Published:Updated:

“தங்க தீபாவளி சலுகைகள்” - ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் தீபாவளி அறிவிப்புகள்!

இவ்வாண்டு தீபாவளியை இன்னும் சிறப்பாகக் கொண்டாட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் பல சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளது.

1964 முதல் மக்களிடையே மிகவும் செல்வாக்கு பெற்ற ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், இந்தியாவின் மிகவும் நம்பகமான முன்னணி ஜுவல்லரி நிறுவனம் ஆகும். தலைமுறைகள் பல கடந்தும் தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் ராசிக்கற்கள் போன்றவற்றில் நவீன மற்றும் பாரம்பரிய ஆபரண நகைகளை வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணம் வடிவமைத்து வழங்கி வருகின்றனர்.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

ஒவ்வொரு வருடமும் தீபாவளி கொண்டாட்டம் என்பது நம் அனைவருக்கும் வாழ்வின் பொன்னான தருணம். தமிழ்நாட்டில் “தங்க தீபாவளி சலுகைகள்” மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் “ஸ்வர்ண தீபாவளி சலுகைகள்” என இவ்வாண்டு தீபாவளியை இன்னும் சிறப்பாகக் கொண்டாட ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் பல சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளது. ஒவ்வொரு முறையும் நீங்கள் வாங்கும் தங்கத்தின் எடைக்கு நிகரான வெள்ளி முற்றிலுமாக இலவசம். இத்தோடு கூட, வைரம் காரட்டிற்கு 25 கிராம் வெள்ளி இலவசம். மேலும் வெள்ளிப் பொருட்களின் செய்கூலியில் 25 சதவிகிதம் தள்ளுபடி மற்றும் வெள்ளி நகைகள் MRP மீது 10 சதவிகிதம் தள்ளுபடியும் அறிவித்துள்ளார்கள்.

ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர். ‘அனந்த்’ அனந்தபத்மநாபன் கூறுகையில், “வாடிக்கையாளர்களே எங்களுக்கு எப்போதும் முழுமுதல் முன்னுரிமை, எங்களின் செயல்கள், அறிவிப்புகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை உறுதி செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கும். இந்த ஆண்டு தங்க தீபாவளியை மக்கள் அனைவரும் கோலாகலமாகவும், பேரின்பமாகவும் கொண்டாட வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டார்.

தங்க நகைகள்
தங்க நகைகள்

மேலும், ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன், “தீபாவளி பண்டிகைக்காக வாடிக்கையாளர்கள் எப்போதுமே புது டிசைன்ஸ் ஆபரணங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப, அவர்களின் மனம் மகிழும் விதத்தில் ட்ரென்டியாகவும், ட்ரெடிஷனாகவும் லேட்டஸ்ட் ஆபரண கலெக்‌ஷன்கள் அனைத்தும் தீபாவளி கொண்டாட்டத்திற்கென பிரத்யேகமாக வழங்குகிறோம்,” என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு