Published:Updated:

எப்பவுமே மாஸ்க்தான் மாஸ்...! - டாப் 10 கொரோனா மூவீஸ்

Representational Image
Representational Image

தங்களை கொரோனா எதுவும் செய்யாது என நினைத்தவர்கள் வழக்கம் போல பேக்கரிகளில் கூடி நின்று டீ ஆற்றினார்கள். அவர்களிடன் நாயகி கபசுர குடிநீர் குடிக்கச் சொல்லும் காட்சி கண்ணீரை வரவழைக்கிறது..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா சூழலை வைத்து கற்பனையாக டாப் 10 மூவிஸ் எனும் கட்டுரையை எழுதியிருக்கிறேன்.. இது ஜாலி பதிவு மட்டுமே..

இந்த வார டாப் 10 மூவ்ஸில் பத்தாவது இடத்தைப்பிடித்தது வேப்பிலைமானி!

இது தொடர்ந்து முதல் அலையில் பரபரப்பாக பேசப்பட்டது. கதாநாயகன் தெர்மாமீட்டர் மருத்துவர்களைத்தவிர மற்றவர்களால் கைவிடப்படுகிறான். முதல் அலையில் டிஜிட்டல் தெர்மா மீட்டர் படாத பாடுப்பட்டது. அதில் பீப் சத்தம் வருவதை தண்டவளத்தில் ரயில் வருவதை தலை வைத்துக் கேட்பது போல காது கொடுத்துக் கேட்க வேண்டும். இந்த பிரச்சனையைத் தீர்க்க ஆராய்ச்சி செய்கிறான் ஹீரோ!

வராத மாமணியாய் கண்டுபிடிக்கப்பட்டது தான் ஐ.ஆர் தெர்மா மீட்டர்! இதில் தூரமாக நின்று நெற்றிக்கு நேராக துப்பாக்கியால் சுடுவதுபோல செய்கிறார்கள். அளவு பதிவாகிறது! அழகாய் இருக்கிறது.. பயமாக இருக்கிறது. வேப்பிலைமானி இது பத்தாவது இடம்.

இதில் காமெடி சீன்கள் கலக்கல் ரகம்! தெர்மாமீட்டரை விழுங்கி விட்டு அதற்கு டாக்டர்கள் கதாநாயகி வாயில் சோப் தண்ணீர் ஊற்றும் காட்சி ரசிக்கும்படி உள்ளது.

Representational Image
Representational Image
Ketut Subiyanto from Pexels

இந்த வாரம் 9 வந்து இடத்தைப்பிடித்தது கபசுரம்!

இது முதல் வாரங்களில் நன்றாக ஓடியது. இது ஹீரோயின் சப்ஜெக்ட்! ஹீரோயினின் அப்பா கொரோனாவில் பாதிக்கப்பட்டு ஒரு சொட்டு கபசுர குடிநீர் கிடைக்காமல் உயிரிழக்கிறார். அவரின் நினைவாக வெயிற்காலத்தில் ரோட்டோரமாக தாகம் தணிக்க மோர் வழங்குவது போல வழியில் ஆங்காங்கே கபசுர குடிநீர் தருவதும், மரண பயத்தில் இருந்தவர்கள் வாங்கிக் கொடுப்பதுமான சேவைகளைச் செய்கிறாள். இதனால் கபசுர குடிநீர் விற்பனையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுக்கிறார்கள். அவர்கள் சிண்டிகேட் போட்டு ஹீரோயினை கொல்லப்பார்க்கிறார்கள். அதிலிருந்து தப்பித்தாரா என்பது தான் கிளைமாக்ஸ்!

தங்களை கொரோனா எதுவும் செய்யாது என நினைத்தவர்கள் வழக்கம் போல பேக்கரிகளில் கூடி நின்று டீ ஆற்றினார்கள். அவர்களை கபசுர குடிநீர் குடிக்கச் சொல்லும் காட்சி கண்ணீரை வரவழைக்கிறது..

கபசுரம்மா.. காரமம்மா! ஒன்பதாவது இடம்!

இந்த வாரம் டாப் மூவ்ஸ்லில் எட்டாவது இடம் பிடித்தது மூக்குத்தி ஆவி!

இது பக்திப்படம்! இதில் ஆவிப்பிடிப்பதை பேய் பிடிப்பதாக கதைக் கட்டிவிடுகிறார்கள். இதைக் கண்டு ஊர்மக்கள் கொரோனாதேவியிடம் முறையிடுகிறார்கள். கொரோனாதேவி புரளிப் பரப்புவர்களை துரத்தி துரத்தியடிப்பது தான் கதை.

இது எம்.ஜி.ஆர், நம்பியார் காலத்தில் வேதுபிடி! காதுபிடி!! என்ற பெயரில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இதில் மஞ்சள்,வேப்பிலை எனக் கிருமி நாசினிகளை ”தலை”யைத்திருகி உள்ளே போட்டுக் கொதிக்க வைத்து மூக்கினை சிந்த வைத்தார்கள். அப்புறம் விக்ஸ் கதாநாயகனாக நடித்து ”ஆவியானவள்” என்ற பெயரில் டிஜிட்டல் முறையில் வெளியாகி வெள்ளி விழாக் கண்டது. பின்னர் டால்பின் சவுண்ட் சிஸ்டமாக நெபுலைசரில் ஆவி பிடிப்பதும், பின் பஸ் ஸ்டேண்டாண்டில் மாஸாக ஆவி பிடிக்கப்போய் கூட்டத்தைக் கலைக்க போலீசாருக்கு ஆவியே போய்விட்டது. ஆவி இது எட்டாவது மூவி!

ஆவி பிடித்தல்
ஆவி பிடித்தல்

ஏழாம் இடத்தில் கழுவும் கரங்கள்!

இதில் விலங்குகள் மட்டுமே நடித்து உள்ளன. விலங்குகளுக்கு பொதுவாக கை கழுவும் பழக்கம் இல்லையென்பதால் புதிய சானிடைசர் அறிமுகம் செய்யப்படுகிறது. பழமைவாத விலங்குகள் இந்த மாற்றத்தை எதிர்க்கின்றன. முற்போக்கு வாதிகள் கை கழுவும் இயக்கத்தை ஆரம்பிக்கிறார்கள். அது எவ்வாறு வெற்றிபெற்றது என்பது தான் ஒரு வரி கதை. ஒரு கட்டத்தில் குபுக்கென்று குபுக்கென்று கொட்டித் தீர்த்தவர்களால் போன வருடம் முதலிடத்தில் இருந்த சானிடைசர் இந்த வருடம் திரும்பவும் ரீலிஸ் ஆகியது. மிச்சமான சானிடைசரில் கண்ணாடி தொடைப்பது, வீட்டில் தெளிப்பது என அது முக்கியவத்தை இழந்தது. ஆனாலும் இன்னும் சிலர் பாக்கெட்டில் வைத்து சுற்றிக்கொண்டிருப்பதாலு, இன்னும் கொஞ்சம் விழிப்புணர்வு உள்ளதால் இந்த வாரம் அது ஏழாம் இடத்தைப் பிடிக்கிறது.

ஆறாம் இடத்தில் இருப்பது ”பாசிட்டிவ் ஆனா உனக்கென்ன?”

இதில் வில்லனுக்கு பாசிடிவ் ரிசல்ட் வருகிறது. அவன் அதை உலகம் முழுக்க பரப்ப திட்டமிடுகிறான். அதற்காக உலகம் முழுவதும் ஒரு நெட் வொர்க் ஏற்படுத்தி தும்மல், இருமல் வருவது போன்ற மாத்திரைகளை விற்க முயற்சிக்கிறான். அந்த மாத்திரைகள் விழுங்கியவர்கள் விடாமல் 1000 தும்மல்,500 இருமல் வருகிறது. அதனால் வைரஸ் பரவுகிறது. அதை டாக்டர் கூட்டம் ஒன்று சேர்ந்து முறியடிக்க திட்டமிடுகிறார்கள். அந்த மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலையில் மாறுவேசத்தில் உள்ளே புகுகிறார்கள். அவர்கள் வெற்றிபெற்றார்களா என்பது தான் கதை.

ஆறாம் இடத்தில் இருக்கும் பாசிட்டீவ் ஆனா உனக்கென்ன… ஐந்தாம் இடத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டதால் நேரிடையாக நான்காம் இடத்திற்கு போவோம்.

Representational Image
Representational Image
cottonbro from Pexels

நான்காம் இடத்தில் இருப்பது ஆக்சி மீட்டர்.

இதில் கதாநாயகி ஆக்சிஜன். வில்லனால் கடத்தப்படுகிறாள். அதன் வேகம் 94 க்கு கீழே போகும் போது படம் பார்ப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் வந்து விடுகிறது. பின்னார் ஆக்சிஜன் சிலிண்டருக்குள் புகுந்து கதாநாயகி தப்பி வருவது தான் கதை. இதில் ஒளிப்பதிவு படு பயங்கரம். நான் ஆக்ஸி! நான் பாக்ஸி என்ற பாடலுக்கு நடனம் இமயலையில் ஆக்சிஜன் சிலிண்டர்களோடு ஏறுவது போல படமாக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது இடத்தில் சி.டி.ஸ்கேன்.

படத்தின் கதாநாயகன் நுரையீரல் கொரனாவால் பாதிக்கப்படுகிறார். அது எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறான்? அதை எப்படி முறியப்படுப்பது என்பது தான் கதை.

பிரிய மானவனே! – உன்னைப்

பிரியவா பிரியப்பட்டேன்?

பிராண வாயு

பிரிந்து போனால்

நுரையீரல்…

குறையீரல் ஆகாதா? – பின்

கொஞ்சம் கொஞ்சமாய்ச்

சாகாதா?

( அவதார புருஷன், பக் 54,வாலி)

என்ற பாடல் பட்டித்தொட்டியெல்லாம் ஒலிக்கிறது

Representational Image
Representational Image

இரண்டாவது இடத்தைப்பிடிப்பது தடுப்பூசி.

தொடக்கத்தில் காத்து வாங்கியது. பின்னர் படிப்படியாகக் கூட்டம் அலைமோத, இப்போது டிக்கெட்ட் கிடைக்காமல் திண்டாட்டம். இதில் பார்ட் 2 வேறு! ஒன்றிய அரசா? மத்திய அரசா? என்ற விவாதத்தை இரவில் கட்டில் போட்டு வரிசையில் நின்று கூட பேசுகிறார்கள். இதில் கோவாக்சின், கோவி ஷீல்ட் என இரு வேடங்கள். கோவாக்சீனை அன்னிய சக்தி ஸ்டிபுனிக் கடத்தி வைத்திருப்பதால் முதல் டோஸ் கோவாக்சின் போட்டவர்கள் இரண்டாம் டோஸ் போட முடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்த பாதிப்பைக் கேள்விப்பட்ட அண்ணன் கோவிஷீல்ட் தம்பி கோவாக்சினை மீட்பது தான் விறுவிறுப்பு

டிரெண்டில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது மாஸ்க் தான்.

இதில் கதாநாயகன் மாஸ்கி! சிலர் சட்டவிரோதமாக மாஸ்க் போடாமல் சுற்றுகிறார்கள். கதாநாயகன் மாஸ்கி பகலில் மாஸ்க் போட்டுக்கொண்டு திரிந்து மாஸ்க் போடாமல் சுற்றுபவர்களை அடையாளம் காண்கிறான். அவர்களுடைய விபரங்களைப் புலனாய்வு செய்து கண்டுபிடிக்கிறார். மாஸ்க் போடாமல் பெரிய மாபியா கும்பல் சுற்றி வருவதை அறிகிறான். தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் இருக்க மாஸ்க் இல்லாமல் அவர்களின் கோட்டைக்குள் புகுந்து அவர்களை வீதிக்கு கொண்டு வந்து மாஸ்க் போட வைப்பது தான் கதை.

Representational Image
Representational Image

மாஸ்க்ன்னு மாஸ்க் தான்… மயிலாடுதுறை மாஸ்க்… என்ற பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் மாஸ்க் போட வைத்து ஆட வைக்கும் மாஸ் டான்ஸ்!

இந்த வாரமும் டாப் டென்னில் நம்பர் ஒன்னாக இருப்பது மாஸ்க் தான்!

மீண்டும் அடுத்த வாரம் இதே டாப் டென்னில் உங்களை சந்திக்க இருப்பது உங்கள் அறிவிப்பாளர் கொரனாஸ் ரவி!

-பாங்கன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு