Published:Updated:

ஆன்லைனில் ஆதாருடன் பான் கார்டை இணைப்பது எப்படி? | Doubt of Common Man

Aadhaar Pan link
News
Aadhaar Pan link

ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசத்தை 2022, மார்ச் 31 வரை நீட்டித்திருக்கிறது மத்திய அரசு

விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் கனகராஜ் என்ற வாசகர், "ஆன்லைனில் ஆதாருடன் பான் கார்டை இணைப்பது எப்படி?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

ஆதாருடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே கூறி வருகிறது மத்திய அரசு. இந்தத் தேதிக்குள் இணைக்க வேண்டும் எனக் காலக்கெடு கொடுப்பதும், பின்பு அதனை நீட்டிப்பதும் என இரண்டு ஆண்டுகளாக இந்த காலக்கெடு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் அரசு இணையதளங்கள் சரியாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது. ஆனால், தற்போது ஆதாருடன் பான் எண்ணைச் சுலபமாக இணைக்கும் வழிமுறைகள் இருக்கின்றன. மேலும், ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசத்தை 2022, மார்ச் 31 வரை நீட்டித்துக் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது மத்திய அரசு. ஆன்லைனில் ஆதாருடன் பான் கார்டை சுலபமாக எப்படி இணைப்பது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆதார் பான் இணைப்பு
ஆதார் பான் இணைப்பு

முதலில் வருமானவரித்துறையின் இணையப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். (அந்த இணையப்பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்). இணையப்பக்கத்தில் இடது பக்க பட்டியலில் 'Link Aadhar' என்ற ஆப்ஷன் இருக்கும். அதனைக் கிளிக் செய்யவும்.

வருமான வரித்துறை இணையதளம்
வருமான வரித்துறை இணையதளம்

அதனைத் தொடர்ந்து ஆதாருடன் பானை இணைப்பதற்கான பக்கம் தோன்றும். நம்முடைய ஆதார் எண், பான் எண், பெயர் (ஆதார் அட்டையில் இருப்பது போன்று) மற்றும் மொபைல் எண் ஆகியவற்றைக் கொடுத்து, கீழே இருக்கும் 'Link Aadhaar' என்பதனைக் கிளிக் செய்யவேண்டும்.

ஆதார் மற்றும் பான் இணைப்பதற்கான பக்கம்
ஆதார் மற்றும் பான் இணைப்பதற்கான பக்கம்

அதன் பின்பு தோன்றும் பக்கத்தில் நம் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யைக் கொடுத்து, அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் 'Validate' என்பதனைக் கிளிக் செய்துவிட்டால் போதும், முடிந்தது. ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான நம்முடைய கோரிக்கை பதிவு செய்யப்பட்டுவிடும்.

ஆதார் பான் இணைப்பு
ஆதார் பான் இணைப்பு
புதிதாக ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பவர்கள் மேற்கூறிய வழிமுறையைப் பின்பற்றலாம். ஏற்கனவே ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்துவிட்டோம் என்று நினைப்பவர்களும் எதற்கும் ஒரு முறை அவை இணைந்திருக்கிறதா என உறுதி செய்து கொள்வது நல்லது.

பான் மற்றும் ஆதார் இணைந்திருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள. மேலே கூறியது போலவே வருமான வரித்துறை இணையப்பக்கத்திற்குச் செல்ல வேண்டும் (இணையப்பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்)

ஆதார் மற்றும் பான் இணைந்திருக்கிறதா என உறுதி செய்ய
ஆதார் மற்றும் பான் இணைந்திருக்கிறதா என உறுதி செய்ய

இணையப்பக்கத்தில் இடது பக்கப் பட்டியலில் 'Link Aadhaar Status' என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதனைக் கிளிக் செய்து, அதன்பின் தோன்றும் பக்கத்தில் நம்முடைய ஆதார் எண் மற்றும் பான் எண்ணைக் கொடுத்து, இரண்டும் இணைந்திருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man