Published:Updated:

ஆதாருடன் பான் எண்ணை இணைச்சுட்டீங்களா? - சின்ன நினைவூட்டல் #MyVikatan

Representational Image
Representational Image

பிறந்த வருடம் சிலருக்கு முரணாய் இருந்தால் ஆதார் அட்டையில் பான் அட்டையில் உள்ளதுபோல் பிறந்த வருடம் சரி செய்தால் மட்டுமே இணைக்க முடியும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜுன் 30ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு சில நாட்கள் சர்வர் பிரச்சனை காரணமாக இணைக்க முடியாமல் இருந்தது.தற்போது ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது சரி செய்யப்பட்டு இணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வருமான வரி சட்டப்பிரிவு 139 AA (2)-யின் அடிப்படையில் ஜூலை 1, 2017 அன்று முதல் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது அவசியம் என வருமான வரித்துறை அறிவித்தது.2021 இல், மத்திய அரசு வருமான வரிச் சட்டத்தில் 234 எச் என்ற புதிய பிரிவைச் சேர்த்து பான் மற்றும் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் தனிநபர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் எனக்கூறி.. சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் வருமான வரி ஏய்ப்பு முறைகேடுகளை தடுப்பதற்காக ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. முதலில் 2020ம் ஆண்டு மார்ச் 31க்குள் இணைக்க கெடு விதித்தது.

incometax.gov.in Website
incometax.gov.in Website

கொரொனா முதல் அலையின் காரணமாக 2021 மார்ச் 31வரை நீட்டித்து..இறுதியாக ஜூன் 30வரை காலக்கெடு நீட்டித்துள்ளது.

#சரிபார்க்க

incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்லவும். அதில் மூன்றாவதாக Link Aadhaar status இருக்கும். அதில் நுழைந்து உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண் டைப் செய்தவுடன் view status பகுதியை கிளிக் செய்தால் ஏற்கெனவே உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your pan is Linked to Aadhaar Number XXXXXXXX என்ற செய்தி கிடைக்கும். உங்கள் பான் ஆதார் எண்ணுடன் இணைந்துள்ளதை உறுதி செய்து கொள்ளலாம்.

#இணைக்க

ஒரு வேளை இணையவில்லை எனில் இரண்டாவதாய் உள்ள link aadhaar பகுதியினுள் செல்லவும். பான் அட்டையில் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணை அருகில் வைத்துக் கொள்ளவும்.

1.பான் எண்

2.ஆதார் எண்

3 .ஆதார்/பான் எண்ணில் உள்ளவாறு பெயர்

(எழுத்துப்பிழை தவறுகளைத் தவிர்க்கவும்)

4.மொபைல் எண் (கொடுக்கப்பட்ட எண்ணிற்கு மட்டுமே OTPவரும்)

5.பிறந்த வருடம் மற்றும் தகவல் சரியானவை என இரு கட்டங்களிலும் ஓகே கொடுத்த பின் Link Aadhaar கொடுத்தால் போனிற்கு OTP வரும். அதனை உள்ளீடு செய்தால் வெற்றிகரமாய் இணைத்துவிட்டதாய் தகவல் வரும்.

ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு
ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு

*பிறந்த வருடம் சிலருக்கு முரணாய் இருந்தால் ஆதார் அட்டையில் பான் அட்டையில் உள்ளதுபோல் பிறந்த வருடம் சரி செய்தால் மட்டுமே இணைக்க முடியும்.

*மொபைலில் இணைக்கத் தெரியாவிட்டால்,ஆதார் மையத்திற்கு சென்று இணைக்கலாம். இதற்காக Annexure-I ல் தேவையான விவரங்களை பதிவு செய்து, தேவையான ஆவணங்களையும் உடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். இதற்காக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.

*பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லையென்றால் பான் கார்டு செயலற்றதாக ஆகிவிடும் என்றும் வருமான வரி துறை எச்சரித்துள்ளது.

*அரசாங்கத்தில் மாதாந்திர ஊதியம் பெறுவோர் இம்மாத இறுதிக்குள் இணைக்காவிட்டால் அடுத்த மாத ஊதியம் வழங்கப்படாது என எச்சரித்துள்ளது.

*தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பும் ஆதார் பான் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது.

*பான் அட்டை இணைக்காவிட்டால் வரி செலுத்துதல்,டி.டி.எஸ்/டி.சி எஸ் வரவு போன்ற பரிவர்த்தனைகளில் சிக்கல் ஏற்பட்டுவிடும்

*ஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டை வைத்திருக்க கூடாது. அவ்வாறு இருப்பின் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 272 பி உள்ளதுபோல் .10,000 அபராதம் விதிக்கப்படும்.

*ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை இருந்தால், அவர் உடனடியாக கூடுதல் பான் அட்டைகளை ஒப்படைக்க வேண்டும்.

கடைசி நேரத்தில் ஆதார் பான் இணைக்க முடியாமல் இருக்க வாய்ப்புள்ளது.எனவே இப்போதே மொபைல் போன் இருந்தால் ஒரு நிமிடத்தில் இணைத்துவிடலாம். இணைத்துவிட்டவர்கள் தங்கள் அட்டைகள் இணைந்துள்ளனவா என சரிபார்த்துக் கொள்ளவும்.

-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு