Published:Updated:

``என்ன கொடுமைங்க இது...!’’ - போகாத சுற்றுலாவும் வாசகியின் புலம்பலும் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

தான் உலகம் சுற்றினாலும் என்னை அவர் அருகில் இருக்கும் கொடைக்கானல் தவிர வேறெங்கும் அழைத்துச் சென்றதில்லை....

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நான் பொறியியல் பட்டதாரி. இந்த தேசத்தின் கடைக்கோடி மாவட்டத்துக்கு அருகில்தான் என் மாவட்டம். சுற்றுலாக்கள் செல்ல எனக்கு எப்போதும் பிடிக்கும். ஆனால், என் வகையில் சுற்றுலா என்பது குற்றாலம், பாபநாசம் என்று அருகில் உள்ள ஊர்களுக்குச் செல்வதுதான். எனக்கும் அதுவே போதுமானதாக இருந்தது. சிறு வயதில் குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக குல தெய்வ வழிபாட்டுக்கு தனிப்பேருந்தில் செல்வோம். இயற்கை எழில் கொஞ்சும் பொதிகை மலையின் அடிவாரத்தில் உள்ளது எங்கள் கோயில். கோயில், மலை, அருவி, ஆறு என அந்த இரண்டு நாள்களுக்காக வருடம் முழுவதும் காத்திருப்பாம். நாம் வளர்வதினால் ஏற்படும் இழப்புகளில் இதுவும் ஒன்று.

``என்ன கொடுமைங்க இது...!’’ - போகாத சுற்றுலாவும் வாசகியின் புலம்பலும்  #MyVikatan

திருமணத்துக்குப் பின் என் கணவர் சுற்றிய நாடுகளைப் பற்றி அவ்வப்போது கதை சொல்வார். அதைக் கேட்டு எனக்கும் வெளிநாடுகள் சென்று சுற்ற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. உலகம் சுற்றும் ஆசை. சுலபமாக முடியுமா என்ன..!

சிறு வயது முதலே எனக்கு ஐரோப்பா கண்டத்தின் மீது ஒரு காதல் உண்டு. வரலாற்று சிறப்பு மிக்க பாரிஸ் டவர், ரோம், இத்தாலி, மிதக்கும் நகரம் வெனிஸ் அனைத்தும் தன்னகத்தே கொண்ட இடமாயிற்றே. இந்த ஆசையை அவ்வப்போது என் கணவரிடமும் கூறுவேன் (மனுஷன் காதுல வாங்குனா தானே!!!!).

இதைச் சொல்லும்போதெல்லாம், ``ஓ பாரிஸ் ஆஹ் அங்க விவேகானந்தர் தெருல ஒரு Restaurant இருக்கு பாரு..’’ என்ற ரீதியில் ஆரம்பித்துவிடுவார். (ஏற்கெனவே போயிருக்காராமா!கேட்கும்போதே கோவம் வரும் பாருங்க... ம்ம்ம்ம்ம்ம் ஒன்னும் சொல்றதுக்கில்ல.)

தான் உலகம் சுற்றினாலும் என்னை அவர் அருகில் இருக்கும் கொடைக்கானல் தவிர வேறெங்கும் அழைத்துச் சென்றதில்லை. இவ்வளவு ஏன் இங்கிருக்கும் தஞ்சை பெரிய கோவில் கூட நான் கண்டதில்லை. எப்போது கேட்டாலும் வேண்டாம் என்றும் சொல்லாத உத்தமர் கூட்டியும் செல்ல மாட்டார்.

இப்படியே காலங்கள் உருண்டோடின. என் பொறுமை கைமீறிப் போகத் தொடங்கியது. ஒரு நாள் நேருக்கு நேர் நின்று கொஞ்சம் கோபமாகவே கேட்டேன், ``வெளிநாடு வேண்டாம் atleast இங்க பக்கத்துல எங்கயாவது கூட்டிட்டு போலாம்ல..?’’

என்ன நினைத்தாரோ மனிதர் ``சரி நம் திருமண நாளை கொண்டாட எங்கு போகலாம்னு நீயே சொல்லு.. கூட்டிட்டு போறேன்..’’ என்றார்.

ஆச்சர்யத்தில் விழிகள் விரிய பேச்சின்றி நின்றேன். 2 நாள்கள் அவகாசம் தந்தார். மிகவும் யோசித்து நான் தேர்ந்தெடுத்தது குருவாயூர். என் ஆசைக் கணவர் அருகில் உள்ள கொச்சின் alappey- யும் சேர்த்து ஒரு 6 நாள் திட்டம் தீட்டி பயண ஏற்பாடுகளைச் செய்தார். போக வர விமானம் என்று முடிவானது. இரண்டு மாதங்கள் முன்னமே டிக்கெட் புக் செய்தார். (ஆஆஆ.... ஒன்னும் இல்லீங்க... கனவானு கில்லிப் பாத்தேன்.... இல்லை நிஜம் தான்..)

நம்ப முடியாத பூரிப்பில் நாள்களைக் கடத்தினேன். சரியாக திட்டமிட வேண்டி Google-லில் அந்த ஊர்கள் பற்றிய தகவல்களை திரட்டினேன். Tour purchase என்று நிறைய வாங்கிக் குவித்தேன்.

Representational Image
Representational Image
Agnieszka Boeske / Unsplash

கிளம்ப ஒரு வாரமே இருந்த நிலையில் சமையல் வேலைகளை குறைத்தேன். வீணாகிவிட கூடாது பாருங்கள்..

இதற்கிடையில், கொரோனா பற்றிய தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்த வண்ணம் இருந்தன. இருப்பினும் பேக்கிங் செய்ய ஆரம்பித்தேன்.

ஆனால் விதி வலியது. நான் பார்க்க ஆசைப்பட்டதும் உலகமே முடங்கிவிட்டது கொரோனவால்.

ஏதேனும் அதிசயம் நடந்தால் மழை பெய்யும் என்று கிண்டலாக கூறுவார்கள். என்னவர் சாதாரண ஆளா என்ன... அவர் சரி என்றதும் அதிசயம்... உலகமே முடங்கிவிட்டதே....

இதுக்கு மேல வருவது புலம்பல்தான்.. விட்டு விடுங்கள்.

-ப்ரியா ராமன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு