Published:Updated:

`நீங்க எந்த மாநிலம்..?' - ஜெர்மனியில் ஒரு ஃபீல் குட் அனுபவம் #MyVikatan

Representational Image
Representational Image

ஜெர்மனியைப் பொறுத்தவரை ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் முதல் முறை அப்பாயின்மென்ட் வாங்குவதென்பது குதிரைக் கொம்புதான்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பிராங்பேர்ட்ல் லைப்ஜிஜெர் தெருவில் உள்ள ஃபேமிலி டாக்டரிடம் சென்றிருந்தேன். அவர், ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் செல்லுமாறு சீட்டு எழுதித் தந்தார். அப்பாயின்மென்ட் வாங்குவதற்காக போன் செய்தேன், யாரும் எடுக்கவில்லை. குளிர் சற்று குறைவாக இருந்ததாலும் ஸ்பெஷலிஸ்ட் இருக்கும் தெரு அடுத்த ஸ்டேஷனில் இருந்ததாலும், நேரிலேயே போய் அப்பாயின்மென்ட் வாங்குவோம் என்று போனேன்.

Representational Image
Representational Image

ஜெர்மனியைப் பொறுத்தவரை ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் முதல் முறை அப்பாயின்மென்ட் வாங்குவதென்பது குதிரைக் கொம்பு தான். எப்படியும் சில மாதங்கள் ஆகும்.

அங்கு போய், காலிங் பெல்லை அழுத்தினேன். கதவு திறந்தது. முதல் மாடியில் கிளினிக் இருந்தது. படியேறினேன். ரிசப்ஷனில் இளம் பெண் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரின் கலையான முகத்தைப் பார்த்ததுமே நம்ம ஊர்காரர் என்று புரிந்தது. ஃபேமிலி டாக்டர் தந்த சீட்டையும் என் இன்சூரன்ஸ் கார்டையும் கொடுத்தேன்.''

"நீங்க இந்தியாவா" என்றார்.

''ஆமாம்'' என்றேன்.

உடனே ஹிந்தியில் பேச ஆரம்பித்தார்.

Representational Image
Representational Image
True Agency / Unsplash

''எனக்கு ஹிந்தி தெரியாது'' என்றேன். இருவரும் ஆங்கிலத்துக்கு மாறினோம்.

''எப்படியாவது, இந்த மாதத்தில் ஒரு அப்பாயின்மென்ட் தந்தீர்களென்றால் ரொம்ப நன்றாக இருக்கும்'' என்றேன்.

'முயற்சிக்கிறேன்' என்றவர் கம்ப்யூட்டரில் பார்த்து, ''இன்றே இப்போதே நீங்கள் டாக்டரைப் பார்க்கலாம்'' என்றார்.

எனக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். அப்ளிகேஷன் ஃபாமை நிரப்பிக் கொடுத்தேன். காத்திருக்கும் அறையில் வெயிட் பண்ணச் சொன்னார்.

"நீங்கள் எந்த மாநிலம் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்றேன்.

புன்னகையுடன் அவர் சொன்ன பதில், "ஐம் ஃப்ரம் பாகிஸ்தான்!"

-ஜேசு ஞானராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு