சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை எதிரில், தென்னக ரயில்வே தலைமையகத்தை ஒட்டி டீக்கடை நடத்திவருபவர் ராஜீவ். நோயின் வலியால் வாடும் மக்களுக்குப் பசியின் வலியில் இருந்தாவது விடுப்பு அளிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த 7 ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குக் கஞ்சியும், அவர்களைப் பார்த்துக் கொள்ளும் நபர்களுக்கு உணவும் இலவசமாக வழங்கிவருகிறார்.

சிறிய அளவில் தொடங்கிய இந்தப் பணியின் உன்னதத்தை அறிந்து, நண்பர்களைத் தாண்டி பலரும் ராஜீவுக்குப் பணமாகவும், பொருளாகவும் உதவிவருகின்றனர். தங்கள் குடும்பத்தாரின் பிறந்தநாள், நினைவுநாள், சுப நிகழ்வுகளின்போதும் பணமாகவும், பொருளாகவும் அன்னதானத்துக்கு பலர் உதவிக் கொண்டிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பகல் 12 மணிக்கு மதிய உணவும், மாலை 7 மணிக்கு இரவு உணவும் 300 பேருக்குக் குறையாமல் தினமும் வழங்கிவருகிறார். கொரொனா ஊரடங்கின்போது இந்த உணவால் பசியாறியவர்கள் ஏராளம்.

கிராமங்களிலிருந்து வைத்தியம் பார்க்க சென்னைக்கு வருபவர்களிடம் பணம் அதிகம் இருக்காது, அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்; அதுவும் உணவளித்து உதவுவதுதான் சரியானதாய் இருக்கும் என்று நம்புகிறார் ராஜீவ்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ராஜீவின் இந்தச் சேவை பற்றிய காணொலியைப் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்!