Published:Updated:

இதையெல்லாம் சரி செய்துட்டா வேற லெவல்..! - நம்பிக்கை ஊற்றாகி வரும் அரசுப்பள்ளிகள் #MyVikatan

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

இரவுக்காவலர் அரசுப்பள்ளிகளில் இல்லாததால் தண்ணீர் தொட்டி, பைப்களை சமூக விரோதிகள் விடுமுறை நாளில் உடைத்து விடுவதால் தண்ணீர் பற்றாக்குறையையும் சொல்லி மாளாது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஜூலை ஒன்று முதல் தெலுங்கானாவில் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் 38,500 அரசுப்பள்ளிகளும், 6680 அரசு உதவி பெறும் பள்ளிகளும் மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 14ம் தேதி முதல் நடப்பு கல்வியாண்டுக்கான சேர்க்கையை துவக்கியுள்ளன.

கடந்த ஆண்டைப் போலவே பெற்றோர்களுக்கு வேலையிழப்பு, குடும்ப வருமானம் குறைந்தது போன்றவற்றால் பலர் தனியார் பள்ளிகளில் பயின்ற நடுத்தர குடும்ப குழந்தைகள் மீண்டும் அரசுப் பள்ளியின் பக்கம் வர ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பெற்றோர்களின் கனவு பெரியது. அந்தக்கனவை இன்றைய பள்ளிகள் பூர்த்தி செய்கின்றனவா எனப்பார்ப்போம்.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

#சேர்க்கை

நான் , உங்க அம்மா எல்லாரும் அரசுப்பள்ளியில் தான் படிச்சோம். அரசுப்பள்ளியில் சேர்ந்து படிச்சா கேவலமில்லையென நினைத்து அரசுப்பள்ளிக்கு வருவோர் ஒரு புறம். ப்ரைவேட் ஸ்கூல்ல நிறைய பீஸ் பேலன்ஸ் இருக்கு.. இங்க வந்தா சேர்த்துக்குவீங்களா என கெஞ்சிய குரலில் கேட்டு குழந்தைகளை சேர்ப்போர் இன்னொரு ரகம். ஆசிரியர்,கட்டமைப்பு வசதி, கழிவறை,கண்டிப்பு குறைவு, English fluency என அத்தனை விஷயங்களையும் சமரசப்படுத்திக் கொண்டு அரசுப் பள்ளியின் நோக்கி வருகின்றனர் பெற்றோர்கள்.

ஆயிரக்கணக்கில் செலவழித்தும் புரியாத வகையில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடப்பதால் செலவில்லாத அரசுப்பள்ளிகளை நாடுகின்றனர். மருத்துவப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டுள்ளதால் சி பி எஸ் சி,மெட்ரிக் பள்ளிகலிருந்து கூட இங்கு வந்து சேர்க்கின்றனர். ஆனால் அதற்கு ஆறாம் வகுப்பிலிருந்து அரசுப்பள்ளியில் பயின்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு பத்தாம் வகுப்பு முடித்தவுடன் ஐ.டி ஐ, பாலிடெக்னிக் போன்ற படிப்புகளில் ஆர்வத்துடன் மாணவர்கள் செல்வர். ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக அரசு ஆல்பாஸ் செய்திருப்பதால் வருங்காலத்திலும் ஆல்பாஸ் செய்துவிடுவார்கள் எனும் நம்பிக்கையில் 11ம் வகுப்பில் பலர் சேர்கின்றனர். கடந்த 2020-2021ம் கல்வியாண்டில் தனியார் பள்ளியிலிருந்து 2.80 லட்சம் பேர் அரசுப்பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

#அரசுப்பள்ளிகளின் நிலை

கடந்த இரு ஆண்டுகளாக பள்ளிகள் இயங்காததால் சில பள்ளிகள் பராமரிப்பின்றி இருக்கின்றன. SSA திட்டத்தின் சார்பில் கட்டிடங்கள் கட்டித்தருவது நின்று விட்டதால் கடந்த ஐந்து ,ஆறு ஆண்டுகளாக துவக்க நடுநிலைப்பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் இல்லாமல் இருக்கிறது. பழுதடைந்த கட்டிடங்களும் பராமரிப்பில்லை.

பெற்றோர்களின் முக்கிய தேவையாக இருப்பது கழிவறை. ஐநூறு மாணவ மாணவியருக்கு இரு கழிப்பறை, இருபது சிறுநீர் கழிக்குமிடம்தான் சில இடங்களில் இருக்கிறது. கிராமத்தில் இன்னும் கொடுமையாய் இயற்கை உபாதை கழிக்க வீடு அருகில் இருந்தால் செல்லும் நிலை உள்ளது. இரவுக்காவலர் அரசுப்பள்ளிகளில் இல்லாததால் தண்ணீர் தொட்டி, பைப்களை சமூக விரோதிகள் விடுமுறை நாளில் உடைத்து விடுவதால் தண்ணீர் பற்றாக்குறையையும் சொல்லி மாளாது.

வருடந்தோறும் வழங்கும் பள்ளி மானியம் 250 பேர் படிக்கும் பள்ளிக்கும் அதேதொகைதான், 1000பேர் வரை படிக்கும் பள்ளிக்கும் அதே தொகைதான். இதனை களைந்து பயில்வோர் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்கிட வேண்டும். நூலகத்திற்கு புத்தகங்கள் விளையாட்டு உபகரணங்கள் என அரசு கொடுப்பதை மட்டுமே இந்த மானியத்தின் மூலம் அவர்களிடமே வாங்க வேண்டும். விரும்பிய வண்ணம் வாங்கமுடியாத கையறு நிலை இருக்கிறது. கடந்த காலங்களில் R O water கருவிகள் பள்ளிகளில் பொருத்தப்பட்டன. பல இடங்களில் வேலை செய்யாமல் நினைவுச்சின்னமாக இன்னும் நின்று கொண்டிருக்கிறது. சில பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை, சில பகுதிகளில் தண்ணீர் அதிகம் வீணாவதால் இதனை பயன்படுத்துவதில்லை.

அரசுப்பள்ளி
அரசுப்பள்ளி

புதிய பணியிடங்கள் உருவாக்கினாலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதுகலை பட்டதாரிகள் தவிர்த்து மற்ற ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

The Rich get richer, The poor get poorer என்பது போல பல ஊர்களின் பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்தாலும் அங்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. ஒரு சில பகுதிகளில் ஆசிரியர்கள் அதிகமாகவும் மாணவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவாகவும் உள்ள சமநிலையற்ற தன்மை நிலவுகிறது.எனவே மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல் செய்தால் மட்டுமே இந்நிலையை சமாளிக்க முடியும்.

*பேருந்து இயங்காததால் இன்னும் பல பள்ளிகளில் சேர்க்கை குறைவாய் உள்ளது.

*தனியார் பள்ளிகளில் T C வழங்காதததால் அரசு பள்ளியில் சேர்க்க தாமதமாகிறது.

*லேப்டாப், சைக்கிள், உதவித்தொகை கிடைப்பதால் மேல்நிலை வகுப்புகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

*ஐந்தாம் வகுப்புக்கு மேல் தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகம் என்பதால் தாக்குப்பிடிக்க முடியாமல் அரசுப்பள்ளி நோக்கி வருகின்றனர்.

#இடர்கள்

விடுமுறை முடிந்து பள்ளியை திறக்கும் போதே பதட்டம் இருக்கிறது. காரணம் எந்த பொருள் உடைந்துள்ளதோ என்றுதான். தூய்மை பணியாளர் இல்லாததால் தினசரி தூய்மைப்படுத்த முடிவதில்லை. நடத்தாட்டி, கண்காணிப்பாளர் நியமிக்க வேண்டும். ஈராசிரியர்கள் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுவதில்லை.

*மூன்று பருவ புத்தகங்கள் வந்த பிறகு கற்றல் எளிமையானது என்பதுடன் இதன் விளைவாய் அவ்வப்போது படித்ததையும் மறந்துவிடுகின்றனர். முதல் பருவத்தில் பயின்றது மூன்றாம் பருவத்தில் கேட்டால் தெரியவில்லை. எனவே இறுதியில் மூன்று புத்தகங்களிலும் அலகுத் தேர்வாவது நடத்தவேண்டும் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

 அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

*ஆல்பாஸ் வந்த பிறகு சிலர் பள்ளிக்கு வருவதில்லை. இலவசப் பொருட்கள் கொடுக்கும் போது வருவதும், மாதத்தில் சில நாள் மட்டும் வந்தும் வருடக்கடைசியில் தேர்வாகின்றனர். எனவே ஆல்பாஸ் ஆவதற்கு வருகைக்கான அட்டெண்டன்சை கட்டாயப்படுத்தலாம்

*வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் கட்டாயம் இருக்க வேண்டும். மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு காலங்களில் உபரி ஆசிரியர்களை அவ்விடத்தில் பணியமர்த்தி குழந்தைகளின் கற்றல் எந்தவிதத்திலும் பாதிக்காமல் உறுதிப்படுத்த வேண்டும்.

#அரசு செய்ய வேண்டியது

கல்வியாண்டின் துவக்கத்திலேயே கல்வி அமைச்சர் பள்ளிகளை ஆய்வு செய்வது நம்பிக்கை ஏற்படுத்துகிறது. தடுப்பூசி போடும் மையங்கள், கொரோனா செண்டர் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.

*தரம் குறைந்த கட்டடங்கள் கட்டுவதை முறைப்படுத்த வேண்டும். பத்து ஆண்டுகளில் பழுது ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பொறியாளரே பொறுப்பேற்க வேண்டும்.

*ஆய்வகங்களை மேம்படுத்த வேண்டும். தலைமையாசிரியரே பொருட்களை வாங்கும் அதிகாரம் வேண்டும்

*ரெக்கார்ட் எழுதுவது குறைக்கப்பட வேண்டும். அனைத்து தகவல்களும் கணினி மயமான பின்பும் இன்னும் புள்ளிவிபரங்கள் தேவைகள் கற்பித்தலை பாதிக்கின்றன.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

*we want result, we want quantity not quality எனும் வார்த்தைகள் 35 மதிப்பெண்கள் மட்டும் வாங்க வைக்கும் மனநிலைக்கு ஆசிரியர்கள் வந்துவிடுகின்றனர்.

தேர்வோடு தரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

*கற்பித்தலை பாதிக்காத வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் சனிக்கிழமை மட்டுமே கொடுக்க வேண்டும்.

*இடவசதி இல்லாத பள்ளிகளை தரம் உயர்த்த கூடாது. அவ்வாறு செய்வதால் அங்கன்வாடி முதல் மேல்நிலை பள்ளிவரை இடவசதியில்லாமல் அவதியுறுகின்றனர்.

*2014க்கு பிறகு பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் நியமனமே செய்யவில்லை. எனவே இடமாறுதல், பணிநிரவல் செய்தபின் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 30:1 எனும் விகிதத்தில் மாணவர் ஆசிரியர் இருக்க வேண்டும்.

*அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களை நன்கு கட்டமைக்க வேண்டும்.

*சாதி,வருமான,இருப்பிட சான்றிதழ்களை அரசுத்துறையின் சார்பில் முகாம் நடத்தி அவர்களே வழங்கிட வேண்டும்

*கல்வி தொலைக்காட்சி மற்றும் you tube சேனல்களில் ஆங்கில வழி வகுப்பிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

அரசுப்பள்ளிக்கும் தனியார் பள்ளிக்கும் உண்டான வேறுபாடுகளை களைய வேண்டும்.

மாணவர்களை ஈர்க்கும் வகையில் பள்ளிகள் மாற வேண்டும்.கட்டமைப்பு ஒன்றே பெற்றோர்களை அரசுப்பள்ளி குறித்த அதிருப்தியில் இருந்து விடுவிக்கும்.இதன் மூலம் மட்டுமே தொடர்ந்து பிள்ளைகளை தக்க வைக்க முடியும். கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தினால் அரசுப் பள்ளி இன்னும் மிளிரும். well begun is half done என்பார்கள். நல்ல துவக்கமே பிரகாசமான வாய்ப்பாக அமைய அரசுப்பள்ளிகளை துவங்குவோம்

-நிரஞ்சனா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு