Published:Updated:

கண்ணைக் கவரும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் அசத்தலான வளையல் வைபவம்!

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் வளையல் வைபவத்தில் எப்போதுமே மிகவும் பிரமிக்க வைக்கும் விதவிதமான வளையல்களின் அணிவகுப்பு பிரமாண்டமாக இடம் பெற்றிருக்கும்.

1964 முதல் மக்களிடையே மிகவும் செல்வாக்கு பெற்ற ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், இந்தியாவின் மிகவும் நம்பகமான முன்னணி ஜூவல்லரி நிறுவனம் ஆகும். 55 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் ராசிக்கற்கள் போன்றவற்றில் நவீன மற்றும் பாரம்பர்ய ஆபரண நகைகளை வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணம் வடிவமைத்து வழங்கி வருகின்றனர்.

பெண்கள் அணியும் நகைகளிலேயே வளையல்களுக்கு எப்போதும் முக்கிய பங்கும், தனிச்சிறப்பும் உண்டு. ஒரு திருமண விழாவிலோ அல்லது ஆண்டு விழா கொண்டாட்டங்களிலோ அல்லது எந்த முக்கியமான விசேஷ நிகழ்வுகளிலும் இந்திய பெண்களின் கைகளை அலங்கரிக்கும் பல வண்ணமயமான வளையல்களை எப்போதும் பார்க்கலாம். இன்றைய நவீன பெண்களைப் பொறுத்தவரை, வளையல்கள் தினசரி ஃபேஷனின் அங்கமாக மாறிவிட்டது. இதன் காரணமாகவே ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் வளையல் வைபவத்தில் எப்போதுமே மிகவும் பிரமிக்க வைக்கும் விதவிதமான வளையல்களின் அணிவகுப்பு பிரமாண்டமாக இடம் பெற்றிருக்கும். அதே போல இவ்வருட வளையல் வைபவ விழாவை இன்னும் சிறப்பானதாக மாற்ற, ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் வாங்கும் தங்கம் கிராமிற்கு ரூ.50 குறைவாகவும், வைரம் மற்றும் அன்கட் வைரங்களுக்கு 10% குறைவாகவும் பெறலாம். மேலும் வெள்ளி நகைகளின் MRP மீது 10% குறைவாகவும், வெள்ளிப் பொருட்களின் சேதாரத்தில் (VA) 15% குறைவாகவும் பெற்று மகிழலாம்.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர் ‘அனந்த்' அனந்தபத்மநாதன், "வளையல்கள் என்பது ஒவ்வொரு பெண்ணும் வாங்க விரும்பும் அத்தியாவசியமான ஆபரணம் என்பதை நாங்கள் அறிவோம். எனவே வாடிக்கையாளர்களுக்கு பிடித்த டிசைன்களில் ஏராளமாகவும், தாராளமாகவும் வழங்கியுள்ளோம். இம்முறை மேலும் மேம்படுத்தி எக்கச்சக்கமான புதிய அணிவகுப்புகளோடு ‘வளையல் மேளா' விழாவை துவங்கியுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

மேலும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர் ராதாகிருஷ்ணன், "எங்கள் வாடிக்கையாளர்களின் நகை தேவைகளை பூர்த்தி செய்வதே எங்கள் நோக்கம். வாடிக்கையாளர்களின் ரசனையை அறிந்து அதற்கேற்ப பல புதுமையான கலெக்ஷன்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதுவரை பார்த்திராத, கண்ணைக் கவரும் வளையல் வகைகளை பிரத்யேகமாக வழங்கி உள்ளோம். வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் எங்களிடம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு