Published:Updated:

`அமைதிக்கான நடை' - 46 நாடுகளில் நடந்து அமைதி பரப்பிய நிதின் சோனாவனே!

நிதின் சோனாவனே

முடிந்த அளவு அகிம்சையை நிலைநாட்டினால் மனிதாபிமானத்தின் எதிர்காலமாய் காந்தி பூஜிக்கப்படுவார். என்னால் முடிந்த அளவு அகிம்சையை நிலைநாட்ட என் பங்கை நான் கொடுத்துக்கொண்டே இருப்பேன்.

`அமைதிக்கான நடை' - 46 நாடுகளில் நடந்து அமைதி பரப்பிய நிதின் சோனாவனே!

முடிந்த அளவு அகிம்சையை நிலைநாட்டினால் மனிதாபிமானத்தின் எதிர்காலமாய் காந்தி பூஜிக்கப்படுவார். என்னால் முடிந்த அளவு அகிம்சையை நிலைநாட்ட என் பங்கை நான் கொடுத்துக்கொண்டே இருப்பேன்.

Published:Updated:
நிதின் சோனாவனே

நடை பயணங்களின் மூலம் உலக அமைதியை நிலைநாட்டும் முயற்சியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளில் நடந்தே வலம் வந்துகொண்டிருக்கிறார் நிதின் சோனாவனே. இதுவரை 46 நாடுகளில் தனது நடைப்பயணத்தால் அகிம்சை, அமைதி மற்றும் காந்தியக் கொள்கைகளை இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பரப்பியுள்ளார். தகவல் தொழில்நுட்பப் பட்டதாரியான இவர், நவம்பர் 2016-ல் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு அருகிலுள்ள தனது சிறிய நகரமான ராஷினை விட்டு வெளியேறினார்.

நிதின் சோனாவனே
நிதின் சோனாவனே
இந்தியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், சீனா, ஹாங்காங், ஜப்பான், அமெரிக்கா, மெக்சிகோ, குவாத்தமாலா, ஹோண்டுராஸ், எல் சால்வடார், நிகரகுவா, கோஸ்டாரிகா, பனாமா, கொலம்பியா, ஈக்வடார், பெரு, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, தான்சானியா, ருவாண்டா, உகாண்டா, கென்யா, எத்தியோப்பியா, சூடான், எகிப்து ஆகிய நாடுகளில் நடந்தும், சைக்கிள் ஓட்டியும் காந்தியக் கொள்கைகளைப் பரப்பிவரும் இவர், தன்னை ‘காந்தியன் பீஸ் வாக்கர்’ (Gandhian Peace Walker) என்று அழைத்துக்கொள்கிறார். சென்னைக் காலநிலைச் செயல்பாட்டுக் குழு ஒருங்கிணைத்த சூழல் சமூக நீதி நடைபயணத்துக்காக சென்னை வந்திருந்த நிதினுடன் ஓர் உரையாடல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“நீங்கள் ஏன் நடக்கிறீர்கள்; உங்கள் நடைகளின் மூலம் நிகழ்ந்த மாற்றங்கள் ஏதேனும் உண்டா?”

“நான் 17 வயதிலிருந்தபோது புத்தரின் நெறிகளால் கவரப்பட்டு உண்மையைத் தேடி என் வீட்டை விட்டு வெளியேறினேன். மகாத்மா காந்தியினுடைய அகிம்சை கொள்கையை உலகெங்கும் பரப்ப வேண்டும் என்று முடிவெடுத்தேன். கூட்டிலிருந்து வாழ நினைத்தால் நம்முடைய கொள்கைகளும் திடமாகிவிடும், நம்மை நாமே விரிவுபடுத்திக் கொண்டால்தான் நம் திட்டங்களுக்கான செயலாக்கமும் விரிவடையும் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் என் வாழ்வில் இது ஒரு மிகப்பெரும் மாற்றத்தை அமைத்துத் தந்தது. உலகம் ஒரு குடும்பமாய் இருத்தல் அவசியம் என்பதை உணர்ந்து எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தின் வழி என் பயணத்தைத் தொடங்கினேன். இன்றில்லை எனினும் நிச்சயம் ஒருநாள் எனது நடைகளின் வழி மாற்றம் கண்டடைவேன்.”

நிதின் சோனாவனே
நிதின் சோனாவனே

“ஆங்கிலம் பேசப்படாத நாடுகளுக்குச் சென்றால் அந்தப் பகுதி மக்களை எவ்வாறு தொடர்பு கொள்வீர்கள்?”

“பெரும்பாலான இடங்களில் ஆங்கிலம் அறியாத மக்களைச் சந்திக்கும் சூழல் அமையும். முடிந்த அளவு கூகுள் ட்ரான்ஸ்லேட் பயன்படுத்துவேன், அல்லது அந்தப் பகுதி மக்களில் ஆங்கிலம் தெரிந்தவரைத் துணைக்கு வைத்துக் கொண்டு மக்களிடம் தொடர்புகொள்வேன். மேலும் பள்ளி, கல்லூரிகளில் உரையாற்றும்போது தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களை நியமித்து என் கருத்துக்களைத் தெரிவிப்பேன்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“உங்கள் பயணங்களில் நீங்கள் மறக்க முடியாதபடி நிகழ்ந்த சம்பவம் ஏதேனும் உண்டா?”

“மறக்கமுடியாத நிகழ்வுகள் ஏராளம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் எத்தியோப்பியாவின் ஒரு பகுதியில் என் நடையைத் தொடங்கியபோது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் ஏனோ என் மேல் கல்லெறிய ஆரம்பித்துவிட்டார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்கள் என்னிடம் காசு கொடுக்கச் சொல்லிக் கேட்டார்கள். காசைக் கொடுக்காமல் என்னுடன் ஒரு கிலோமீட்டர் தூரம் பயணிக்க வைத்தேன். பயணத்தில் ஏராளமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டேன். முடிவில் தாங்கள் காசு கேட்டதையும் கல்லெறிந்ததையும் நினைத்து வருந்தி எனக்கு நன்றிகூறி விடைபெற்றனர். இதேபோல செர்பியாவில் நாங்கள் குடில் அமைத்துத் தங்கியிருந்த பகுதியில் எங்களை அகதிகள் என நினைத்த மக்கள் எங்கள் மீது கல்லெறிய ஆரம்பித்தனர். பின் அவர்களிடம் பேசிப் புரியவைத்த பிறகு அதே பகுதியைச் சேர்ந்த ‘Hope' (செர்பியன் பெயரின் அர்த்தம்) என்ற மூதாட்டி எங்களுக்குப் பழங்கள் அளித்து வழியனுப்பினார். நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களின் 99 சதவிகிதம் நல்ல மனிதர்கள் மட்டும்தான். மனிதாபிமானம் நிறைந்தவர்கள் மனிதர்கள் என்பது இவ்விரு சம்பவங்களின் மூலம் நான் உணர்ந்தது.”

நிதின் சோனாவனே
நிதின் சோனாவனே

“இனவாதமும் மதவாதமும் உலக அமைதிக்கு இடையூறாக இருக்கின்றன. இவை இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று எவ்வாறு வேறுபடுகின்றன?”

“இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. இந்தியாவிலும் இனவாதம் இருந்திருக்கிறது. மதவாதம் அண்டை நாடுகளிலும் இருந்திருக்கிறது. மார்ட்டின் லூதர் கிங் தென்னிந்தியா வந்திருந்தபோது கல்லூரியில் அவரைத் தீண்டத்தகாதவர் என்று அறிமுகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. அப்போதுதான் அவர் தன் நாட்டில் அனுபவித்த இனவாதம் இந்தியாவில் வேறு பெயரில் உருவெடுத்து இயங்குகிறது என்பதை உணர்ந்தார். ஆகவே இனவாதம் மதவாதம் இரண்டுமே குறிப்பிட்ட சில கட்டமைப்புகளால் மனிதர்களைத் தாழ்மைப்படுத்திப் பார்த்தல் ஆகும். இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.”

“அகிம்சைக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் நீங்கள் நடந்தால் அதன் உச்சநிலையை உலகம் அடைய முடியும் என்று நினைக்கிறீர்கள்?”

“அகிம்சையின் உச்சநிலை என்பது ஒரு காலத்திலும் சாத்தியமே இல்லை. ஏற்ற இறக்கங்கள் எப்போதும் இருக்கும். ஆனால், முற்காலங்களில் வைத்துப் பார்க்கும்போது தற்காலத்தில் வன்முறைகளுக்கான சதவிகிதம் குறைந்து கொண்டுதான் வருகிறது. மனிதர்களுக்கு இடையே நிகழும் வன்முறைகள் குறைந்து நாடுகளுக்கிடையே இருக்கும் சச்சரவுகள்தான் அடுத்ததாகக் குறைய வேண்டும். முடிந்த அளவு அகிம்சையை நிலைநாட்டினால் மனிதாபிமானத்தின் எதிர்காலமாய் காந்தி பூஜிக்கப்படுவார். என்னால் முடிந்த அளவு அகிம்சையை நிலைநாட்ட என் பங்கை நான் கொடுத்துக்கொண்டே இருப்பேன்.”

நிதின் சோனாவனே
நிதின் சோனாவனே

“நீங்கள் பயணிக்கப்போகும் அடுத்த நாடு எதுவாக இருக்கும்?”

“அடுத்ததாகப் பாகிஸ்தானில் நடைப் பயணத்தை மேற்கொள்ளலாம் என்றிருக்கிறேன். மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபயணம் தொடங்கப்படும். மக்களைத் தொடர்பு கொள்ளவும் கலந்துரையாடவும் பல விஷயங்களை கற்றுப் பழகவும் நடைபயணங்களே சிறந்த வழியாகும்.”

-சுபஸ்ரீ

(பயிற்சிப் பத்திரிகையாளர்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism