Published:Updated:

Made in India: கோலி சோடா தயாராவது எப்படி தெரியுமா? |Video

Made in India

அந்தந்த பிளேவர்களுக்கான எசன்ஸ், சர்க்கரை தவிர்த்து சீக்ரெட் இன்கிரிடென்ட் ஒன்றும் சேர்க்கப்பட்டு மெஷின் மூலம் நன்கு கலக்கப்படுகிறது.

Made in India: கோலி சோடா தயாராவது எப்படி தெரியுமா? |Video

அந்தந்த பிளேவர்களுக்கான எசன்ஸ், சர்க்கரை தவிர்த்து சீக்ரெட் இன்கிரிடென்ட் ஒன்றும் சேர்க்கப்பட்டு மெஷின் மூலம் நன்கு கலக்கப்படுகிறது.

Published:Updated:
Made in India

வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிக்க தெரு முக்கில் உள்ள கடையில் இருந்து கலர் ஒன்றை வாங்கி வருவது 80-களில் நம்மிடையே இருந்த வழக்கம். அதுவே 90-களுக்கு பிந்தைய காலங்களில் நம்மை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டன அயல்நாட்டு குளிர்பானங்கள். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை ஒரு பானத்தின் மேலான நமது காதல் மட்டும் கொஞ்சமும் குறைந்திருக்கவில்லை. அது தான் கோலி சோடா. பல்வேறு ஃபிளேவர்களில் உள்ள அதன் சுவை ஒருபுறம் இருக்க, அந்த கோலியை ஒற்றை விரலால் அழுத்தி திறந்து குடிக்கும் சுகமே தனி.

Goli Soda
Goli Soda

அதை ஒவ்வொரும் முறை குடிக்கும் போதும், அந்த சோடா எப்படி தயாராகிறது என்றிலிருந்து அந்த கோலி மேலே நிற்பது எப்படி போன்றவை குறித்து நாம் பலமுறை ஆர்வப்பட்டிருப்போம். இதை தெரிந்து கொள்வதற்கு வாடிவாசல் கோலி சோடா கம்பெனியிற்கு நேரடியாக சென்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கண்ணாடி பாட்டிலை மிக சுத்தமாக கழுவுவதில் இருந்தே கோலி சோடா தயாரிப்பதற்கான பணி தொடங்குவதாகக் கூறுகிறார் அதன் உரிமையாளரான சரவணன். ஒரு முறை இருமுறை அல்ல சுமார் ஆறு முறை மீண்டும் மீண்டும் கழுவப்படுகின்றன அக்கண்ணாடி பாட்டில்கள். இப்பணி நடைபெறும் அதே நேரத்தில் சோடாவிற்கான சிரப் தயாராகும் லேபிற்கு சென்றோம். பன்னீர், ஆரஞ்ச் முதலிய பல பிளேவர்களுக்கான சிரப் இங்கிருந்தே தயாராகின்றன. அந்தந்த பிளேவர்களுக்கான எசன்ஸ், சர்க்கரை தவிர்த்து சீக்ரெட் இன்கிரிடென்ட் ஒன்றும் சேர்க்கப்பட்டு மெஷின் மூலம் நன்கு கலக்கப்படுகிறது.

Goli Soda
Goli Soda

தயாராகும் சிரப் பாட்டிலுக்குள் வேறொரு மெஷின் மூலமே மீண்டும் நிரப்பப்படுகிறது. அளவின் மூலம் அல்லாமல் ஒரு பாட்டிலுக்கு இத்தனை நொடிகள் சிரப் நிரப்பவேண்டும் என்று செட் செய்யப்பட்டு நிரப்பப்படுகிறது. இதற்கடுத்துதான் இந்த மொத்த தயாரிப்பின் முக்கியமான பணி. அதாவது carbonated water-ஐ நிரப்பி சோடாவை சீல் செய்வது . இதற்கு சுத்தீகரிக்கப்ட்ட நீரை முதலில் நன்கு குளிரூட்டுகிறார்கள். சுமார் 4 டிகிரியில் உள்ள அந்நீரில் பின்னர் கார்பன் செலுத்தப்படுகிறது. இதற்கு பின்னர் இந்த carbonated water-ஐ பாட்டிலில் உள்ள சிரப்புடன் சேர்க்கப்படுகிறது. இதற்கென்றும் தனியே ஒரு கருவி உள்ளது. இங்கு தான் அக்கோலி மேல் இழுக்கப்படுகிறது. இது எவ்வாறு நடக்கிறது என்பதை கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism