Published:Updated:

காங்கேயம்: ரூ.101 கோடி செலவில் ஹட்சன் நிறுவனத்தின் புதிய ஆலை!

ஹட்சன் நிறுவனம்
ஹட்சன் நிறுவனம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவில் அமைந்துள்ள ஹட்சன் நிறுவனத்தின் புதிய ஆலையில் பால் பதப்படுத்துதல் மற்றும் பேக்கிங் பணிகள் தொடக்கம்.

ரூ.101 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த ஆலை தானியங்கி தொழில்நுட்பம் கொண்டதாகும். இந்தப் பிராந்தியத்தில் பெரிய ஆலைகளில் ஒன்றான இந்த ஆலை இப்பகுதியில் பால் பதப்படுத்துதல் மற்றும் செயலாக்கத்தை மேலும் அதிகரிக்கும்.

'ஆரோக்யா', 'ஹட்சன்', 'அருண் ஐஸ்கிரீம்ஸ்', 'ஐபாகோ' ஆகிய பிராண்டுகளுடன் இந்தியாவின் முன்னணி தனியார் துறை பால் மற்றும் பால்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் (HAP), திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகாவில் அமைந்துள்ள ஆலையில் பால் பதப்படுத்துதல் மற்றும் பேக்கிங் பணிகளைத் தொடங்கியுள்ளது.

ரூ.101 கோடி செலவில் உருவாக்கப்பட்ட முழு தானியங்கி உற்பத்தி வசதிகளுடன் கூடிய இந்த ஆலை, நாட்டின் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த ஆலைகளில் ஒன்றாக உள்ளது.

ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டுள்ள இந்த ஆலையில் ஒரு நாளைக்கு 3.5 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தவும், பேக் செய்யவும் முடியும். HAP-யின் முக்கிய குறிக்கோள்களான ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சிறந்த தரமான தயாரிப்புகளை உருவாக்குவது ஆகிய முக்கிய நோக்கங்களுக்கு இணங்க இந்தப் புதிய ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹட்சன் நிறுவனம் தமிழ்நாடு, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களில் உற்பத்தி தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.

ஹட்சன் நிறுவனம், தனது சில்லறை வணிக கடைகளை மேலும் விரிவாக்கவுள்ளது. கூடுதலாக, ஹட்சன் நிறுவனம் விவசாயிகளுக்கு சிறந்த தொழில்நுட்பம், பண்ணை உள்ளீடுகள், கால்நடை பராமரிப்பு சேவைகள், சிறப்பு கால்நடை தீவனம் மற்றும் அவர்களின் பால் விநியோகத்திற்கான பணத்தை வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்துதல் ஆகியவற்றை வழங்குவதற்காகத் தொடர்ந்து செயலாற்றும்.

இது குறித்து பேசிய ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் (HAP), தலைவர், RG சந்திரமோகன், “தமிழ்நாட்டின் திருப்பூரில் உள்ள காங்கேயம் தாலுகாவில் உள்ள எங்கள் புதிய ஆலையில் ‘ஆரோக்யா’ பிராண்ட் பால் பதப்படுத்தி பேக்கிங் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பால் மற்றும் பால்பொருள் உற்பத்தியில் தானியங்கி தொழில்நுட்பம், உயர்ந்த தரம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் ஹட்சன் நிறுவனம் முன்னணியில் இருப்பதுடன், சந்தையில் புதிய அளவுகோலை அமைக்கிறது. புதிய ஆலை நாட்டின் வெண்மை புரட்சியில் அதன் தடத்தை பதிவு செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு