பேசுறாங்க.. எவ்ளோ பெரிய பெரிய வேலை கலெக்டர் அது இதுனு என்னென்னமோ பன்றாங்க.. இவங்க ஏன் சாதாரண விஷயத்தை பெருசா பேசுறாங்க.. என்னை நம்புமா சீக்கரமே எனக்கு வேலை கிடைக்கும்."

அம்மா முழுதாக என் பக்கம் நின்றார்.

நாளை சென்னையில் முதனிலை தேர்வு. அதன் புது முக தேர்வில் கட் ஆஃப் விட அதிக வித்தியாசத்தில் தேர்ச்சிப் பெற்றேன். முதனிலை தேர்வுக்கும் நல் முறையில் படித்துள்ளேன். போன முறை ஏழு மதிப்பெண் வித்தியாசத்தில் வேலை பறி போனது. இந்த முறை வெற்றியை ருசி பார்ப்பேன் என்ற நம்பிக்கையோடு சென்னை புறப்பட்டேன்.

"தனியா எப்படி போவ" அம்மா.

"திருச்சி போய் போன எக்ஸாம் எழுதிட்டு பத்திரமா வரலையா.. பயப்படதமா.. நானே போய்ட்டு வந்தட்றேன்."

"சரி நீ சென்னைல இறங்கினதும் செல்வா அண்ணா வந்து எக்ஸாம்க்கு கூட்டிட்டு போவான், நல்ல எழுதிட்டு வா."

"நானும் அவன்கிட்ட பேசிட்டேன் மா.. நான் பாத்துக்கிறேன். "

பயணம் தொடங்கியது. மனம் முழுக்க தேர்வு பயம். பாடல்கள் கேட்டு மனதை ஆற்றினேன்.

தூக்கம் கண்ணை சொக்க வைத்தது. தனியாகச் செல்கிறோம் தூங்க வேண்டாம் என விழித்துக்கொண்டே வந்தேன்.

நேரம் சரியாக அதிகாலை 3.42

என்னை மீறி கண்கள் தூங்க எத்தனித்தது. தூங்கினால் தேர்வு சமயத்தில் தெளிவாக இருப்போம் சிறிது நேரம் தூங்குவோம் என்று சுற்றுமுற்றும் இருந்த பாதுகாப்பான சூழலின் அனுமதியோடு தூங்கினேன்.

திடீரென்று விழிப்பு வந்தது. கண் திறந்து பார்த்தால் நான் கொண்டு வந்திருந்த என் பையியின் அவிழ்பு திறந்து கிடந்தது. அலைபேசியை காணவில்லை.

மனம் அமைதி இழந்து பட படத்தது. என்ன செய்ய போகிறோம், எப்படி எடுத்தார்கள், வீட்டிலே தெரிந்தால் பயம் அடைவார்கள், தேர்வு எப்படி எழுத போகிறோம், இங்கு இருந்து எப்படி போவது!

வேறொருவரின் அலைபேசியில் இருந்து செல்வாவை அழைத்தேன். அவன் வந்து என்னை தேர்வு மையம் அழைத்துச் சென்றான்.

அம்மாவும் அப்பாவும் ஆறுதல் கூறி தேர்வை நல்ல முறையில் எழுதச் சொன்னார்கள்.

Representational Image
Representational Image
Pixabay

தேர்வு அறையிலும் பயம், நடுக்கம், பட படப்பு, பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள் மேல் எழுந்தன.

"நம்லால திரும்ப காசு போட்டு வாங்க கூடிய விஷயத்துக்கு எதுக்கு இப்படி அழற" என்றான் செல்வா.

"காசு விட.. என்னோட போன் காணோம்.. என் போன் ல எவ்ளோ டேட்டா போச்சி.. தனியா வர என்கிட்டே யாரோ என் பக்கத்தில வந்து திருடிற்காங்க.. அவங்களுக்குலாம் மனசாட்சி இருக்குமா! தனியா அந்தப் பொண்ணு என்ன பண்வா... எப்படி வீட்டுக்குப் போவானு எதுமே அவன உறுத்தாதா?" ஆதங்கம் அடங்கவில்லை.

அந்தத் தேர்வின் முடிவு வெளியானது. 11 மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன்.

அன்று மனதை நிலையாக வைத்து இருந்தால் வெற்றி கிட்டி இருக்குமோ.. அலைபேசியை நினைத்து வேலையைத் தவறவிட்டோமே.. மனம் பெரும் கலக்கம் அடைந்தது.

பல நாள்களாகத் தேர்வுகள் ஏதும் இன்றி வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடுகிறேன். எத்தனை அருமையான வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டு விட்டோமே என்று மனம் என்னை நொந்து கொள்கிறது.

அரசு வேலை அவ்வளவு கஷ்டம் ஒன்றும் இல்லை. அடைய கூடிய இலக்குதான்.

எங்கே தவறு நடந்தது. நாம் நாள்களை வீணடித்து விட்டோமா... கடின உழைப்பைத் தந்திருக்க வேண்டும். மனதை திடமாக வைத்து கிடைத்த நேரம் மற்றும் சுதந்திரத்தில் வென்றிக்க வேண்டும்.

லட்சியம் வைத்துக் கொள்வது பெரிதல்ல.. எத்தனை தடைகள் வந்தாலும் அதை நோக்கி மட்டும் ஓடி வென்றிருக்க வேண்டும். பிறர் மீதும் பிறவற்றின் மீதும் குற்றம் கூறிக்கொண்டு நாம் நின்று விடக் கூடாது.

வெகு நாள்களுக்குப் பிறகு நேற்று கிராமிய வங்கியின் வேலைக்கான தேர்வின் நோட்டிபிகேஷன் வந்தது.

மனதிற்குள் புத்துணர்ச்சி தோன்றியது.

வேலை வாங்காமல் என் ஓட்டத்தை நிறுத்தக் கூடாது என்று முடிவெடுத்தேன்.

வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பேன்.

- செ.ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு