Published:Updated:

முதல்வர் நிவாரண நிதி: ஹட்சன் அக்ரோ நிறுவனம் ரூ.3 கோடி நிதியுதவி!

ஹட்சன் அக்ரோ நிறுவனம் நிதியுதவி
ஹட்சன் அக்ரோ நிறுவனம் நிதியுதவி

கடந்த 15-ம் தேதி, ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிட். நிறுவனத்தின் சார்பில் ரூ.3 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தமிழகத்தில் தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. லாக்டௌன் அதைக் கட்டுக்குள் வைத்திருந்தாலும் பாதுகாப்பை உறுதி செய்ய, சிகிச்சைக்கான வழிமுறைகளைச் செய்யத் தமிழக அரசு பொது மக்களிடமும் நிறுவனங்களிடமும் நிதி கோரியுள்ளது. தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஏராளமான பொதுமக்கள் தங்களால் இயன்றதைக் கொடுத்து வருகின்றனர். அதேபோல், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் நிதியுதவி அளித்து வருகின்றன.

கடந்த 15-ம் தேதி, ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிட். நிறுவனத்தின் சார்பில் ரூ.3 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரைத் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்த ஹட்சன் அக்ரோ நிறுவனத்தின் தலைவர் திரு.ஆர்.ஜி.சந்திரமோகன் அவர்கள், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு