Published:Updated:

கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி: ஊடகவியலாளர்களுக்கு `Privilege Card' செயல்திட்டம்!

கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி ( Photogenic )

ஊடகத்துறையைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான நிழற்படக் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இலவச உடல்நலப் பரிசோதனைகளை இதன்மூலம் செய்து கொள்ளலாம்.

கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி: ஊடகவியலாளர்களுக்கு `Privilege Card' செயல்திட்டம்!

ஊடகத்துறையைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான நிழற்படக் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இலவச உடல்நலப் பரிசோதனைகளை இதன்மூலம் செய்து கொள்ளலாம்.

Published:Updated:
கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி ( Photogenic )

கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC), பெரும்பாக்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஊடகத்துறையைச் சேர்ந்த 200 நிழற்படக் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஒரு சிறப்புரிமை (பிரிவிலேஜ்) அட்டையை வழங்கியது. சென்னை, கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் தலைமை செயல் அலுவலர் டாக்டர். அலோக் குல்லார், இந்நிகழ்வின்போது தமிழ்நாடு பத்திரிகை நிழற்படக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான திரு. ஜோதி ராமலிங்கம் அவர்களிடம் மருத்துவ சேவைக்கான இந்த சிறப்பு அட்டையை வழங்கினார். இந்த அட்டை திரு. மாண்புமிகு தமிழ்நாடு சுகாதார, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களால் வெளியிடப்பட்டு, சென்னை கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அலோக் குல்லார் முன்னிலையில், தமிழ்நாடு பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்கள் சங்கத் தலைவர் ஜோதி ராமலிங்கம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஊடகப் பணியாளருக்கும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் 6 இலவச மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு (வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்) சிறப்பு நிபுணர்களுடன் கலந்தாலோசனை கட்டணங்கள் மீது 50% தள்ளுபடி மற்றும் நோயறிதல் பரிசோதனைகள் மீது 25% தள்ளுபடி மற்றும் இலவச உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒருமுறை அன்பளிப்பாக உடல்நல பரிசோதனை ஆகிய சேவைகளைப் பெற இந்த பிரிவிலேஜ் (சிறப்புரிமை) அட்டை அவர்களை தகுதியுள்ளவர்களாக ஆக்குகிறது. இந்த உறுப்பினர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் (திருமணமாகாத / திருமணமான தம்பதியர், 18 வயதுக்கு கீழ்ப்பட்ட இரு பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள்) மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு பலன்களைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெளியீட்டு விழாவில் பேசிய திரு. மாண்புமிகு தமிழக சுகாதார, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “டாக்டர். அலோக் குல்லார், தலைமை நிர்வாக அதிகாரி, TNCMCHIS மற்றும் அத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகளை வெகுவாகப் பாராட்டினார். 900க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் TNCMCHISன் கீழ் பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை உள்ளடக்கிய பலன்களைப் பெறலாம். புகைப்பட பத்திரிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் அரசாங்க திட்டங்களை முன்னிலைப்படுத்தவும், அவற்றைப் பொதுமக்களிடம் பரப்பவும் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியைச் சேர்ந்த டாக்டர் அலோக் குல்லரைப் போன்ற பலர் பொதுமக்களுக்கு உதவ முன்வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறினார்.

தமிழ்நாடு பத்திரிகை நிழற்படக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான திரு. ஜோதி ராமலிங்கம், கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC) நிர்வாக குழுவிற்கு இதற்காக நன்றி தெரிவித்து பேசியதாவது: கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி வழங்கியிருக்கும் இந்த பிரிவிலேஜ் (சிறப்புரிமை) அட்டை, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் எமது ஒட்டுமொத்த ஊடக நிழற்படக் கலைஞர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். கோவிட் பெருந்தொற்று காலம் முழுவதிலும் அதன் பாதிப்புகளைப் பொருட்படுத்தாது தொடர்ந்து எங்களது பணியை நாங்கள் செய்து வந்திருக்கிறோம். இக்காலகட்டத்தில் எங்களுள் பெரும்பாலானோருக்கு கோவிட் உட்பட. பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்பட்டன. கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி கனிவுடன் வழங்கியிருக்கும் இந்த நல்லெண்ண நடவடிக்கையை நாங்கள் மனமுவந்து பாராட்டுகிறோம் மற்றும் இத்தருணத்தில் எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னை, கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC)– ன் தலைமை செயல் அலுவலர் டாக்டர். அலோக் குல்லார் பேசுகையில், “நம் சமுதாயத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த நிழற்படக் கலைஞர்கள் மிக முக்கியப் பங்கை ஆற்றி வருகின்றனர். நம்மைச் சுற்றியும், உலகிலும் நடைபெறுகின்ற சமீபத்திய நிகழ்வுகள் பற்றி நேரடித் தகவலை சேகரித்து உரிய நேரத்திற்குள் வழங்கி வரும் இவர்களது பணி பாராட்டுக்குரியது.

கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, ஊடகவியலாளர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்கியிருக்கும் இந்த பிரிவிலேஜ் (சிறப்புரிமை) அட்டை, அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உதவுகின்ற ஒரு சிறிய நல்லெண்ண நடவடிக்கையாகும்.” என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism