Published:Updated:

வாட்ஸ்அப்பில் கிடைக்க இருக்கும் அட்டகாசமான வசதிகள்! - ஒரு பார்வை! #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

குறிப்பிட்ட வாட்ஸ்அப் உரையாடலின் வலதுபுறம் உள்ள பூதக்கண்ணாடி (Search) பொத்தானைத் தட்டுவதன் மூலம் அது உலாவி (Browser) வழியே குறிப்பிட்ட இணையதளத்துக்கு அழைத்துச் செல்லும்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

உலக அளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தவிர்க்க முடியாத ஒரு தளமாக வாட்ஸ்அப் விளங்குகிறது. தங்கள் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக வாட்ஸ் அப் பல புதுப்புது அம்சங்களை அப்டேட்டுகளாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஆனால், இவ்வாறு வெளியிடப்படும் எந்த ஒரு அம்சமும் உடனடியாகப் பொதுப் பயன்பாட்டிற்கு வந்துவிடுவதில்லை. தனது பீட்டா (Beta) பயனர்களுக்கு மட்டும் புதிய அம்சங்களை முதலில் அளித்து சோதிக்கிறது வாட்ஸ் அப். பீட்டா பயனர்களின் பின்னூட்டங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட அப்டேட்டில் குறைகள் மேம்படுத்தப்படுகின்றன. பின்பு அந்த அப்டேட் பொது பயன்பாட்டிற்கு வருகிறது அல்லது கைவிடப்படுகிறது.

Representational Image
Representational Image
Pixabay

அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் பீட்டா பயனர்களுக்கு,என்னென்ன புதிய வசதிகள் கிடைக்க உள்ளன என வாட்ஸ் அப்பின் WABetaInfo சில தகவல்களை வெளியிட்டுள்ளது. ஒரு வாட்ஸ் அப் பீட்டா உபயோகிப்பாளராக, வருங்கால வாட்ஸ் அப் வசதிகள் குறித்த ஒரு பார வலைதளத்தில் தேடலாம்:

Search the Web:

வதந்தி மற்றும் போலி செய்திகள் பிரச்னையைத் தீர்க்க வாட்ஸ் அப் நிர்வாகம் "Search the web" என்னும் புதியதொரு Update ஒன்றை வழங்கியுள்ளது. தற்போது பிரேசில், இத்தாலி, அயர்லாந்து, மெக்ஸிகோ, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் மட்டும் "Search the Web" வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி செய்தியை இருமுறை சரிபார்க்க எளிய வழியை வாட்ஸ் அப் வழங்குகிறது. குறிப்பிட்ட வாட்ஸ் அப் உரையாடலின் வலதுபுறம் உள்ள பூதக்கண்ணாடி (Search) பொத்தானைத் தட்டுவதன் மூலம் அது உலாவி (Browser) வழியே குறிப்பிட்ட இணையதளத்துக்கு அழைத்துச் செல்லும்.

அங்கு இந்தச் செய்தி உண்மையா, பொய்யா? என உடனடியாக நாம் அறிந்துகொள்ள முடியும். மேலும் செய்தியின் முடிவுகள் மற்றும் அனுப்பியவர் பெற்ற செய்திகளின் உள்ளடக்கத்தைப் பற்றிய பிற தகவல்களின் ஆதாரங்களைக் கண்டறியவும் இது பயனர்களுக்கு உதவும்.

இவ்வசதி உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்று WABetaInfo தெரிவித்துள்ளது.

Representational Image
Representational Image
Unsplash

பல சாதன ஆதரவு:

(Multi-device support)

வாட்ஸ் அப் சில ஆண்டுகளாகவே பல சாதன ஆதரவு என்னும் Linked Devices வசதியைத் தம் பயன்களுக்கு வழங்க முயற்சித்து வருகிறது. இந்த புதிய அம்சத்தினை வழங்குவதற்கான பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்து,

அவற்றை மேம்படுத்தி வருவதாக WABetaInfo வின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஒரே கணக்குடன் பல போன்களில் வாட்ஸ் அப்பை அணுக (அதிகபட்சம் 4 சாதனங்கள்) இந்த அம்சம் பயனர்களை அனுமதிக்கும். நாம் ஒரு புதிய போனை நமது கணக்குடன் இணைக்கும் போது, நமது Chat List இல் இருக்கும் அனைவருக்கும் புதிய போன் இணைக்கப்பட்டதாக தகவல் செல்லும்.

நமக்கு புதிய குறியாக்கம் ( Encryption) கிடைக்கும்.

இவ்வசதி மூலம் அனைத்து Chat களையும் ஒரு போனிலிருந்து மற்றொரு போனிற்கு நகலெடுக்க Card History ஒத்திசைவு அம்சம் பயனர்களுக்குக் கிடைக்கும்.

Representational Image
Representational Image
Pixabay

இந்தப் புதிய அம்சத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, வாட்ஸ் அப் டெஸ்க்டாப்பைப் பயன்படுத்த கணினியில் இணைய இணைப்பு தேவைப்படாது.போனில் மட்டும் இணையத் தொடர்பு இருந்தால் போதுமானது.நமது Chat History அனைத்தும் நாம் பயன்படுத்தும் போன்களில் ஒத்திசைக்கப்படும்.இணைக்கப்பட்ட போன்களை ஏதேனும் காரணத்தால் நாம் நீக்கினால் அப்போதும் அனைத்து Chat List களுக்கும் தகவல் செல்லும்.நமது என்கிரிப்சன் மாறும்.WABetaInfo கூற்றின்படி இந்த அம்சம் விரைவில் Beta பயன்களுக்கு கிடைக்க உள்ளது.

தானாக அழிந்துபோகும் செய்திகள்: (Disappearing messages)

நாம் அனுப்பும் செய்தியை ஒரு மணி நேரத்திற்குள் நாமே அழித்துக்கொள்ளும் வசதி(Delete for everyone) வாட்ஸ் அப்பில் தற்போது உள்ளது. தற்போது இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக, நமது செய்தியைப் பெறுபவர், செய்தியை ஒருமுறை பார்த்ததும் அது தானாகவே அழிந்துவிடும் வகையில் Disappearing messages என்னும் ஒரு அம்சத்தை வாட்ஸ் அப் வடிவமைத்து வருகிறது. ஆனால் இந்த செயல்பாட்டிற்கான நேர வரம்பை நிர்ணயிக்கும் வாய்ப்பு பயனருக்கு கிடைக்க உள்ளது. அதாவது செய்தியானது ஒருமுறை பார்த்ததும் அழிந்துபோக வேண்டுமா அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு செய்தி அழிய வேண்டுமா என்பதைப் பயனர் முடிவு செய்யலாம்.

Representational Image
Representational Image
Pixabay

பயன்பாட்டு வலை உலாவி : (In-app web browser)

வாட்ஸ் அப்பில் வரும் link க்குகளை நாம் Open செய்யும்போது அது குறிப்பிட்ட உலாவிக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

ஆனால் வாட்ஸ் அப் பயனர்கள் பயன்பாட்டை விட்டு வெளியேறாமல், வாட்ஸ் அப்பின் உள்ளே எந்த இணைப்பையும் திறக்க அனுமதிக்கும் In-app web browser வசதியை வாட்ஸ் அப் சோதனை செய்து வருகிறது. இதன்படி வாட்ஸ் அப்பில் ஒரு புதிய உலாவி சேர்க்கப்படும். WABetaInfo இன் கூற்றுப்படி, இந்த அம்சம் தற்போது அதன் சோதனை முயற்சியில் உள்ளது. இவ்வசதி கிடைக்க சிறிது நாட்கள் ஆகலாம். இந்தப் புதிய அம்சம் எந்த ஒரு இணைப்பையும் திறப்பதற்கான நமது நேரத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு