Published:Updated:

`ஆஷிரா பை டையடம்' - புதிய சிக்னேச்சர் கலெக்‌ஷனை அறிமுகம் செய்தது டையடம்!

புடவைகள் மட்டுமின்றி, அனைத்து வகையான வண்ணங்களிலும், பேட்டர்ன்களிலும் லெஹங்காக்களின் மாபெரும் தொகுப்பு ஆஷிரா பை டையடம்-ல் இடம்பெற்றுள்ளது.

ராஜ குடும்பத்துக்கே உரிய தோற்றத்தையும், உணர்வையும் தரும் பிராண்டான டையடம், உங்களுக்கென வழங்குகிறது நேர்த்தியான ஆடைகளின் அணிவரிசையை. நவீன மொழியை சொகுசான வழிமுறையில் பேசும் டையடம்-ன் முதன்மை விற்பனையகமான நுங்கம்பாக்கம் ஸ்டோர், கண்கவர் வண்ணங்களில் கலை நுணுக்கங்களுடன் கூடிய தனித்துவமான பண்பியல்பை ஒவ்வொரு ஆடையிலும் அழகாக வெளிப்படுத்துகிறது. டையடம்-ன் தனித்துவமான முத்திரை பதித்த வாக்குறுதி இதுவே. பிறவற்றிலிருந்து மாறுபட்டு, தனக்கென உரிய தனித்துவமான ஸ்டைலில் ஈர்க்கின்ற வண்ணங்களையும், மனதை மயக்கும் ஷேடுகளையும் பிரத்யேக டிசைன்களையும் பயன்படுத்தி நவீன ஃபேஷனை நேர்த்தியாக வழங்குவதில் இந்த பிராண்டு எப்போதும் வெற்றி பெற்று வந்திருக்கிறது.

டையடம்
டையடம்

பாரம்பரியம் மற்றும் தற்காலத்திய நவீனத்துவம் என்ற இரண்டையும் நேர்த்தியாக கலந்து “ஆஷிரா பை டையடம்” என்ற தனது சிக்னேச்சர் கலெக்‌ஷனை டையடம் இப்போது அறிமுகம் செய்திருக்கிறது. நுங்கம்பாக்கம் விற்பனையகத்தில் ஒரு புதிய தளம் முழுவதுமே மகளிருக்கான புடவைகள் மற்றும் பிற ஆடைகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆறு கஜம் புடவைகளின் அற்புதமான எண்ணற்ற டிசைன்கள் உங்களை ஆனந்தத்திலு, வியப்பிலும் ஆழ்த்தும் என்பது நிச்சயம்.

காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள், துசார்ஸ் பனாரசி பட்டுப்புடவைகள், லினன்கள், காட்டன் சேலைகள், டிசைனர் புடவைகள், லினன் புடவைகள், சில்க் காட்டன் புடவைகள், பொச்சம்பள்ளி பட்டுப் புடவைகள், துசார் பட்டு, பட்டுப் பாவாடைகல், டிசைனர் சல்வார்கள், காதி காட்டன் புடவைகள், பனாரசி சேலைகள், காத்வால் பட்டு மற்று சல்வார்கள் என அனைத்தும் மகளிருக்காக பிரத்யேகமாக ஒரு அமைவிடத்தில் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

புடவைகள் மட்டுமின்றி, அனைத்து வகையான வண்ணங்களிலும், பேட்டர்ன்களிலும் லெஹங்காக்களின் மாபெரும் தொகுப்பு ஆஷிரா பை டையடம்-ல் இடம்பெற்றுள்ளது. மக்களின் மனம் கவர்ந்த இந்த ஸ்டோருக்குள் நுழைகின்ற அல்லது பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு வருகை தருகின்ற எந்தவொரு மணப்பெண்ணும், குடும்பத்தினரும் இங்கு குவிந்து கிடக்கின்ற கண்கவர் புடவைகள், டிசைனர் ஆடைகள் ஆகியவற்றின் மாபெரும் தொகுப்பிலிருந்து தங்கள் மனம் விரும்பியதை வாங்காமல், வெறும் கையோடு போகப் போவதில்லை என்பது நிச்சயம். கண்களை மட்டுமின்றி, மனதை ஈர்க்கின்ற வசீகரம் டையடம்-ன் ஆஷிரா தொகுப்பிற்கு இருக்கிறது என்பதே இதற்குக் காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டையடம் மற்றும் அதன் தனிச்சிறப்பான கலெக்‌ஷன்கள் இதுவரை நம்மை வியப்பில் ஆழ்த்தத் தவறியதே இல்லை. ‘ஆஷிரா பை டையடம்’ என்ற இந்தக் கலெக்‌ஷனும் அதிலிருந்து வேறுபடவில்லை. பளிச்சென்ற வண்ணங்களில் பார்வையைச் சுண்டி இழுக்கின்ற இந்தக் கலெக்‌ஷன், விரைவில் வரவிருக்கும் பண்டிகைகால கொண்டாட்டத்திற்குப் புத்துணர்ச்சியைத் தனது உயிரோட்டமான வண்ணங்களில் அழகான வடிவமைப்புகளின் வழியாக உங்களுக்கு வழங்குகிறது.

டையடம்
டையடம்

டையடம்-ன் உரிமையாளர் ஷைனி அஷ்வின் பேசுகையில், “நுட்பமான கலைநயத்துடன் கைவினைச் செயல்பாட்டால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடைகள், தனது பாரம்பரிய கைவினைத்திறனை நேர்த்தியாகப் பிரதிபலித்துக் கொண்டாடுகின்றன. இந்தக் கலைப்படைப்புகளில் உருவாக்கத்தில் எங்களையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற நாங்கள், இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள படைப்புத்திறனையும், நேர்த்தியான கைவண்ணத்தையும் உங்களுக்கு விருந்தாகப் படைப்பதற்கு ஆவலோடு காத்திருக்கிறோம்,” என்று கூறினார்.

டையடம்-ன் பிரதான ஷோரூம், எண்.144, நுங்கம்பாக்கம் ஹை ரோடு, பார்க் ஹோட்டலுக்கு எதிரில், நுங்கம்பாக்கம் சென்னை, தமிழ்நாடு - 600006 என்ற முகவரியில் ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை உங்களை மகிழ்விப்பதற்காகச் செயல்படுகிறது. இருகரம் கூப்பி உங்களை வரவேற்கிறது. சென்னை அண்ணா நகரில், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகே, எண். 233-235, 2வது அவென்யூ, எல் பிளாக், அண்ணா நகர் மேற்கு என்ற முகவரியில் காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இயங்கி வருகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு