Published:Updated:

GGHC: பெருந்தொற்று காலத்தில் CMCHIS மூலம் 125 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள்!

GGHC ( Photogenic )

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களில் மிகவும் இளையவர் 6 மாதக் குழந்தை மற்றும் அதிக வயதுடையவர் 66 வயது நோயாளி!

GGHC: பெருந்தொற்று காலத்தில் CMCHIS மூலம் 125 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள்!

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களில் மிகவும் இளையவர் 6 மாதக் குழந்தை மற்றும் அதிக வயதுடையவர் 66 வயது நோயாளி!

Published:Updated:
GGHC ( Photogenic )

ஒரு முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி மையமான சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GCHIC) கடந்த 2 ஆண்டுகளில் பெருந்தொற்றுக் காலத்தில் தமிழ்தாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (TNCMNHS) 125 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுகாதார, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன், மற்றும் அவருடன் தமிழ்நாடு அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் மற்றும் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ திரு எஸ்.அரவிந்த ரமேஷ் ஆகியோர் மருத்துவர்களை கௌரவித்தனர்.

பெறப்பட்ட தரவுகளின்படி, அங்கு நடத்தப்பட்ட உறுப்பு மாதிரி அறுவை சிகிச்சைகள் மொத்தத்திலும் 70% நோயாளிகள் ஆண்கள் மற்றும் மீதமுள்ளவர்கள் பெண்கள்.

தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுகாதார, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், திரு மா.சுப்பிரமணியன், மருத்துவர்கள் குழுவிற்கு தன் வாழ்த்துகளைத் தெரிவிக்கும்போது, “TNCMCHIS மூலம் பல நோயாளிகள் குறிப்பாகக் குழந்தைகள் பயன்பெறுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருவர் சரியான நேரத்தில் மருத்துவ தலையீட்டை நாடினால் உண்மையிலேயே அவரது வாழ்க்கை பெருமளவுக்கு மாறும். பெருந்தொற்றுக் காலத்திலும்கூட தமிழகம் முழுவதிலும் உள்ள நோயாளிகளுக்கு 125 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்ததற்காக கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் உள்ள மருத்துவர்கள் குழுவை வாழ்த்த விரும்புகிறேன்” என்று கூறினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் கல்லீரலியல் மற்றும் கல்லீரலியல் உறுப்பு மாற்றுத்துறை இயக்குனர், டாக்டர் ஜாய் வர்கீஸ், கருத்து தெரிவிக்கையில், “தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வயது வந்தோர் மற்றும் குழந்தைகள் ஆகிய இரு நோயாளிகளும் TNCMCHIS மூலம் பலன் பெற்றுள்ளனர். INCMCHIS-இன் கீழ் சிகிச்சை மேற்கொண்ட 125 நோயாளிகளில், 21 நோயாளிகள் கடுமையான கல்லீரல் செயலிழப்பு மற்றும் நாள்பட்ட கடுமையான கல்லீரல் செயலிழப்பு நோயாளிகள் ஆவர். அவர்களுக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான அவசர அனுமதிகளை வழங்க TNCMCHIS குழு இடைவிடாமல் உழைத்தது. TNCMCHIS-இன் கீழ், எங்கள் மையத்தின் சிறப்பம்சமாக இரத்தக் குழு பொருந்தாத ஆறு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளையும் (ABOi) வெற்றிகரமாகச் செய்துள்ளோம்” என்று கூறினார்.

சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் குனோபல் ஹெல்த் சிட்டியின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் HPB அறுவை சிகிச்சைத்துறை இயக்குனர் டாக்டர் மேட்டு ஸ்ரீனிவாஸ் ரெட்டி இந்நிகழ்வில் பேசுகையில், “இந்த நோயாளிகள் மிகவும் நோய்வாய்ப்பட்டகள், இவர்களில் பலர் கடைசி முயற்சியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள். குறிப்பாக இந்த நோயால் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்ச்சிக் குறைபாடு ஏற்பட்ட சிறு குழந்தைகள் விஷயத்தில் இது முற்றிலும் உண்மை. அவர்கள் மிகக் குறைந்த உடலியக்க சக்தி கொண்டிருந்தனர் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர்களால் எந்தவொரு தொற்று அல்லது சிக்கல்களையும் தாங்கிக் கொள்ள முடியாது” என்று கூறினார். இத்தகைய பிரச்சனைகள் இருந்தபோதிலும், நமது நோயாளிகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையால் பெற்ற பலன்கள் சர்வதேசத் தரத்தைவிட மிகச் சிறந்தவை. குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் 100 சதவிகித பல்துறை சிகிச்சையை சாதிப்பது ஒரு விதிவிலக்கான சாதனையாகும். மேலும் இது குழு மற்றும் மருத்துவமனையின் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவிட் 5 பெருந்தொற்றுக் காலத்தில் கல்லீரல் உறுப்பு மாற்று நோயாளிகளை நிர்வகிப்பது பற்றி சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் கிட்டியின் கல்லீரல் மயக்க மருந்து மற்றும் தீவிர பராமரிப்புத் துறைத்தலைவர் டாக்டர் செல்வகுமார் மல்லீஸ்வரன் பேசுகையில், “கோவிட் பெருதொற்றின் பல்வேறு அலைகளின் போதும்கூட அவசர மற்றும் உயிர் காக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை பிரத்தியேகமாக தீவிர சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பிரத்யேகக் குழு நடத்தியது. கடுமையான கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு அவசரகால கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை சிறப்புத் திறன் கொண்ட குழு வெற்றிகரமாக நிர்வகித்தது. எங்கள் பாதுகாப்பு நெறிமுறையானது மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு கோவிட் நோய்த் தொற்று அறவே ஏற்படாமல் பார்த்துக் கொண்டது மற்றும் இந்தச் செய்தி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சர்வதேச இதழின் முதல் அட்டைப் பக்கத்தில் வெளியிடப்பட்டது” என்று கூறினார்.

சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் குளோபல் ஹெஸ்த் சிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி, டாக்டர் அலோக் குல்லர் இந்த மைல்கல்லை எட்டியது குறித்து கூறுகையில், “மாநிலம் முழுவதும் உள்ள பல நோயாளிகளுக்கு TNCMCHIS நம்பிக்கை அளித்தது. அதற்காக நாங்கள் தமிழ்நாடு அரசுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளோம். பெருந்தொற்றான கோவிட்-19-ன் போது TNCMCHIS-ன் கீழ் மிகவும் சவாலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்வது எங்களது சாதனைப் பட்டியலில் மற்றொரு சாதனையைச் சேர்க்கிறது. கோவிட்-19 பரவும் அபாயம் ஏதுமின்றி மாற்று அறுவை சிகிச்சையைச் செயல்படுத்துவதற்கு, தொற்றுக் கட்டுப்பாட்டின் மிக உயர்ந்த தரநிலைகளைச் செயல்படுத்துவதை எங்கள் குழு ஒரு சவாலாக எடுத்துக் கொண்டது. தொற்று நோய் தடுப்புக் குழுவுடன் இணைந்து கல்லீரலியல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக் குழு செயல்படுத்திய பல்துறை சிகிச்சை அணுகுமுறையானது இறுதிநிலை கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிறந்த மருத்துவ பலனை வழங்க எங்களுக்கு உதவியது,” என்று கூறினார்.

கடந்த 2 ஆண்டுகளில் பெருந்தொற்றுக் காலத்தில் GGHC-இல் மருத்துவர்கள் சாதித்த சில சாதனைகள் -

1. இந்தியாவிலேயே முதல்முறையாக பித்தப்பை அமில சேர்க்கைக் குறைபாடு கொண்ட 9 மாத குழந்தைக்கு வெற்றிகரமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

2. இந்தியாவிலேயே முதல்முறையாக கிரிக்லர் நஜ்ஜார் நோய்க்குறி வகை 1 கொண்ட 2.5 வயது குழந்தைக்கு வெற்றிகரமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

3. இந்தியாவிலேயே முதல்முறையாக கொலஸ்டெரால் எஸ்டர் ஸ்டோரேஜ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வெற்றிகரமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

4. 4 குழந்தை நோயாளிகள் மற்றும் 2 வயதுவந்த நோயாளிகளுக்கு ஏபிஓ இணக்கமின்மைக்கான உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

5. 4.2 கிலோ எடையுள்ள குழந்தைக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, இது மிகக் குறைந்த எடை கொண்ட நோயாளிக்கு செய்யப்படும் சிகிச்சையாக சாதனை படைத்தது.

6. இந்தக் காலகட்டத்தில் 61 குழந்தைகளுகான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் 64 பெரியவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

பெருந்தொற்றுக் காலத்தில் (கடந்த 2 ஆண்டுகளில்) மொத்தம் 122 உயிருள்ள நன்கொடையாளர்கள் தானம் செய்யும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன, அத்துடன் உயிர் பிரிந்தவர்களிடமிருந்து தானம் பெற்று 3 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism