Published:Updated:

முதல்வர் நிவாரண நிதி: ஜி.ஆர்.டி. குழுமம் தொடர்ந்து பங்களிப்பு!

ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்
ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அண்மையில் அளித்த பங்களிப்பு மட்டும் அல்லாமல், பல்வேறு மருத்துவமனைகளுக்கு மருத்துவப் பொருட்களையும் வழங்கியிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், பல நிறுவனங்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குத் தொடர்ந்து பங்களித்து வருகின்றன.

இந்தப் பின்னணியில், சென்னை ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் நிறுவனம், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பங்களித்துள்ளது; மேலும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு மருத்துவப் பொருட்களையும் வழங்கியிருக்கிறது.

“ஜி. ஆர். டி ஜுவல்லர்ஸ் எப்போதுமே மக்களுடன் நிற்கும் நிறுவனம் ஆகும், அதிலும் குறிப்பாக இக்கட்டான தருணங்களில் என்றும் துணை நிற்கும்! பெருந்தொற்றின் இரண்டாவது அலை பலரின் வாழ்வை சீர்குலைத்துள்ள நிலையில், நிவாரண பணிகளுக்காக ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் தாராளமாக பலவிதமான நன்கொடைகளுடன் அளப்பரிய விதத்தில் பங்களிப்பு செய்துவருகிறது.

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அண்மையில் அளித்த பங்களிப்பு மட்டும் அல்லாமல், சென்னை கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 2 வென்டிலேட்டர்கள், 950 பிபிஇ கிட் (PPE KID), 20000 கையுறைகள், பல்வேறு மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பொருட்களை ஜி.ஆர்.டி குழுமம் தாராளமாக வாரி வழங்கி உள்ளது. மேலும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ரூ.1.6 இலட்சம் மதிப்புள்ள 2 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், செட்டிநாடு மருத்துவமனைக்கு ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள மருத்துவமனை உபகரண பொருட்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும் ஜி.ஆர்.டி குழுமம் கொடுத்து உதவியுள்ளது.

ஜி.ஆர்.டி குழுமம்
ஜி.ஆர்.டி குழுமம்

இன்னும் கூடுதலாக, ஜி.ஆர்.டி குழுமம் சென்னை, தமிழ்நாடு, பெங்களூரு மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள சில ஷோரூம்கள் மூலம் ஒவ்வொரு நாளும் தேவையில் இருக்கும் ஏழை மக்களுக்கு ஏறத்தாழ 2000 இலவச உணவை வழங்கி வருகிறது. உயரிய இம்முயற்சிகளை ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் சமூகத்திற்கு திருப்பி அளிக்கும் கைமாறாக கருதி பங்களித்து வருகிறது” என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு