Published:Updated:

Quilt: மெத்தை விரிப்புகளின் கலை வடிவம்... சென்னையில் நடைபெற்ற கண்காட்சி!

‘மெனி ஃபேசஸ்’ (Many faces) கண்காட்சி ‘மீ டூ’ இயக்கம், ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளை மையமாய்க் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.

Quilt: மெத்தை விரிப்புகளின் கலை வடிவம்... சென்னையில் நடைபெற்ற கண்காட்சி!

‘மெனி ஃபேசஸ்’ (Many faces) கண்காட்சி ‘மீ டூ’ இயக்கம், ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளை மையமாய்க் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.

Published:Updated:

வெதுவெதுப்பான மெத்தையின் உறையாய் அமையும் துணிகள் ‘க்வில்ட்’ எனப்படுகின்றன. படுக்கை விரிப்பின் மேற்போர்வைகளில் வடிவமைக்கப்படும் சித்திரங்கள் க்வில்ட் டிசைன்கள் ஆகும். 1930-ன் மத்தியில் இருந்தே க்வில்ட் (Quilt) எனப்படும் கலை வடிவை அமெரிக்கர்கள் பயன்படுத்த தொடங்கினர். ஆனால், 1986க்கு பிறகே இவை கலை அங்கீகாரம் பெற்று வெளியில் தெரியத் தொடங்கின. முதல் ஆர்ட் க்வில்ட் கண்காட்சி பென்னி மெக் மோரிஸ், மைக்கேல் கைல் என்ற க்வில்ட் கலைஞர்களால் நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியில் தான் முதன்முதலாக க்வில்ட் எனப்படும் கலை வடிவை வெறும் பாரம்பரிய படுக்கை விரிப்புகளாகப் பார்க்காமல், அவற்றைக் காட்சிக் கலையின் ஓர் படைப்பாகப் பார்க்கத் தொடங்கினர்.

Quilt
Quilt

க்வில்டிங் (Quilting) எனும் கலை வடிவைப் பராமரித்துப் பாதுகாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட ஓர் அமைப்பு க்வில்ட் இந்தியா பவுண்டேஷன். கலை ஆர்வத்தைப் பொதுமக்களிடம் மேம்படுத்தும் செயல்பாடுகளில் இது ஈடுபட்டுவருகிறது. க்வில்டிங்-ஐப் பரவலாக்கும் நோக்கில், ‘மெனி ஃபேசஸ்’ (Many faces) என்ற தலைப்பில் கண்காட்சி ஒன்றை இந்த அமைப்பு சென்னையில் சமீபத்தில் ஒருங்கிணைத்தது. முகங்களை மையப்படுத்தி கலைஞர்களின் மனதில் எழும் சிந்தனைகளைக் கொண்டு Portraitகள் முதல் Posterகள் வரை உலகம் முழுவதிலுமிருந்து 20 கலைஞர்களின் முப்பத்தி மூன்று படைப்புகள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் கண்காட்சி குறித்து, க்வில்ட் இந்தியா பவுண்டேஷனின் ஒருங்கிணைப்பாளர் டீனா கட்வா பேசும்போது, “சமூகத்தில் எழும் எந்தப் பிரச்னைக்கும் உலகம் முழுவதும் முதலில் குரல் கொடுப்பவர்கள் கலைஞர்களே. ஆர்டிவிஸம் (Activism through art), அதாவது ‘கலை வழியே செயல்பாடு’ என்பது இதன் பொருள். பாரம்பரியப் போர்வை விரிப்பைத் தாண்டிய ஒரு நகர்வை இந்திய அளவில் க்வில்ட்கள் எட்டவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த அமைப்பைத் தொடங்கினோம். இந்திய அளவில் தொடங்கப்பட்ட முதல் க்வில்ட் ஸ்டுடியோ, திருவான்மியூரில் இருக்கும் ஸ்கொயர் இன்ச் (Square Inch) எனப்படும் எங்களுடைய நிறுவனம்தான். இந்த ‘மெனி ஃபேசஸ்’ (Many faces) கண்காட்சி ‘மீ டூ’ இயக்கம், ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளை மையமாய்க் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. முகங்கள் என்றாலே மனித முகங்கள்தான் என்ற கட்டமைப்பை உடைக்கும் விதத்தில் பறவைகள், விலங்குகளின் முகங்களும், மனிதனின் உள்முகமாக கருதப்படும் மனம் போன்ற அம்சங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன” என்கிறார்.

டீனா கட்வா
டீனா கட்வா

சென்னையில் மட்டும் 200 க்வில்டர்களைக் கண்டறிந்திருக்கும் இந்த அமைப்பு, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை க்வில்ட் விழாவை நடத்தி வருகின்றனர். 2019-ல் தொடங்கப்பட்ட இந்தச் சிறப்பு விழா, கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு இணைய வழியில் நடத்தப்பட்டது. இந்த விழாக்கள் க்வில்ட்களைக் காட்சிப்படுத்தபடுவதற்கு மட்டுமன்றி சிறந்த கலைகளுக்கான போட்டிகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. அடுத்த திருவிழா ஜனவரி 2023-ல் நடக்கவிருக்கிறது. வயது வரம்பின்றி நிகழ்த்தப்படும் இந்தப் போட்டிகளுக்கான முன்பதிவு வரும் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. பதிவு செய்யப்படும் அனைத்து கலைகளும் காட்சிப்படுத்தப்படும் என்பது இந்த நிகழ்வின் சிறப்பாகும். பரிசுப் பட்டியலில் இடம் பெறாவிட்டாலும் காட்சிக்கு வைக்கப்படும் அங்கீகாரம் என்பது வரவேற்கத்தக்க செயல்பாடாகக் கருதப்படுகிறது.

‘மெனி ஃபேசஸ்’ (Many faces) எனப்படும் இந்தக் கண்காட்சி அடுத்து பாண்டிச்சேரி, பெங்களூரு, புனே, மும்பை, டில்லி ஆகிய நகரங்களில் நடைபெறவிருக்கிறது.

-சுபஸ்ரீ

(பயிற்சிப் பத்திரிகையாளர்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism