Published:Updated:

வதந்திகளைத் தடுக்க வாட்ஸ்அப்பின் புதிய முயற்சி! - பலனளிக்குமா `Search the Web' வசதி? #MyVikatan

Search the Web option
Search the Web option

அனுப்பும் நபர் செய்தியை சரியாகக் கவனிக்காமல் அல்லது வதந்தி பரப்பும் நோக்குடன் அனுப்பும்போது அந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை, செய்தி பெறக்கூடிய நபர் உடனே அறிந்துகொள்ள இந்த Search the Web வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வாட்ஸ்அப் செயலி நமக்கு பல வகைகளிலும் பயன்படுகிறது. ஆனால், வாட்ஸ் அப் தளத்தில் பகிரப்படும் போலியான மற்றும் தேவையின்றி Forward செய்யப்படும் தகவல்கள் நமக்கு மிகப்பெரும் தலைவலியாகவே இருந்து வருகின்றன.

இப்பிரச்னையைத் தடுக்க அவ்வப்போது வாட்ஸ் அப் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாகப் பலமுறை அனுப்பப்பட்ட அரட்டைகளில் பகிரப்பட்ட செய்திகளுக்கு வாட்ஸ் அப் ஒரு சிறப்பு பகிரப்பட்ட லேபிளை (Special forwarded label) வழங்குகிறது. இது ஒற்றை மற்றும் இரட்டை அம்புக்குறிகளைக் (Single & Double arrows) கொண்ட லேபிள் ஆகும்.

Search the Web option
Search the Web option

இது செய்தியின் முகப்பிலேயே வரும். இந்த அம்புக் குறியீடு மூலம், செய்தியானது அனுப்பும் நபரால் உருவாக்கப்பட்டதா, பகிரப்பட்டதா? என்பதை பயனர்கள் சுலபமாக அறிந்து கொள்ளும் வசதியை வாட்ஸ் அப் அளித்தது.

சங்கிலி செய்திகள் போன்று ஐந்து முறைக்கு மேல் பயனர்களிடையே அனுப்பப்பட்ட செய்தியை ஒரு பயனர் பெறும்போது அது இரட்டை அம்பு ஐகானுடன் Forwarded என்ற குறிப்புடன் இருக்கும். Forwarded குறிப்புடன் ஒற்றை அம்புக்குறி இருப்பின் செய்தி ஐந்து முறைக்கு குறைவாகப் பகிரப்பட்டது என்று பொருள்.

அடுத்தக்கட்டமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாட்ஸ்அப்பின் தனிப்பட்ட தன்மையைப் பராமரிக்க ஒரு செய்தியை ஒரே நேரத்தில் எத்தனை முறை அனுப்பலாம் என்பதற்கான வரம்புகளை வாட்ஸ் அப் நிறுவனம் நிர்ணயித்தது.

அதன்படி தற்போது நாம் ஒரு செய்தியை Forward செய்யும்போது, ​ஒரே நேரத்தில் ஐந்து நபர்கள் அல்லது குழுக்களுடன் மட்டுமே பகிர்ந்துகொள்ள தேர்வு செய்ய முடியும்.

இத்தகைய கட்டுப்பாடுகள் வாட்ஸ்அப்பின் உரையாடல்களை நெருக்கமாகவும் தனிப்பட்டதாகவும் வைத்திருக்க உதவின. இந்த நடவடிக்கைகள் வதந்திகள், வைரஸ் செய்திகள் மற்றும் போலி செய்திகளின் பரவலைக் குறைக்கவும் கணிசமாக உதவின.

Search the Web option
Search the Web option

ஆனால், இதில் ஒரு பெரும் குறை தொடர்ந்து இருந்து வந்தது. "வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்னும் பழமொழிப்படி, Forwarded label வராமல் இருக்க தொழில்நுட்ப அறிவுடையோர் முதலில் வாட்ஸ் அப் மெசேஜ்களை Copy செய்தனர். பின் எத்தனை நபர்கள்/குழுக்களுக்கு வேண்டுமானாலும் அதை Paste செய்து தம்மால் உருவாக்கப்பட்ட உண்மைச் செய்தி போல அனுப்பி வந்தனர். இவ்வாறு Copy & Paste செய்கையில் ஒற்றை மற்றும் இரட்டை அம்புக்குறிகள் வராது.

இதனால் Forwarded அம்புக்குறிகள் மற்றும் 5 எண்ணிக்கை வரம்புகள் ஆகியவை வதந்திகளைக் Copy & Paste செய்தவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

எனவே, வதந்தி மற்றும் போலி செய்திகள் பிரச்னையைத் தீர்க்க வாட்ஸ் அப் நிர்வாகம் கடந்த திங்களன்று "Search the web" என்னும் புதியதொரு Update ஒன்றை வழங்கியுள்ளது.

இதன்படி செய்தியை இருமுறை சரிபார்க்க எளிய வழியை வாட்ஸ் அப் வழங்குகிறது. குறிப்பிட்ட வாட்ஸ் அப் உரையாடலின் வலதுபுறம் உள்ள பூதக்கண்ணாடி (Search) பொத்தானைத் தட்டுவதன் மூலம் அது உலாவி (Browser) வழியே குறிப்பிட்ட இணையதளத்துக்கு அழைத்துச் செல்லும்.

Search the Web option
Search the Web option

அங்கு இந்தச் செய்தி உண்மையா, பொய்யா? என உடனடியாக நாம் அறிந்துகொள்ள முடியும். மேலும் செய்தியின் முடிவுகள் மற்றும் அனுப்பியவர் பெற்ற செய்திகளின் உள்ளடக்கத்தைப் பற்றிய பிற தகவல்களின் ஆதாரங்களைக் கண்டறியவும் இது பயனர்களுக்கு உதவும்.

செய்தியை அனுப்பக்கூடிய நபர் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தாமல், தங்களது உலாவி வழியாகச் செய்தியை மொத்தமாக அனுப்பும்போது இவ்வசதி மிகவும் பயனளிப்பதாய் இருக்கும். அனுப்பும் நபர் செய்தியை சரியாகக் கவனிக்காமல் அல்லது வதந்தி பரப்பும் நோக்குடன் அனுப்பும்போது அந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை, செய்தி பெறக்கூடிய நபர் உடனே அறிந்துகொள்ள இந்த Search the Web வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு, iOS மற்றும் வாட்ஸ் அப் வெப்பின் சமீபத்திய பதிப்புகளில் இருப்பவர்களுக்கு இவ்வசதி கிடைக்கிறது. தற்போது பிரேசில், இத்தாலி, அயர்லாந்து, மெக்ஸிகோ, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் மட்டும் திங்கள் முதல் "Search the Web" வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள Whatsapp "Beta" பயனர்களுக்கு இவ்வசதி விரைவில் கிடைக்க உள்ளது. பிறகு, இவ்வசதி படிப்படியாக பொது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வதந்திகளையும் போலியான செய்திகளையும் தடுக்க வாட்ஸ் அப்பின் இந்த Search the Web நிச்சயம் பயன்படும் என நம்புவோம்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு