Published:Updated:

"பூமியைத் தூய்மைப்படுத்துவோம் - பசுமையான பூமியாக்குவோம்" நடவடிக்கையில் GGHC மருத்துவர்கள்!

GGHC மருத்துவர்கள் ( Photogenic )

GGHC ஐச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒன்று சேர்ந்து, இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்க, 20 கி.மீ சைக்ளோத்தானில் பங்கேற்று உத்தண்டி கடற்கரையைச் சுத்தம் செய்தனர்.

"பூமியைத் தூய்மைப்படுத்துவோம் - பசுமையான பூமியாக்குவோம்" நடவடிக்கையில் GGHC மருத்துவர்கள்!

GGHC ஐச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒன்று சேர்ந்து, இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்க, 20 கி.மீ சைக்ளோத்தானில் பங்கேற்று உத்தண்டி கடற்கரையைச் சுத்தம் செய்தனர்.

Published:Updated:
GGHC மருத்துவர்கள் ( Photogenic )
சென்னையில் உள்ள ஒரு முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி மூன்றாம் நிலை பராமரிப்பு மையமான கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC), "பூமியை தூய்மைப்படுத்துவோம் - பசுமையான பூமியாக்குவோம்" என்ற கருப்பொருளில் ஒரு சைக்ளோத்தானை நடத்தி அதனைத் தொடர்ந்து சென்னை உத்தண்டி கடற்கரையில் சுத்தம் செய்வதன் மூலம் தேசிய மருத்துவர் தினத்தைக் கொண்டாடியது.

GGHC ஐச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒன்று சேர்ந்து, இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்க, 20 கி.மீ சைக்ளோத்தானில் பங்கேற்று உத்தண்டி கடற்கரையை சுத்தம் செய்தனர். கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டாக்டர் அலோக் குல்லார் சைக்ளோத்தானை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

GGHC மருத்துவர்கள்
GGHC மருத்துவர்கள்
Photogenic

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

GGHC இல் உள்ள மருத்துவர்கள், நமது பூமி அன்னைக்கு நன்றி: “பூமியை தூய்மைப்படுத்துவோம் - பசுமையான பூமியாக்குவோம்” என்ற கருப்பொருளுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் தூய்மையான சூழல் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதில் கவனம் செலுத்தினர். கடற்கரையை சுத்தப்படுத்தியதால் குப்பைகள் சேகரிக்கப்பட்டன, அவை மாநகராட்சி விதிமுறைகளின்படி அகற்றப்பட்டன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிகழ்வில் பேசிய கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டாக்டர் அலோக் குல்லார், “இது மருத்துவர்களின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆரோக்கியமான சமூகத்தின் மிக முக்கியமான தூண்களாக இருப்பவர்கள் மருத்துவர்கள், மேலும் "ஆரோக்கியமான வாழ்க்கை" மற்றும் "பசுமைக்கு செல்லுங்கள்" என்ற செய்தியை பரப்புவதற்கு அவர்களின் ஈடுபாடு ஒரு உன்னதமான வெளிப்பாடாகும்.

GGHC மருத்துவர்கள்
GGHC மருத்துவர்கள்
Photogenic

மனிதாபிமானமுள்ள சுகாதார வழங்குநர்கள் என்ற முறையில், நாமே சைக்கிள் ஓட்டி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் வாழ பொதுமக்களை ஊக்குவிப்பதன் மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், நோயாளிகள் தெரிவிக்கும் நன்றிக்கு கைமாறு செய்யும் வாய்ப்பாக நாங்கள் இதைப் பார்க்கிறோம். எங்கள் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் இயக்கமானது நமது சமூகத்திற்கு 'பசுமையான பூமியாக்குவோம்’ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு அடையாள வெளிப்பாடாகும், அதன் மூலம் எங்கள் மருத்துவர்கள் நமது பூமிக்கும் சமூகத்திற்கும் தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர்.

GGHC மருத்துவர்கள்
GGHC மருத்துவர்கள்
Photogenic

மக்கள் பசுமைக்கு செல்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும் நடைமுறைகளை பின்பற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.