Published:Updated:

எவரெஸ்ட்டை எட்டிப்பிடிக்க இன்னும் சில மணித்துளிகள்!- ஒரு வரலாற்றுச் சாதனையின் நினைவலைகள் #MyVikatan

Representational Image
News
Representational Image ( Michael Clarke / Unsplash )

1952-ம் ஆண்டு, ஒரு சுவிஸ் குழு எவரெஸ்ட்டின் உச்சிக்கு 1000 அடிகள் வரை சென்ற பிறகு, பலனின்றி திரும்பவேண்டியதாயிற்று.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``துயரங்களின் வழியேதான் உயரம் செல்ல முடியும்'' எனும் வைரமுத்துவின் வரிகளுக்கு உயிர் கொடுத்தவர்கள்தான் எட்மண்ட் ஹிலாரியும், டென்சிங் நார்கேவும்.

1953-ம் ஆண்டு மே 29-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு, 29,029 அடி, அதாவது கடல் மட்டத்திலிருந்து 8,848 மீட்டர் உயரம் உடைய எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்தனர்.

Representational Image
Representational Image
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

#முதல் முயற்சி

இன்று, உலகம் முழுவதும் பலரும் மலை ஏற்றப்பயிற்சி செய்துவருகின்றனர். அது ஒரு சாகசமாகவும், சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், நவீன சாதனங்கள் இல்லாத 1920 முதல் 1952 வரை இமயத்தைத் தொடுவதற்கான ஏழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை அனைத்துமே தோல்வியிலும் போதிய உடல் தகுதி இல்லாததாலும் உயிர் பலியில் முடிந்தன.

1952-ம் ஆண்டு, ஒரு சுவிஸ் குழு எவரெஸ்ட்டின் உச்சிக்கு ஆயிரம் அடி வரை சென்ற பிறகு, பலனின்றித் திரும்பவேண்டியதாயிற்று. அவற்றை எல்லாம் கண்டு மனம் தளராத பிரிட்டிஷ் குழு ஒன்று, 1953-ம் ஆண்டு ஒரு முயற்சியை மேற்கொண்டது. அந்தக் குழுவில் இடம்பிடித்தவர்கள்தான் எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங் நார்கேயும்.

#இரு வல்லவர்கள்

எட்மண்ட் ஹிலாரி 1919-ம் ஆண்டு, நியூஸிலாந்தில் தேன் எடுக்கும் குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலேயே மலை ஏறும் ஆர்வம் கொண்டவர். 20-ம் வயதிலேயே அப்பகுதியில் உள்ள மலையில் ஏறியதுடன், மலை ஏற்றம் தொடர்பான புத்தகங்களை நன்கு படித்து, மலை ஏற்றத்தில் நிபுணத்துவம் அடைந்தார்.

நேபாள-திபெத்திய எல்லையில் பிறந்தவர் டென்சிங். யாக் எருமை மேய்ப்பவராக, மலை ஏறுபவர்க்கு உதவும் சுமை தூக்குபவராக இருந்தார். எழுதப்படிக்கத் தெரியாதவராக இருப்பினும் பல மொழிகளில் உரையாடுபவராக இருந்தார். தன் அனுபவ அறிவின் மூலம் மலை ஏறும் நுட்பம் அனைத்தும் அத்துபடியாக இருந்தது. மலைஏறும் ஆர்வமும் இவரிடம் உண்டு. 1953-ல் பிரிட்டன் குழுவில் பலரும் மலை ஏற்றத்தில் பின் தங்கிவிட, ஹிலாரியும் டென்சிங் எனும் இரு வல்லவர்கள்தான், மனம் தளராமல் ஏற ஆரம்பித்தனர்.

ஹிலாரி , டென்சிங்
ஹிலாரி , டென்சிங்

#மலை ஏறுதல்

"அளக்கலாகா அளவும் பொருளும் துளக்கலாகா நிலையும் தோற்றமும்"

எனும் மலை குறித்த சங்கப்பாடல் வரி உள்ளது. ஒரு மலையைப் பார்ப்பதற்கு சாதாரணமாய்த் தோன்றும். ஆனால், அதை முழுமையாய் அளக்க முடியாது. இவ்வளவுதான் அதன் தோற்றம் என எளிமையாய்க் கூறிடவும் முடியாது. அதனால்தான் கண்ணதாசன், மலையை எப்போதும் ஓர் அசையாத பிரமாண்டம் என வர்ணித்தார்.

இப்படிப்பட்ட சூழலில், பனி படர்ந்த மலை எப்படி இருக்கும். குறைவான வெப்பநிலை, குளிர்க்காற்று, பனிப்புயல் என பல இடர்பாடுகள். இவை தவிர, மலை ஏறத் தேவையான பொருள்கள், உணவு, ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டு ஏறுவது சவாலான விஷயம். ஒரு பனிப்பாறையை டென்சிங் உடைத்தபோது, அதில் ஒரு வெள்ளைக்காரர் உறைந்த நிலையில் இறந்துகிடந்தாராம். இதுபோல் எண்ணற்ற தடைகள் மலை ஏறுவோரையும் நிலைகுலையவைக்கும். இதையும் மீறி முன்னேறினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#அந்த நாள்

எவரெஸ்ட்டை எட்டிப்பிடிக்க இன்னும் ஒரே நாள்தான் உள்ளது என்ற சூழலில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. பயணத்தை ரத்து செய்யலாமா என்று எட்மண்ட் ஹிலாரி யோசிக்கிறார். அப்போது உடனிருந்த டென்சிங், வெற்றியின் விளிம்புவரை வந்துவிட்டோம் எனக் கூறி உற்சாகத்துடன் முன்னேற, இருவரும் மே 29 காலை 11.30 மணிக்கு உச்சியைத் தொட்டனர். மனிதன் முயற்சித்தால் எந்த மலையும் அவர்களின் காலடியில்தான் எனும் வெற்றிப் பெருமிதம் கொண்டனர். அப்போது டென்சிங், மலையின் உச்சியில் தனது மகள் நீமா தந்து அனுப்பிய நீலநிறப் பேனாவை தாங்கள் உச்சியைத் தொட்டதன் அடையாளமாய் புதைத்து வந்தார்.புத்தரின் கருணையே தன்னை வழிநடத்தியதாய் கூறினார்.

Representational Image
Representational Image
Martin Jernberg / Unsplash

#வெற்றிச்செய்தி

இச்செய்தி, ஜுன் 2-ம் தேதி காலையில் லண்டனில் பரவியது. அன்றுதான் எலிசபெத் ராணிக்கு முடிசூட்டுவிழா. இரட்டைத் திருவிழாவாய் நகரமெங்கும் கொண்டாடப்பட்டது.

ஒரு மனிதனின் சாதாரண வணிகப் பார்வையில், இதிலென்ன இருக்கிறது என எண்ணத் தோன்றும். ஒரு மலை ஏறுவது பெரிய செயலா என சாதாரணமாய் நினைக்கத் தோன்றும். ஆனால், ஒரு மனிதன் முயன்றால் சிகரத்தை வெல்வான் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஒவ்வொருவரும் தத்தமது இலக்கில் விடாது உழைத்தால் சிகரம் தொடலாம். ஒரு வெற்றி பின்னால் வருவோர்க்கு பாதை அமைத்துக்கொடுக்கிறது. பிறரை கனவு காணத் தூண்டுகிறது. இதை முடிக்கும்போது, என்நினைவுக்கு வரும் வரிகள்,

Every new idea is a joke until one man achieves it and every new thoughts is silly until you try and believe it..

ஒவ்வொரு புதிய யோசனையும் ஒரு நகைச்சுவையாகும்,

ஒரு மனிதன் அடையும்வரை.

ஒவ்வொரு புதிய எண்ணங்களும்

வேடிக்கையானவை

நீங்கள் முயற்சி செய்து நம்பும் வரை

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/