Published:Updated:

கோவிட் கோமா..! - குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Alena Darmel from Pexels )

திடீரென்று வருண் " அம்மா!! அம்மா!!! இங்க வாயேன் அப்பா கண்ணு முழிச்சு ஒட்கார்ந்திருக்காரு" என்று உற்சாகமாக கத்தினான்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வருண்!!! டேய் வருண்!!!! "நா குளிக்க போறேன். கவர்மென்ட் வண்டில காய்கறிகள் வரும். வாங்கி வெச்சிடு. விட்டேனா அப்றம் ஒரு வாரத்துக்கு காய் இல்ல சொல்லிட்டேன்" என்றாள் வருணின் அம்மா சாந்தி.

சரிம்மா சரிம்மா. பொலம்பாத நா வாங்கி வெக்கரேன் என்று சற்றே எரிச்சலுடன் கூறினான் வருண்.

"ஆமாடா நா சொல்றது உனக்கு கடுப்பாதான் இருக்கும். உங்க அப்பா வேற 2020 ல இனிமே பெர்மனென்ட் லாக்டவுன்னு நியூஸ்ல சொன்னத கேட்டு அதிர்ச்சி ல கோமா போனவர்தான். இன்னும் எழுந்துக்கலை. அந்த பெருமாள் தான் ஒரு வழி காட்டணும்" என்று அங்கலாய்த்துக் கொண்டே பாத்ரூமில் நுழையப் போனாள்.

திடீரென்று வருண் " அம்மா!! அம்மா!!! இங்க வாயேன் அப்பா கண்ணு முழிச்சு ஒட்கார்ந்திருக்காரு" என்று உற்சாகமாக கத்தினான்.

Representational Image
Representational Image
Pexels

தப தபவென்று சாந்தியும் ரூமிற்குள் ஓடினாள். அங்கு எங்கு இருக்கிறோம் என்ன என்று புரியாமல் மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தார் அப்பா. டீவியில் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது. "சமூகப் பரவல் நம் மாநிலத்தில் இன்னும் இல்லை என முதல்வர் கூறிக்கொண்டு இருந்தார்" . அதைப் பார்த்து "ஹப்பா கொஞ்ச நேரம் அசந்து தூங்கிட்டேன் போலருக்கு" என்று திருப்தி பட்டு கொண்டார். ஆனால் ஆண்டு 2023 என்று காலண்டர் காட்டியது கண்டு அதிர்ச்சியாகி "என்னது 2023 ஆஆஆஆ" . ஏய் சாந்தி என்னடீ இது மூணு வருஷமாவா இப்படி இருக்கேன்" .

அட ஆமாங்க அன்னிக்கு மாவாட்டிட்டு இருந்தீங்க அப்போ நியூஸ்ல கொரோனாவ கட்டுப்படுத்த இனிமே பெர்மனென்ட் லாக்டவுன் யாரும் எக்காரணத்துக்கும் இனிமே வெளிய வரக்கூடாதுன்னு சொன்னாங்க . அதக்கேட்டு நீங்க மயங்கி விழுந்துட்டீங்க. நா பதறிட்டேங்க" .

மின்னலாய் ஒரு தெளிவு! - லாக் டெளன் டைரீஸ் #MyVikatan

அப்பா மைன்ட் வாய்ஸில் "நம்ம மேல இவ்ளோ பாசமா" அப்டின்னு கண்ணோரமா வந்த தண்ணிய தொடைச்சிக்கிடட்டே"அப்றம் என்னடீ பண்ண" என்று எமோஷனலா கேட்டார்.

"அப்றம் என்ன மிச்ச மாவ வருண் ஆட்டி கொடுத்தான்". அப்பா கடுப்பாகி மொறைக்க, உடனே சாந்தி "சரி சரி சும்மா கலாய்ச்சேங்க என்றுவிட்டு "டாக்டர் நீங்க அதிர்ச்சி ல கோமா போயிட்டீங்க . எப்ப வேணா எழுந்துப்பீங்க . டெய்லி நல்ல விஷயங்களா பேசுங்க அவர்கிட்ட னு சொன்னார்.

"நா பேசினா நீங்க கேக்க மாட்டீங்கனு வருண் தான் டெய்லி பேசுவான். "இன்னிக்கு என்னடா சொன்ன? அப்பா உடனே எந்திரிச்சுட்டார்"

"அதுவாம்மா கொரோனாவால நா +2 வரைக்கும் எப்படியோ பாஸ் பண்ணிட்டேன்னு சொன்னேன் அதான் " என்று கண்ணடித்தான் வருண்.

உடனே அப்பா " டேய் இதெல்லாம் அநியாயம் டா. நீ 10th பாஸ் பண்ணுவியானு நா கவலைப்பட்டுட்டு இருந்தேன் . இப்ப +2 வரைக்கும் ஓட்டிட்டயே " .

"அதெல்லாம் விடுங்க நீங்க எழுந்துட்டா திருப்பதி பெருமாள பார்க்க வரேன்னு வேண்டிக்கிட்டேன். வருண் மொதல்ல தரிசனத்துக்கு புக் பண்ணுடா" என்றுவிட்டு குளிக்கச் சென்றாள் சாந்தி.

Representational Image
Representational Image
Pixabay

"ஆமாடா மொதல்ல திருப்பதி போயிட்டு வந்துடலாம். சீக்கிரம் புக் பண்ணு" என்று அப்பா கூற, " அட அப்பா வெளிலலாம் எங்கயும் போக முடியாது. ஜெயில்ல போட்டுருவாங்க. எல்லாம் விர்ச்சுவல் தரிசனம் தான். நாம தரிசனம் புக் பண்ணதும் நமக்கு தரிசனம் என்னிக்கு என்ன டைம்லனு மெயில் அனுப்பிருவாங்க. அப்றம் கொரியர்ல VR (Virtual Reality) glasses அனுப்பிடுவாங்க. அதைப் போட்டுக்கிட்டு கம்ப்யூட்டர் முன்னாடி ஒக்காந்தோம்னா பெருமாள் கிட்டக்க அழகா தெரிவார். ஜருகண்டி சவுண்ட் கூட கேட்கும்பா" என்று வருண் விளக்கிக்கூற அப்பா வியப்பின் உச்சத்துக்கே போனார்.

அப்போ சாந்தி குளித்து முடித்து பட்டு படவை பளபளக்க வந்தாள். அப்பா ஆச்சரியமாய் "என்னடீ எங்க புறப்பட்டுட்ட?"

"நம்ம எதிர்த்த ஃப்ளாட் மாமியோட பையன் கல்யாணம்க இன்னிக்கு" என்றாள் சாந்தி.

"பரவால்லயே. ரொம்ப வருஷமா தேடிட்டு இருந்தாங்கல்ல. பொண்ணு யாரு? "

"நம்ம பக்கத்து தெருதாங்க" என்று சாந்தி கூற , அப்பா "ஆமா, இப்பதான் இவன் வெளிய போனா ஜெயில் சொன்னான். நீ மட்டும் கல்யாணதுக்கு எப்படி போவ? "

"இல்லங்க எல்லாமே ஜூம்ல தான். மீட்டிங் ஐடி பாஸ்வேர்டு அனுப்பி இருக்காங்க எல்லார்க்கும்" என்றாள் .

"ஆமாம் பா யார்லாம் கல்யாணம் அட்டென்ட் பண்றாங்களோ அவங்களுக்கு லாம் அவங்களே ஆன்லைன் ல லன்ச் ஆர்டர் பண்ணிட்டாங்க" என்று உற்சாகத்தோடு கூறினான் வருண்.

"அப்ப அவங்க பையன் அமெரிக்காவுல இருந்து வந்துட்டானா? "

"அய்யோ அமெரிக்காலேர்ந்து இன்னும் 5வருஷத்துக்கு ஃப்ளைட் இல்ல" .

" ஏன் டீ குழப்பற? அப்ப கல்யாணம் எப்படி? " என்று அப்பா குழம்ப

"அட அதுவும் ஆன்லைன் தாங்க. அவன் மொபைல் கு தாலி கட்டுவானாம். மாமி தான் சொன்னாங்க".

இதைக்கேட்டு அதிர்ச்சியின் உச்சநிலைக்கே சென்ற அவர் தொப்பென்று மயங்கி விழுந்தார்.

அய்யய்யோ!!!!! என்னங்க என்னங்க!!!!!!!!!

(முற்றும்)


-ரேகா சத்யநாத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு