Published:Updated:

அன்பு வணக்கம்!

மோட்டர் விகடன்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டர் விகடன்

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

Published:Updated:
மோட்டர் விகடன்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டர் விகடன்

டந்த ஒரு சில வாரங்களாகத் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வரும் ஆட்டொமோபைல் கேள்விகள் அனைத்தும், எலெக்ட்ரிக் கார் மற்றும் ஸ்கூட்டர்கள் சம்பந்தமானதுதான். நம் நாட்டுக்கு எலெக்ட்ரிக் கார்கள் புதிதல்ல. வெகுகாலத்துக்கு முன்பே இங்கு ரேவா உற்பத்தியானது. அதோடு ஐரோப்பிய நாடுகளிலும் அது விற்பனையானது. இந்த நிலையில் மத்திய அரசு எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க... கிட்டத்தட்ட எல்லா கார் கம்பெனிகளும் இந்த எலெக்ட்ரிக் கார் பந்தயக் களத்தில் குதிக்க இருக்கிறார்கள். இந்த ரேஸில் ‘போல்’ பொசிஷனைக் கைப்பற்றி முதலில் சீறிப்பாய்ந்து கிளம்பியிருப்பது ஹூண்டாய் கோனா.

எலெக்ட்ரிக் கார்கள் என்றாலே சார்ஜ் செய்ய அதிக நேரமாகும். அப்படியே சார்ஜ் செய்தாலும் ரொம்ப தூரம் போக முடியாது. பாதி வழியில் சார்ஜ் இறங்கிவிட்டால் காரை எங்கே சார்ஜ் செய்வது? எலெக்ட்ரிக் காரில் விலை அதிகமான பாகமே பேட்டரிதான். இந்த பேட்டரி செயலிழந்துவிட்டால் என்னாவது? - இப்படி எலெக்ட்ரிக் கார்கள் பற்றி எழும் அத்தனை கேள்விகளையும் தாண்டி மக்கள் மனதில் இடம்பிடிப்பது சுலபமான காரியமல்ல. ஆனால் ஹூண்டாய்க்கு நன்கு புரிந்திருக்கிறது. அதனால்தான் இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் சாதகமான பதிலைத் தரும்படி கோனாவை அது வடிவமைத்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல ஏத்தர் என்கிற இருசக்கர வாகன நிறுவனமும்... தமிழகத்தில் கிளைவிட, சென்னையில் இருந்து தன் கணக்கைத் துவங்கியிருக்கிறது. முதல் படியாக சென்னையில் 10 இடங்களில் இலவச சார்ஜிங் சென்டரை அமைத்திருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டில் சார்ஜ் செய்தாலும், அதற்கு ஆகும் செலவைத் திரும்பக் கொடுப்பதாக ஏத்தர் அறிவித்திருக்கிறது.

தன்னுடைய பங்குக்கு மத்திய அரசும் - எலெக்ட்ரிக் கார் வாங்கினால் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்குப் பெறலாம் என்று பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது. ஜிஎஸ்டியைக் குறைக்க வேண்டும் என்ற குரல்களும் மத்திய அரசை எட்டியிருக்கின்றன. அனல் மின்சாரத்துக்கு மாற்றாக, சூரிய சக்தி மற்றும் காற்றாலைகளில் இருந்து மின்சாரம் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அந்த மின்சாரத்தில் எலெக்ட்ரிக் கார்கள் இயங்கினால்... அந்த நாள் உண்மையிலேயே பொன்நாளாக இருக்கும்.

சத்தமில்லாமல், புகையில்லாமல், மத்திய அரசின் அந்நியச் செலாவணியைக் கரைக்காமல் ஓடும் வாகனங்கள், கட்டுப்படியாகும் விலைக்கு விற்பனைக்கு வந்துவிட்டால்... நமது மத்திய அரசின் பட்ஜெட்டில் மட்டுமல்ல; ஓசோன் மண்டலத்தில் விழும் ஓட்டையைக்கூட அடைத்துவிட முடியும். இவையெல்லாம் எட்ட முடியாத கற்பனையல்ல. உலக நாடுகள் அனைத்தும் மனது வைத்தால்... ஒரு சில வருடங்களில் இது சாத்தியமே!

அன்புடன்: ஆசிரியர்