Published:Updated:

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் - மூன்று `டைம்ஸ் பிசினஸ் விருதுகள்' வென்று சாதனை!

டைம்ஸ் பிசினஸ்-ன் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலுங்கானா பகுதிகளுக்கான ‘நகை வர்த்தகத்தில் மக்களின் நம்பிக்கைக்குரிய லெஜண்டரி பிராண்ட்’ என்கிற விருதுகளைப் பெற்றுள்ளது.

1964-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு இல்லத்திலும் உச்சரிக்கப்படு வரும் பெயர் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ். இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சார்ந்த அணுகுமுறை தலைமுறைகளைக் கடந்து மக்களை ஈர்த்து வருகிறது என்றால் மிகை ஆகாது. கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், பாரம்பர்ய ஆபரணங்களுக்காகவும் சமகாலத்து நகை வடிவங்களுக்காகவும் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் நகை உலகின் மங்களகரமான பெயராக மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் பெற்றுள்ளது. இப்படிப்பட்ட மக்களின் ஏகோபித்த அபிமானமும் நம்பிக்கையும் இத்தனை ஆண்டுகளில் பல விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்
இந்த ஆண்டும், ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் டைம்ஸ் பிசினஸ்-ன் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலுங்கானா பகுதிகளுக்கான ‘நகை வர்த்தகத்தில் மக்களின் நம்பிக்கைக்குரிய லெஜண்டரி பிராண்ட்’ என்கிற விருதுகளைப் பெற்றுள்ளது.

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் G.R. ‘அனந்த்’ அனந்தபத்மநாபன் கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்களுடன் நாங்கள் கொண்டுள்ள ஐம்பத்தி ஏழு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நம்பிக்கை மற்றும் நல்லுறவின் அடையாளமாக இந்த விருது விளங்குகிறது என்றால் மிகை ஆகாது. எங்கள் ஆபரண வடிவமைப்புகள், சேவைப் பணிகள், ஷோரூம்களின் சூழல் அமைப்புகள் - இப்படி அனைத்திலும் முழுமையானதாக நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருவதன் அத்தாட்சியாக இந்த விருதுகள் உள்ளன” என்று குறிப்பிட்டார்.

டைம்ஸ் பிசினஸ் விருது
டைம்ஸ் பிசினஸ் விருது

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் G.R. ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், “ஜிஆர்டியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இது ஒரு மகிழ்ச்சியான தருணமாகும். இப்படிப்பட்ட கௌரவம் வாய்ந்த விருதுகளால் அங்கீகரிக்கப்படுவதால், நாங்கள் வருங்காலங்களில் மேலும் தனித்தன்மையுடனும் தனிச்சிறப்புடனும் எங்கள் பணிகளை ஆற்ற ஊக்குவிக்கிறது. எங்கள் குழுவினருக்கு இது ஒரு கூடுதல் அங்கீகாரம் எனலாம். வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடாகும் இந்த விருதுகள். இதனைச் சாத்தியமாக்க உறுதுணை புரிந்த ஒவ்வொருவருக்கும் எங்களது நன்றிகள் உரித்தாகுக” என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு