Published:Updated:

Delhi: அரசுப்பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்; நேரலையில் காண பெற்றோர்களுக்கு ஏற்பாடு!

இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் கற்பித்தல் முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

Delhi: அரசுப்பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்; நேரலையில் காண பெற்றோர்களுக்கு ஏற்பாடு!

இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் கற்பித்தல் முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

Published:Updated:
தலைநகர் டெல்லியில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி 2019-ம் ஆண்டில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டத்தை அறிவித்திருந்தது.

அதன் மூலம் உணவு இடைவேளைை நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேரலையாக செல்போன் மற்றும் கணினி வழியாக காண வழிவகை செய்யப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தையும் கல்வித்துறையின் அறிவுறுத்தலின் பேரில் செயல்படுத்தப்படவிருப்பதாக பிரஸ் டிரெண்ட் ஆப் இந்தியாவிடம் நம்பதகுந்ந நபர்களால் தகவல் கிடைத்திருக்கிறது.

Representational image
Representational image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் கற்பித்தல் முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பெற்றோர்களுடன் தங்கள் உணவை காணொலியில் காண்பது அவர்களின் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் பள்ளிகளில் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுவதாவது “ பள்ளியில் நடக்கும் நேரடி சிசிடிவி வீடியோ காட்சிகள் பெற்றோர்களுக்குக் கிடைக்க தனிப்பட்ட ஐடிக்கள் மற்றும் கடவுச்சொற்களுடன் தனிப்பட்ட உள்நுழைவு சான்றுகள் வழங்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளில் இருந்து சேகரிக்கப்படும் மாணவர்களின் விவரங்கள் மற்றும் பெற்றோர்களின் தொலைபேசி எண்களை பொதுப்பணித்துறை புதுப்பித்து வைக்கும். இருப்பினும் ஒப்புதல் படிவங்களில் கையொப்பமிடும் பெற்றோர்களுக்கு மட்டுமே உள்நுழைவு (Log in) வழங்கப்படும் எனவும், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் சம்மதம் பெற்ற பிறகே , பள்ளி முதல்வர்கள் மாணவர்களின் விவரங்களை எக்செல் வடிவத்தில் தொகுத்து பொதுப்பணித்துறைக்கு சமர்ப்பிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை மென்பொருளில் பதிவேற்றி அதன் பின்னரே பெற்றோர்கள் பள்ளிகளில் நடப்பதை சிசிடிவி மூலம் பார்க்கலாம் என்று டெல்லி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.