Published:Updated:

இலங்கை நெருக்கடி: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியது GRT ஜூவல்லர்ஸ்!

GRT ஜூவல்லர்ஸ்

இலங்கைவாழ் மக்களுக்கு ஆதரவை அளிக்கும் விதத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மேற்கொண்டுள்ள சீரிய பணியில் GRT நிறுவனம் தன்னை இணைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறது.

இலங்கை நெருக்கடி: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியது GRT ஜூவல்லர்ஸ்!

இலங்கைவாழ் மக்களுக்கு ஆதரவை அளிக்கும் விதத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மேற்கொண்டுள்ள சீரிய பணியில் GRT நிறுவனம் தன்னை இணைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறது.

Published:Updated:
GRT ஜூவல்லர்ஸ்

ஒருவருக்கு உண்மையில் உதவி தேவைப்படும்போது நாம் உதவிக்கரம் நீட்டினால் இறையருளின் காரணமாக அது நிகழ்வதாகக் கூறுவார்கள். இலங்கையில் ஒரு கடினமான காலகட்டம் மிகவும் உச்சநிலையில் இருக்கும்போது இலங்கைவாழ் மக்களுக்கு ஆதரவை அளிக்கும் விதத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு M.K. ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்டுள்ள சீரிய பணியில் GRT நிறுவனம் தன்னை இணைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறது.

GRT ஜூவல்லர்ஸின் மேலாண்மை இயக்குநர்கள் திரு.G R. 'அனந்த்' அனந்தபத்மநாபன் மற்றும் திரு.G.R. ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நிரு.M.K. ஸ்டாலின் அவர்களை 5-5.2022 அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து இலங்கைவாழ் மக்களுக்கு உதவுவதற்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் காசோலையை வழங்கினார்கள்.

GRT ஜூவல்லர்ஸ்
GRT ஜூவல்லர்ஸ்

GRT, ஜூவல்லரி துறையில் மிகச்சிறந்த ஒரு நிறுவனமாகத் திகழ்வதால் ஒரு பொன்னான முன்னுதாரணத்தை நிர்ணயிக்கும் பங்கினை அது புரிந்துகொண்டுள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை: ஆகவேதான், இலங்கையில் நிலவும் கடினமான சூழ்நிலையில் அந்நாட்டு மக்களுக்கு தனது சேவையை அளிப்பதை உறுதி செய்வதில் GRT நிறுவனம் மிகவும் பொறுப்புணர்வோடு செயல்பட்டுள்ளது. இது போன்ற சேவையை இனி மற்றவரும் பின்பற்றுவதற்கு ஒரு முன்னோடியாகவும் GRT வழிகாட்டியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism