Published:Updated:

`அசல் ஓவியங்களின் அரசன்' ஓவியர் எஸ்.இளையராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி!

ஓவியர் எஸ்.இளையராஜா - நினைவஞ்சலி

இந்த கொரோனா பெருந்தொற்று நம்மிடமிருந்து பல நல்ல கலைஞர்களைக் கொண்டு சென்றது. அதில் ஓவியர் எஸ்.இளையராஜாவும் ஒருவர்

`அசல் ஓவியங்களின் அரசன்' ஓவியர் எஸ்.இளையராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி!

இந்த கொரோனா பெருந்தொற்று நம்மிடமிருந்து பல நல்ல கலைஞர்களைக் கொண்டு சென்றது. அதில் ஓவியர் எஸ்.இளையராஜாவும் ஒருவர்

Published:Updated:
ஓவியர் எஸ்.இளையராஜா - நினைவஞ்சலி

ஆயக்கலைகள் 64 என்பர். அதில் ஓவியத்திற்கென தனிச்சிறப்புண்டு. அந்த ஓவியக்கலையில் அசல் ஓவியங்களின் அரசன் மக்களால் போற்றப்படுபவர் எஸ்.இளையராஜா. இரண்டாம் ரவிவர்மா என்று பாராட்டப்படக்கூடிய அளவிற்கு இக்கலையில் சிறந்து விளங்கினார் இவர். இவரின் திராவிடப் பெண்கள் ஓவியங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் வரைந்த பல்வேறு ஓவியங்கள் விகடன் இதழில் வெளிவந்துள்ளன. இந்த கொரோனா பெருந்தொற்று நம்மிடமிருந்து பல நல்ல கலைஞர்களை கொண்டு சென்றது. அதில் எஸ்.இளையராஜாவும் ஒருவர். கடந்த ஆண்டு ஜூன் 6-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார் எஸ்.இளையராஜா. கலைக்கும் கலைஞர்களுக்கும் இறப்பு என்ற ஒன்றே கிடையாது. அதுபோல் தன் ஓவியங்கள் மூலம் இன்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் எஸ்.இளையராஜா.

ஓவியர் எஸ்.இளையராஜா - நினைவஞ்சலி
ஓவியர் எஸ்.இளையராஜா - நினைவஞ்சலி

இவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலியையொட்டி சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஜூன் 6-ம் தேதி சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் திராவிட பெண்கள் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி ஒன்றை நடத்தினார்கள். இந்த ஓவியப் போட்டியில் வயது வரம்பின்றி பலரும் தங்கள் கலைத்திறமையை வெளிகாட்டினர். இதுகுறித்து இளையராஜா அவர்களின் மனைவி ப்ரியா இளையராஜா பேசுகையில் " என் கணவர் ஓவியங்களை மிகவும் ரசித்து வரைவார் அது அவரிடத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தன் ஓவியங்களைத்தான் அவர் தன் முதல் மனைவியாக எண்ணுவார். ஓவியப் போட்டியில் பங்கேற்றவர்களின் ஓவியங்கள் அனைத்தையும் கண்டு களித்தேன் அனைவரும் தங்களின் திறமையை மிகநன்றாக வெளிப்படுத்தி இருந்தார்கள். இவர்களின் ஒருவர் அடுத்த இளையராஜாவாக நிச்சயம் வருவார். என் கணவர் மீது கடவுளுக்கு பொறாமை போல, அதனால்தான் அவரை விரைவாக கொண்டு சென்றுவிட்டார்."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதை தொடர்ந்து ஓவியர் எஸ்.இளையராஜா அவர்களின் சிலை மற்றும் திருவுருவப்படத் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. பேச்சாளர் பர்வீன் சுல்தானா, நடிகர் பொன்வண்ணன், திரைக்கலைஞரான மைம் கோபி ஆகியோர் இதில் பங்கேற்று இளையராஜா குறித்துத் தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism