Published:Updated:

`என் ஏஞ்சலு..!' - லோன்லி ஹோம் மேக்கர் பகிரும் புது காதல் அனுபவம் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

`ம்ம்ம் மீன் குழம்பு நல்லாருக்கு. ஆனால், எங்க அம்மா வீட்டு மீன்குழம்பு ருசி வரல என்று என்னை வெறுப்பேற்ற நமட்டு சிரிப்புடன் அவர் கூற, எனக்கு அப்படியே கரண்டியில் செல்லமாக ரெண்டு அடி வைக்கலாம் போல தோணியது...'

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இன்று இடியுடன்கூடிய கனமழை பெய்யும் என்ற வானிலை மைய அறிவிப்பை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், இடியும் மின்னலும் முழங்க,பெருமழை பெய்து ஓய்ந்து, தூவானம் தூவிக் கொண்டிருக்க, பல முறை பார்த்து ரசித்து சிரித்த திரைப்பட நகைச்சுவைக் காட்சியை ரசித்த வண்ணம், சுடச்சுட 4 இட்லிகளை அயிலை மீன் குழம்புடன் விழுங்கிவிட்டு, ஐந்தாவது இட்லிக்காக வெறும் குழம்பை விரல்களால் வழித்து ருசித்துக் கொண்டே, யமுனா, இன்னொரு இட்லி கிடைக்குமா என்றார் என் கணவர் சுதன்...

மீன் குழம்பு
மீன் குழம்பு

இட்லியை ஹாட் பாக்ஸிலிருந்து பரிமாறியவாறே, என்னங்க, டிபன் அவ்வளவு நல்லாருக்கா என்று கண்களில் பெருமிதம் பொங்க கேட்டேன்.

ம்ம்ம் மீன் குழம்பு நல்லாருக்கு. ஆனால், எங்க அம்மா வீட்டு மீன்குழம்பு ருசி வரல என்று என்னை வெறுப்பேற்ற நமட்டு சிரிப்புடன் அவர் கூற, எனக்கு அப்படியே கரண்டியில் செல்லமாக ரெண்டு அடி வைக்கலாம் போல தோணியது.

(என்ன செய்வது, பெரும்பாலும் கணவர்களுக்கு மனைவியைக் கடுப்பேற்றி ரசிப்பது வாடிக்கை ஆகிவிட்டது)

மழைத் தூறலின் மிதமான சப்தங்களுக்கு இடையில் எங்கோ ஒரு பூனையின் குரல் `மியாவ், மியாவ்' என ஒலிக்க வாசலுக்குச் சென்று பார்த்தேன். சாம்பல், பழுப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த கலவையில் ஒரு பூனை வீட்டின் நிலவின் மீது முன்னங்கால்களை வைத்து என்னைப் பார்த்து ஏக்கமாக, கண்கள் சொக்க குழந்தையைப் போல் மியாவ் மியாவ் என்றதும் என் கணவர் ஒரு மீன் துண்டை ஒரு தட்டில் கொண்டு வந்து வைக்க, வேக வேகமாகச் சாப்பிட்டு விட்டு மீண்டும் வாசலில் படுத்துக்கொண்டது...

Cat
Cat
Pixabay

எனக்கு அதன் தலையை வருடிவிடும் ஆர்வம் கொண்டாலும் அச்சத்தில் பூனை ஓடி விடுமோ என்று யோசித்து கொஞ்சம் தள்ளி நின்று ரசித்துக்கொண்டே,

``என்னங்க நாம இந்த வீட்டுக்கு குடி வந்து 5 வருஷம் ஆச்சு இது வரைக்கும் ஒரு பூனைகூட வந்து பார்த்ததில்லை. இது என்னவோ ஆச்சர்யமா இருக்கு. மீன் வாடைக்கு வருதான்னு யோசிச்சாலும் அப்படி ஒண்ணும் இல்லை... வீட்டின் கதவு திறந்து இருந்தாலும் திருட்டுத்தனமா உள்ளே வராம, நேர்மையா வெளியே நின்னு பசிக்குதுன்னு சொல்லுது பாருங்க, என்னவோ காரணம் இருக்குங்க, இல்லேன்னா நம்மளைத் தேடி வராது'' என்றதும் என்னவர்,

``நைட் 10 மணிக்கு இந்த ஆராய்ச்சி தேவையா? காலையில் நான் நேரமே பாங்க்குக்கு போகணும், நான் தூங்க போறேன்'' என்றார்.

மனதுக்குள் அந்தப் பூனையைப் பற்றி பல சிந்தனைகளுடன் படுக்கைக்குச் சென்றேன். மறுநாள் காலையில் அவர் வங்கிக்குச் சென்றதும், வீட்டுவேலைகளில் மூழ்கினாலும், என்னவென்று தெரியவில்லை மனம் முழுவதும் பூனையே வந்து வந்து சென்றது...

மதியம் 3 மணியளவில் மீண்டும் அந்தப் பூனை வீட்டின் வாசலில் நின்று மியாவ் என்றழைக்க, கிண்ணத்தில் பாலை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடினேன்.

நான் வருவதைப் பார்த்ததும் நேற்றிரவு சாப்பிட்ட இடத்தில் போய் நின்றுகொள்ள, நான் பாலை ஊற்ற, ருசித்து பருகினாள் ஏஞ்சல்...

பூனைக்கு நேற்று இரவே பெயர் வைத்துவிட்டேன். இப்படியாக, கிட்டத்தட்ட 7 நாள்களில் நானும் ஏஞ்சலும் தாயும் சேயும் போல ஆனோம். இரவுகளில் ஆண் பூனையிடம் மாட்டிக்கொண்டு கதறும் பொழுது, பலமுறை நானும் கலங்கிப் போனேன்... ஒருமுறை வீட்டில் பால் இல்லாத பொழுது, மிகுந்த பசி என் ஏஞ்சலுக்கு, ஏஞ்சல் அம்மா பால் வாங்கிட்டு வர வரைக்கும் இங்கயே இருக்கணும் அன்று சொன்னதும் மியாவ் என்றால்.

நான் scootty -யை எடுத்துக்கொண்டு பக்கத்து கடையில் பால் வாங்கி வரும் வரை அதே இடத்தில் காத்திருந்த எஞ்சளைக் கண்டு வியந்து போனதுண்டு...

என்ன யமுனா, இந்தப் பூனை மேல இவ்ளோ அன்பா இருக்கே, ஆச்சர்யமா இருக்கு என்றார் சுதன்...

Representational Image
Representational Image
Pixabay

ஆமாங்க, நம்ம மிருதுளா மேற்படிப்புக்கு ஆஸ்திரேலியா போய் மூணு வருஷம் ஆச்சு, வாரம் இரண்டு அல்லது மூணு முறை வீடியோ அழைப்பில்தான் பார்க்க முடியுது.

நீங்களும் காலையில் bank-க்கு போனா சாயங்காலம் 6 மணி ஆயிடுது. ரொம்ப lonely-யா இருக்கேன். ஆனா, இந்த ஏஞ்சல் வந்ததிலிருந்து புதுசா ஒரு உறவு கிடைச்ச மாதிரி மகிழ்ச்சியா இருக்குங்க என்று அந்தக் கண்ணீருடன் அவரின் கையை இறுகப் பற்றினேன், என் கணவரை சென்னையில் இருந்து திருச்சிக்கு பணிமாற்றம் செய்திருக்கிறார்கள் என்ற விபரம் அறியாமல்...

நாம் திருச்சி போயிட்டா எப்படி உன் ஏஞ்சலை பிரிஞ்சு இருக்க போற? என்றவரிடம் நாம் எதுக்கு திருச்சி போகணும் என்று கேட்க தனக்கு இன்று காலையில் டிரான்ஸஃபர் ஆர்டர் வந்த விஷயத்தை கூறினார். நான் அதிர்ச்சி அடையாமல், அப்போ போகும்போது அவளையும் கூட்டிட்டுப் போயிடலாம் என்றேன்.

யமுனா, பூனையை நாய் மாதிரி நினைக்கக்கூடாது. கட்டிப்போடலாம், வீட்டில் இருக்கணும் என்று கனவு காணக்கூடாது! பூனைகள் கிட்டே நாம் சேவகன் மாதிரிதான் இருக்கணும். அப்படித்தான் நம்மை எதிர்பார்க்கும். மனதிலும் அப்படித்தான் நினைக்கும்.

Cat
Cat

Cats are like Kings and Lover of its place . ராஜா மாதிரிதான் இருக்கும். அதற்கு இஷ்டமில்லாத இடத்தில் இருக்காது. நாய் மாதிரி மிரட்டி, பணிய வைக்க நினைத்தால் தோல்வி உறுதி. அதைக் கழுத்தில் கயிறு கட்டி இழுத்துப் போக இயலாது. அதனால் அவளை நம்ம கூட கூட்டிட்டுப் போகணும்னு நினைச்சு உன்னை நீயே கஷ்டப் படுத்திக்க வேண்டாம் என்று அறிவுரை கூறிக்கொண்டே திருச்சியில் வாடகை வீடு பார்க்க தன் நண்பர்கள் சிலருக்கு phone செய்ய ஆரம்பித்தார்... தலையில் இடி விழுந்ததைப் போல உணர்ந்தேன்.

என் குரலைக் கேட்டாலே என் கால்களுக்கிடையில் உரசிக் கொண்டே, எட்டு போட ஆரம்பிக்கும்... கணவர் சுதன் என் அருகிலிருந்தால் ஆகாது. `நான் இருக்க, நீ ஏன் வருகிறாய்...’ என்பதுபோல காலை வைத்து தள்ளும். scooty சாவியைக் கையில் எடுத்தால் என் பின்னாடியே சுத்தும், போனை கையிலெடுத்தால் குறுக்க மறுக்க ஓடி கத்தி போனை கட் பண்ண வைச்சிடும். என்ன வேணுங்கிறதை கத்தியே புரிய வைக்கும். கதவு பூட்டி இருந்தால் ஜன்னல் வழியே தலையை விட்டு, பசிக்குதா, மத்த பூனைகள் துணைக்கில்லையா, எல்லாத்தையும் எங்களுக்கு உணர்த்தும்.

Representational Image
Representational Image

ஒரு வாரத்தில் திருச்சியில் நல்ல தனிவீடு வாடகைக்கு கிடைக்க, நானும் அவரும், வேலையாட்கள் சிலரின் உதவியுடன், சாமான்களை பேக் செய்ய ஆரம்பித்தோம்... எப்படி அறிந்தாலோ ஏஞ்சல், மியாவ் மியாவ் அன்று என் காலில் உரசினாள்.

மிரண்டு போய் வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் என் படுக்கையில் நான் படுக்கும் இடத்தில் போய் சோகமாகப் படுத்துக்கொண்டாள். அதற்குள் சாமான்கள் ஏற்றிச் செல்ல லாரி வர சாமான்களை ஒவ்வொன்றாக ஏற்றிவிட்டு, ஏஞ்சல் எங்கும் தென்படவில்லை. நானும் முடிந்த வரை தேட அவளைக் காண முடியவில்லை. வீட்டு ஓனரிடம் சொல்லி விட்டு விடை பெற்றோம்.

Representational Image
Representational Image
Pixabay

நள்ளிரவில் திருச்சியை சென்றடைந்தோம்... வரும் வழியிலேயே இரவு உணவை முடித்துவிட்டதால், சாமான்களை இறக்கி வைத்து விட்டு ஆட்கள் சென்றதும், மிருதுவை வெளிநாடு அனுப்பியதை விட வேதனை அடைகிறேன் என என்னையும் அறியாமல் சுதனின் தோளில் அழ ஆரம்பிக்க, என்னை ஆறுதல் படுத்திவிட்டு , பெட்சீட்டால் சுருட்டி வைத்த மெத்தையை விரிக்க மியாவ் என்ற ஏஞ்சலின் குரல் கேட்க, மனப்பிரம்மை என நினைத்தால் அது தவறு... என் கால்களில் உரசி நிற்கிறாள் என் ஏஞ்சல்..!

- நித்யா இறையன்பு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு