Published:Updated:

"Santhosh Narayanan சார் தான் என் வாழ்க்கையை மாத்தினார்!" - தப்பு செட்டு ஜெயராம்

தப்பு செட்டு ஜெயராம்

‘ஜகமே தந்திரம்’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘பிகில்’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ என இசைக்காகப் பேசப்பட்ட பல படங்களில் ஜெயராமின் தப்புசெட் அனல் கிளப்பியிருக்கிறது.

"Santhosh Narayanan சார் தான் என் வாழ்க்கையை மாத்தினார்!" - தப்பு செட்டு ஜெயராம்

‘ஜகமே தந்திரம்’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘பிகில்’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ என இசைக்காகப் பேசப்பட்ட பல படங்களில் ஜெயராமின் தப்புசெட் அனல் கிளப்பியிருக்கிறது.

Published:Updated:
தப்பு செட்டு ஜெயராம்

பிராட்வே, நைனியப்பன் தெருவில் கடைக்கும் சாலைக்கும் இடையிலான சிறு நிலப்பரப்பில் ஓடிறக்கி உருவாக்கப்பட்டிருக்கும் குடில்தான் ஜெயராமின் வீடு. பத்துக்குப் பத்து அளவிலான அந்தச் சின்ன வீட்டில், ஒரு படுக்கைக்கும் கொஞ்சம் துணிகளுக்கும் மத்தியில் ஒன்றுக்குமேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன விதவிதமான தப்பு செட்கள்.

ஜெயராம்
ஜெயராம்

‘‘வா தலை... குனிஞ்சு வா... யாரு வந்தாலும் நம்ம வீட்டுக்குத் தலைவணங்கித்தான் ஆவணும்...’’ பளீரெனச் சிரித்து, கரம்பற்றி வரவேற்கிறார் ஜெயராம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சாலையோரக் குடும்பங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து, தப்புசெட் குழு நடத்தும் ஜெயராம், திரைப்படங்களிலும் பிஸி. ‘ஜகமே தந்திரம்’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘பிகில்’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ என இசைக்காகப் பேசப்பட்ட பல படங்களில் ஜெயராமின் தப்புசெட் அனல் கிளப்பியிருக்கிறது.

ஜெயராம் குழுவினர்
ஜெயராம் குழுவினர்

‘‘சினிமால்லாம் நமக்கு சைடு பிசினஸ்தாண்ணா... துக்கத்துக்கும் சந்தோஷத்துக்கும் தெருவுல அடிக்கிறதும் ஆடுறதும்தான் நம்ம மெயின் தொழில்’’ என்று சிரிக்கிற ஜெயராம், தெளிவான அரசியல் புரிதலோடு பேசுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘நம்மள மாதிரியே தப்பு செட் வச்சிருக்கிற ஓட்டேரி ‘சட்டி சரத்'துதான் சந்தோஷ் நாராயணன் சார்கிட்ட என்னை அறிமுகப்படுத்தி வச்சார். சார், காட்பாதர் மாதிரி. திறமையைப் பாக்குற அதே கண்ணால நம்ம கஷ்டத்தையும் பாக்குறவர். கொரோனா நேரத்துல அரிசி, பருப்புன்னு வாங்கியாந்து இங்கேயிருக்கிற எல்லாக் குடும்பங்களுக்கும் குடுத்தாரு மனுஷன். அவருதான், ‘சினிமா பெரிய விஷயமில்லை... வா வந்து வாசி'ன்னு கூப்பிட்டார்.

ஜெயராம் குழுவினர்
ஜெயராம் குழுவினர்

‘ஜகமே தந்திரம்’ படத்துல வர்ற ‘ரகிட ரகிட' பாட்டுக்கு வாசிச்சேன். அடுத்து ‘பாரிஸ் ஜெயராஜ்'க்குக் கூப்பிட்டார். ‘புளி மாங்கா புளிப்', ‘பச்சா பச்சிக்கே...'ன்னு ரெண்டு பாட்டுக்கும் வாசிச்சேன். அதுக்கப்புறம் சந்தோஷ் சார் நிறைய வாய்ப்பு குடுத்தார். ‘சார்பட்டா பரம்பரை’ நம்ம மண்ணோட படம். அதுலயும் வாசிக்க வச்சார். ‘வானம் விடிஞ்சிடுச்சு' பாட்டுல ஒலிக்கிற டேப் நாம வாசிச்சதுதான். ‘பிகில்’ படத்துலயும் வாசிக்கிற வாய்ப்பு கிடைச்சுச்சு. நாம அடிக்கிற தப்பு, தெருவுல பாட்டுல கலந்து ஒலிக்கிறப்போ கண்ணுல தண்ணி வருது...’’ நெகிழ்ந்துபோகிறார் ஜெயராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism