Published:Updated:

பலவேஷக்காரர்கள்: கடைகளிலும், வீடுகளிலும் கையேந்தி நிற்கும் கலைஞர்களின் கதை!

அவதாரம்

தியேட்டர்களில் இருந்து சினிமா ஓடிடி வழி வீட்டுக்கு வந்தமாதிரி, வேஷம் கட்டிக்கொண்டு வீடுகளுக்கே வந்து புராணக் காட்சிகளை நடித்துக்காட்டும் கலைஞர்கள் இவர்கள்.

பலவேஷக்காரர்கள்: கடைகளிலும், வீடுகளிலும் கையேந்தி நிற்கும் கலைஞர்களின் கதை!

தியேட்டர்களில் இருந்து சினிமா ஓடிடி வழி வீட்டுக்கு வந்தமாதிரி, வேஷம் கட்டிக்கொண்டு வீடுகளுக்கே வந்து புராணக் காட்சிகளை நடித்துக்காட்டும் கலைஞர்கள் இவர்கள்.

Published:Updated:
அவதாரம்

முகம் முழுவதும் வண்ணப்பொடி பூசி ராமராகவும் லட்சுமணராகவும் ஆஞ்சநேயராகவும் தர்மராகவும் உருமாறி தெருக்களில் உங்களைக் கடந்துபோகும் மனிதர்களை சற்று கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? தோளில் தொங்கும் ஹார்மோனியம் அதிர, ராம சீதா பாடல்களை சுதி சிதறாமல் பாடி கடைகளிலும் வீடுகளிலும் கையேந்தி நிற்கும் அவர்கள் யார்..? எங்கிருந்து வருகிறார்கள்..?

பலவேஷக்காரர்கள்
பலவேஷக்காரர்கள்

தேர்ந்த ஒரு கூத்துக்கலைஞனின் உடல்மொழியோடு அடியெடுத்து நடக்கும் இவர்கள், பலவேஷக்காரர்கள். பகல் வேஷக்காரர்கள் என்றும் இவர்களை அழைப்பதுண்டு. அதிகாலை எழுந்து, குழுவாகக் கிளம்பி கிராமத்துக் கோயிலொன்றில் அரிதாரம் பூசி ஆளுக்கொரு திசையில் நடந்து பாட்டும் கூத்துமாடி யாசகம் பெறும் இந்த மக்களின் பூர்வீகம் ஆந்திரா. இந்தியாவில் பழமையான வாழ்க்கைமுறையோடு மிஞ்சியிருக்கும் நாடோடி சமூகங்களில் பலவேஷக்காரர் சமூகமும் ஒன்று.

இந்தியாவில் 860க்கும் மேற்பட்ட நாடோடி சமூகங்கள் உண்டு. இசை, கூத்து, நடனம், கைவினைக்கலை என பல்வேறு தொழிற்பண்பாடுகளைக் கொண்டு ஊர் ஊராக அலைந்து நிழல் கண்ட இடத்தில் தங்கி, கிடைத்த உணவை உண்டு வாழும் இந்தப் பழங்குடி சமூகங்களில் பல கல்வி, வேலை வாய்ப்புகளைப் பெற்று அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து விட்டன. 

பலவேஷக்காரர்கள்
பலவேஷக்காரர்கள்

இருப்பிடங்களை அமைத்து ஒரே இடத்தில் தங்கி பிற மக்களைப் போல வாழப்பழகிவிட்டன. ஆனால் சில சமூகங்கள் இன்னும் தங்கள் பழங்குடித்தன்மையை மாற்றிக்கொள்ளவில்லை. இன்றளவும் யாசகம் ஒன்றையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றன. பலவேஷக்காரர் சமூகமும் அப்படியான நிலையைத்தான் கொண்டிருக்கிறது.

பலவேஷக்காரர்களை ஆந்திராவில் 'புடக ஜங்காளம்' என்கிறார்கள். தமிழகத்தில் 'சங்கம பண்டாரம்' என்று பட்டியலிடப்பட்டுள்ளார்கள். தியேட்டர்களில் இருந்து சினிமா ஓடிடி வழி வீட்டுக்கு வந்தமாதிரி, வேஷம் கட்டிக்கொண்டு வீடுகளுக்கே வந்து புராணக் காட்சிகளை நடித்துக்காட்டும் கலைஞர்கள் இவர்கள். ஆந்திர வாழ்வியல் மரபில் இந்தக் கலைஞர்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறார்கள். தமிழகத்தில் கூத்துக்கலை போல ஆந்திராவில் பலவேடக் கலை. காலப்போக்கில் மாற்றங்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்த இந்தக் கலைஞர்கள் படிபடியாக அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள்.

 நிறைய பேர் கர்நாடகத்தில் நிலை கொண்டுள்ளார்கள். அங்கு 'பேட புடக ஜங்கம்' என்று இந்தக் கலைஞர்களுக்குப் பெயர். தெலுங்கோடு, அந்தந்தப்பகுதியின் வட்டார மொழியும் கலந்து பேசும் இம்மக்கள், மதுரை நாயக்கர்கள் தமிழகம் வந்து ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த காலத்தில் தமிழகத்துக்கு வந்தார்கள். பஸவேஷக்காரர்களின் பரிதாப வாழ்க்கையைச் சொல்லும் 'அவதாரம்' ஆவணப்படத்தைக் காண கீழேயுள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.