Published:Updated:

மாணவர் சேர்க்கையில் மாஸ் காட்டும் பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி! #MyVikatan

திருப்பூர் வடக்கு பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி
திருப்பூர் வடக்கு பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி

தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு நிலுவைத் தொகை, இந்த ஆண்டு புதிய கட்டணம் என சுமை அதிகரிக்க நடுத்தர மக்களின் பார்வை அரசுப் பள்ளியை நோக்கி திரும்பியுள்ளது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா காலம்.. ஊரடங்கில் பொருளாதார பாதிப்பு.. மூன்றாவது அலையினால் பள்ளி திறக்கப்படுமா என்ற கேள்விக்குறி மக்கள் மத்தியில் அதிகம் உள்ளது. தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு நிலுவைத் தொகை, இந்த ஆண்டு புதிய கட்டணம் என சுமை அதிகரிக்க நடுத்தர மக்களின் பார்வை அரசுப் பள்ளியை நோக்கி திரும்பியுள்ளது. தமிழக அரசு மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் அரசுப்பள்ளியில் சேர்க்கலாம் என்ற அறிவிப்பு மக்களுக்கு இன்பத் தேன் வந்து பாய்வது போல் இருந்தது. விளைவு முதல் நாளிலேயே அரசுப் பள்ளியில் கூட்டம் அதிகரிக்கத் துவங்கியது.

திருப்பூர் வடக்கில் ஒரு மாணவனிடம் எந்த ஸ்கூலில் சேர்ந்திருக்கிறாய் எனக் கேட்டேன். இந்த பொம்மையெல்லாம் வரைஞ்சிருக்குமே அந்த ஸ்கூலில் என பெருமை பொங்கக் கூறினான். அந்த மாணவன் சொன்ன பள்ளி .. திருப்பூர் வடக்கில் அமைந்துள்ள பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி தான்.. கடந்த நான்கு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கையில் முதல் வாரத்தில் 300ஐ தொட்டு சாதனை படைத்துள்ளது. பள்ளியில் ஒட்டு மொத்த மாணவர் எண்ணிக்கை 800ஐ நெருங்கியுள்ளது.

திருப்பூர் வடக்கு பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி
திருப்பூர் வடக்கு பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி

இந்த ஆண்டு முதல் வகுப்பில் சேர்க்கை 110ம், இதர வகுப்புகளிலும் ஐம்பது மாணவர்களுக்கு மேல் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதன் படி பள்ளியில் பயில்வோர் முதல்வகுப்பில் 113 பேர், இரண்டாம் வகுப்பில் 132பேரும், மூன்றாம் வகுப்பில் 157பேரும், நான்காம் வகுப்பில் 195பேரும், ஐந்தாம் வகுப்பில் 191பேரும் என மொத்த மாணவர் எண்ணிக்கை 788 ஆகும். இன்னும் ஒரு சில நாளில் எளிதாய் 800ஐ தாண்டும் என்கின்றனர். இதில் புதிதாய் சேர்ந்தோர் 100% தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

2016ம் ஆண்டு 300 மாணவ மாணவியருடன் செயல்பட்டு வந்த பள்ளி அடுத்த ஆண்டு 2017ல் 290 மாணவ மாணவியரை சேர்த்து சாதனை படைத்தனர். 2018, 2019, 2020-லும் சேர்க்கை 250 ஐ கடந்து சாதனை படைத்தது. ஊரடங்கிற்கு முந்தைய காலகட்டத்தில் தனியார் பள்ளிகளைப் போல விளையாட்டு சீருடை, ஐந்து வகுப்புகளுக்கு ஸ்மார்ட் க்ளாஸ் வசதி,17 கணினிகளுடன் கணினி வகுப்பறை, ஓவிய வகுப்பு, சிலம்பம், பரதம், பறை இசை, கராத்தே, பள்ளியின் வருடாந்திர காலண்டர், டைரி, வீட்டுப்பாடத்திற்கு எஸ்.எம்.எஸ், கிரானைட் வகுப்பறை ,கண் கவரும் வண்ன ஓவியங்கள் என பெற்றோரை திருப்திப்படுத்தும் வகையில் இப்பள்ளியில் கட்டமைப்பு இருப்பதால் பெற்றோர் அதிகம் நாடி வருகின்றனர்.

திருப்பூர் வடக்கு பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி
திருப்பூர் வடக்கு பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி

கடந்த ஒரு வருட காலத்தில் ஐந்து வகுப்புகளிலும் வாட்ஸ் அப் குழுக்களில் பாடம் நடத்தியது பெற்றோர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. கூகுள் சீட் மூலம் மதிப்பீடு செய்வது மாணவர்களை ஆர்வத்துடன் பங்குப் பெறச் செய்துள்ளது. எல்.கே.ஜி வகுப்புகள் இன்னும் ஆரம்பிக்கப்படாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பள்ளி எண்ணிக்கை 800ஐ நெருங்கிய போதிலும் ஆசிரியர் எண்ணிக்கை 12 ஆகத்தான் உள்ளது. ஒவ்வொரு ஆசிரியருக்கும் 80 மாணவ மாணவியர் உள்ளனர். புதிய அரசு பொறுப்பேற்று இருப்பதால் ஆசிரியர் நியமனங்கள் இருக்கும் என நம்பிக்கையுடன் உள்ளனர் ஆசிரியர்கள். ஆசிரியர் பற்றாக்குறை இருப்பினும் அனைத்து ஆசிரியர்களும் யாரையும் தவிர்க்காமல் அனைவருக்கும் சேர்க்கை நடத்தி வருகின்றனர்.

-ஷங்கர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு