Published:Updated:

மழைக்கால மின்கசிவிலிருந்து வீட்டை பாதுகாப்பது எப்படி? நிபுணரின் ஆலோசனைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Electrical Appliances (Representational Image)
Electrical Appliances (Representational Image) ( Photo by Mukund Nair on Unsplash )

மழைக்காலத்தில் மிக முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, நம் வீட்டிலும் வெளியிலும் மின் கசிவை எவ்வாறு தவிர்த்து, பாதுகாப்புடன் இருப்பது என்பது.

காலையில் எழுந்த உடன், `அட, இன்னைக்கு கிளைமேட் சூப்பரா இருக்கே' என நம்மை மகிழ வைக்கும் மழைக்காலம் தொடங்கிவிட்டது. இன்னொரு பக்கம், மழைக்காலத்தில் மிக முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, நம் வீட்டிலும் வெளியிலும் மின் கசிவை எவ்வாறு தவிர்த்து, பாதுகாப்புடன் இருப்பது என்பது.

`நீரின்றி அமையாது உலகு' என்று கூறினார் வள்ளுவர். தற்போது அது மின்சாரத்துக்கும் பொருந்தும். தனித்தனியே இரண்டும் மகத்துவம் வாய்ந்ததுதான். ஆனால், மின்சாரமும் நீரும் இணையும்போது அது ஓர் அபாயகரமான கூட்டணியாக மாறுகிறது. கோவையைச் சேர்ந்த, தமிழ்நாடு மின்சார வாரியம் ஸ்பெஷல் கிரேடு ஃபோர்மேன் பாலசுப்பிரமணியன், மழைக்காலத்தில் வீட்டில் ஏற்படும் மின்கசிவைத் தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்.

ஈரமான கைகளால் ஸ்விட்ச்சை தொடக் கூடாது!

பாலசுப்பிரமணியம்
பாலசுப்பிரமணியம்

உங்கள் கைகள் ஈரமாக இருக்கும்போது ஸ்விட்ச்சை தொட்டால் கையில் உள்ள தண்ணீர் ஸ்விட்ச் போர்டின் உள்ளே உள்ள உலோகத்தாலான மின்சார பாகத்துக்குச் சென்றுவிடும். தண்ணீர் ஒரு சிறந்த மின்சாரக் கடத்தி என்பதால், மின்சாரம் நம் உடம்பில் பாயலாம். உள்ளே செல்லும் நீரின் அளவைப் பொறுத்து மின்சாரம் நம் மீது பாயும் அளவு தீர்மானிக்கப்படும். எனவே, கைகளில் ஈரம் இருந்தால் அதை உலர்த்திய பின்னரே ஸ்விட்ச்சை தொடவும்.

மின்சார சாதனங்களின் இணைப்பைத் துண்டித்து வைக்கவும்!

மழைக்காலத்தில் மின்னல் அடிக்கும்போது அது மின்சார இணைப்பு மூலம் நம் வீட்டுக்குள் தீ விபத்தை ஏற்படுத்தலாம். வீட்டின் மின்சார இணைப்புகள் மண்ணுக்கு அடியிலும், வீட்டுக்கு மேலும் இருப்பதால், சுற்றுப்புறத்தில் மின்னல் பாய்ந்தால் அந்த இணைப்புகள் மூலம் மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக மின்சாரப் பொருள்களின் இணைப்பைத் துண்டித்து வைப்பது பாதுகாப்பானது.

மின்சார இணைப்புக்கு அருகில் உள்ள ஜன்னல்களை மூடி வைக்கவும்!

மழைக்காலத்தில் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைத்திருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக மின்சார இணைப்புகளுக்கு அருகில் இருக்கும் ஜன்னல்கள் மூடியே இருக்க வேண்டும். இல்லையென்றால் மழைச் சாரல் மின்சார இணைப்புக்குள் செல்லும் அபாயம் உள்ளது.

ஐ.எஸ்.ஐ முக்கியம் பாஸ்!

மின்சார சாதனங்களை வாங்கும்போது ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏசி, வாஷிங் மெஷின், ஓவன், ஹீட்டர் என எந்தப் பொருள் வாங்கினாலும் அதைச் சிறந்த தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்க வேண்டும். சில வீடுகளில் மின்சார இணைப்புகள் அனைத்தும் இணைக்கப் பட்டிருக்கும் இடம் மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ இருக்கலாம். அங்கு மழை நீர் படும் வாய்ப்பு அதிகம் என்பதால் splash guard உபயோகிப்பது சிறந்தது.

Rain
Rain

வரும் முன் காப்போம்!

மழைக்காலம் தொடங்கும் முன்பு அல்லது தொடங்கிய உடனே வீட்டில் எங்கேயாவது நீர்க்கசிவு உள்ளதா என்று செக் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு இருப்பின் அதைத் தொழில்முறை நபரைக்கொண்டு சரி செய்ய வேண்டும். தவறினால், மின் கசிவு ஏற்படும்பட்சத்தில் அது ஆபத்தில் முடியலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தைகளின் பாதுகாப்பு!

குழந்தைகளுக்கு மின்சாரத்தின் அபாயம் பற்றி எடுத்துரைக்க வேண்டும். மின் இணைப்புகள் அவர்களுக்கு எட்டாத இடத்தில் இருப்பது நல்லது. மின் வயர்களின் மேல் மரக்கிளைகள் இருந்தால் அதை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மின்னல்
மின்னல்
Home Loan - வட்டியை குறைத்து லாபம் பார்ப்பது எப்படி? | Personal Loan Tips | Nanayam Vikatan

மின்னல், இடி ஜாக்கிரதை!

- இடி இடிக்கும்போது மின்சார சாதனங்களை உபயோகிக்க வேண்டாம்.

- இடி இடிக்கும்போது மரங்களுக்கு கீழ் நிற்க வேண்டாம்.

- மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகேயும் செல்லக் கூடாது.

- அறுந்து விழுந்த மின்சாரக் கம்பியின் அருகில் செல்லக் கூடாது.

- இடி அல்லது மின்னலின்போது வெட்ட வெளியில் நிற்காமல் உடனடியாக கான்கிரீட் கட்டடத்தில் தஞ்சம் அடைய வேண்டும்.

- குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகக் கூடாது.

- இடி அல்லது மின்னலின்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

இடி அல்லது மின்னலின்போது தஞ்சம் அடைய அருகில் எதுவும் இடம் இல்லாதபட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து பாதுகாப்பாக இருந்திட வேண்டும். டிவி, மிக்ஸி, கிரைண்டர், தொலைப்பேசி போன்றவற்றின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.

Switches (Representational Image)
Switches (Representational Image)
Photo by Jaye Haych on Unsplash
ஆன்லைனில் தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பப்பட்ட பணம்; வங்கியிலிருந்து திரும்பப் பெறுவது எப்படி?

வயரிங் வேலைகள்!

எப்போதுமே மின்சார வயரிங் வேலைகளைத் தொழில்முறை அனுபவம் உள்ள டெக்னீஷியன்களிடம் மட்டுமே செய்து கொள்வது நல்லது. அவசர நேரங்களில் மின் இணைப்பை விரைந்து துண்டிக்கும் வகையில் பவர் கனெக்‌ஷனில் இடம் இருக்க வேண்டும். மின் சாதனங்கள் உபயோகத்தில் இல்லாத பட்சத்தில் ஸ்விட்ச்சை ஆஃப் செய்து வைக்க வேண்டும்.''

கவனமாக இருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு