Published:Updated:

பிச்சைக்காரரின் ஃப்ரெண்ட்ஷிப் டே! - குட்டி ஸ்டோரி #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

இன்று நேற்று இல்லை. பிச்சைக்காரனை கடை உரிமையாளருக்கு கடந்த 10 வருடமாக தெரியும்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இன்று உலக நண்பர்கள் தினம்.

பேஸ்புக், வாட்ஸப், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் ஒவ்வொருவரும் அவரவர் நண்பர்கள் போட்டோவை பகிர்ந்தும், நினைவுகளை கூர்ந்தும் வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தனர்.

இதனால், ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களும் நண்பர்கள் தினத்தில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி உண்மையில் போற்றத்தக்கதுதான்.

Representational Image
Representational Image
Pixabay

இல்லையேல், உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நண்பனிடமோ, தோழியிடமோ வீடியோ காலில் பேசியும், போஸ்ட்டும் போடுவதும் சாத்தியமாகுமா? அப்படித்தான் இன்று உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அப்படிப்பட்ட நண்பர்கள் தினத்தில் பிச்சைக்காரன் ஒருவன் கடையில் நண்பர்கள் தினத்தை கொண்டாடுவதற்கு 1 கிலோ கேக் வாங்கினான்.

"நான் சொன்ன பேரெல்லாம் இருக்கா" என்று கடைப் பணியாளிடம் கேட்டார்.

"எல்லா பேரும் இருக்கு" என்று கடைக்காரர் காட்டி, கேக்கை தயார் செய்தார்.

பணத்தைக் கொடுக்க கடை உரிமையாளரிடம் வந்தான் பிச்சைக்காரன். கடை உரிமையாளர், `வேண்டாம்’ என்று கூறி, பிச்சைக்காரனுக்கு ஒரு பீஸ் கேக் எடுத்து ஊட்டி விட்டு நண்பர்கள் தின வாழ்த்து சொன்னார்.

பிச்சைக்காரன் நெகிழ்ந்து போனான். இன்று, நேற்று இல்லை. பிச்சைக்காரனை கடை உரிமையாளருக்கு கடந்த 10 வருடமாக தெரியும். அவனின் மனிதநேயம் கொண்டு! புயல், வெள்ளம் பாதித்த பொழுது தான் சேமித்து வைத்திருந்த 1.75 லட்ச ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தவன்.

Representational Image
Representational Image
Pixabay

இது போக அவ்வப்போது கிடைக்கும் காசை சேமித்து தொண்டு நிறுவனங்களிடம் கொண்டு போய் படிக்க முடியாத ஏழை குழந்தைகளின் கல்வி செலவிற்கு பணத்தை கொடுப்பான். இப்படி இவனின் மனிதநேய செயலைப் பற்றி பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அந்த அடையாளம் தான். இன்று கடை உரிமையாளர் நண்பர்கள் தின வாழ்த்து சொல்லி பெருமைப்படுவதும் கூட.

கடை உரிமையாளரிடம் கேக்கை பெற்றுக் கொண்டு சந்தோஷமாக நடந்து வந்தான் நண்பர்கள் தினத்தை கொண்டாடுவதற்கு. சற்று முன்பு வரை இன்று நண்பர்கள் தினம் என்று இவனுக்கு தெரியாது.

சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும்போது, ஒரு இளைஞன் வீடியோ காலில் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் தன் தோழியிடம் நண்பர்கள் தினம் வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தான்.

அவன் பேசுவதை கடக்கும்போது கவனித்தான் பிச்சைக்காரன். நாமும் நண்பர்கள் தினத்தை கொண்டாட வேண்டும் என்று முடிவு பண்ணினான். அதற்காகவே கேக் வாங்கினான்.

இப்பொழுது கேக்கை எடுத்துக்கொண்டு சந்தோசமாக தன் இடத்தை வந்தடைந்தான் பிச்சைக்காரன். சுற்றி, முற்றி பார்த்தான். நண்பர்களை காணோம்.

``கூலையா... கருப்பா... வெள்ளச்சி... ராமு... ஜானு... என்று கூப்பிட, குரலை கேட்ட அடுத்த கணமே 4, 5 நாய்கள்; தவறு இவனின் நண்பர்கள், ஓடி வந்தனர்.

Representational Image
Representational Image
Pixabay

ஓடிவந்து பிச்சைக்காரனை பார்த்து மகிழ்ந்து துள்ளலோடு கொஞ்சி, குலாவின.

"சரி...சரி இன்னைக்கு நாம நண்பர்கள் தினம் கொண்டாடலாமா?என்று கேட்க, நண்பர்கள் குழைந்து, நக்கியபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. கேக்கை பிரித்தான். கேக்கில் நண்பர்கள் பெயர் கூலையன், கருப்பன், வெள்ளச்சி, ராமு, ஜானு இருந்தன. சந்தோசமாய் கேக்கை வெட்டி ஒவ்வொருவருக்கும் ஊட்டி விட்டு மகிழ்ந்தான்.

இனிதே நண்பர்கள் தினம் கொண்டாட்டம் ஆரம்பமானது.

- செந்தில் வேலாயுதம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு