Published:Updated:

லாக்டௌன் பரிதாபங்கள் @ மளிகைக்கடை! - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image

லாக்டெளன் 4.0-வில் மளிகைக் கடையில் என்னவெல்லாம் நடக்கும்? - ஒரு வேடிக்கை பதிவு..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணரும் வரை மளிகைக்கடை வட்டத்துக்குள் நிற்க வேண்டி வரும். வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் கொடுத்தாலே மளிகைப் பொருள்கள் நம் வீட்டுக்கு வந்து சேர்ந்த நாள்கள் வழக்கொழிந்து போய்விட்டதை எண்ணி நெஞ்சு துக்கத்தில் விம்மும்!

மளிகைக் கடைகள் எல்லாம் நாளையே வழக்கொழிந்து போவதுபோல நமக்கு முன்னே நிற்பவர் ஒரு வருடத்திற்கு தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டிருப்பார். அவரைப் பார்த்து 'மொறடா மொற' என முறைத்தால் மட்டுமே நம் முறை சீக்கிரமாய் வரும்!

Representational Image
Representational Image

புதிதாக மார்க்கெட்டுக்கு வந்த மலிவான பொருள்களுக்கு பார்ட் டைம் மார்க்கெட்டிங் மேனேஜராக கடைக்காரர் அவ்வப்போது அவதாரம் எடுப்பார். அவற்றை மறுதலிக்க நாம் வீட்டில் கண்ணாடி முன் நின்று பயிற்சி எடுத்துச் செல்வது சிறந்தது!

ஒளிவட்டம் இல்லாத தேவதூதர்களாக டெலிவரி பாய்கள் காட்சியளிப்பார்கள். நாம் ஒரு பொருளைச் சொல்லி முடித்ததும் அதனை எடுக்காமல் 'வேற, வேற' எனக் கடைப் பையன்கள் கூறும்போது 'ஏம்பா நான் சரியாத்தான பேசறேன்' என நம் மைண்ட்வாய்ஸ் அலறும்.

கடைப் பையன்கள் இடையே நடக்கும் கொரோனா உரையாடல்களைக் கேட்டு நாம் இருப்பது மளிகைக்கடையா அல்லது மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையா எனும் சந்தேகம் அவ்வப்போது மின்னி மறையும்.

நாம் கேட்கும் பொருள்களில் பாதி இருக்காது. அதற்கு மாற்றாய் வேறு பொருளே கிடைக்கும் என்பதால் வழக்கம் போலவே நமது சொந்த விருப்பத்தைவிட கடைக்காரரிடம் இருக்கும் பொருள்கள் நமது விருப்பத்தைத் தீர்மானிக்கும்.

அப்போது 'நீ விரும்பும் பெண்ணைவிட உன்னை விரும்பும் பெண்' என்ற 90s பட டயலாக் தேவையின்றி நினைவுக்கு வந்து தொலைக்கும்.

மாற்றுப் பொருள்களை வேண்டாம் என்றால், நேரத்தை வீணடித்ததாய்க் கடைக்காரர் பலபேர் முன்னிலையில் மானத்தை வாங்கிவிட கணிசமான வாய்ப்புண்டு. அவற்றை வீட்டுக்கு வாங்கிக்கொண்டு போனால் சாக்லேட் சாப்பிட்ட குழந்தைகளை வைவதற்கு இணையாய், `இதை எதுக்கு வாங்கிட்டு வந்தீங்க?' எனக் குடும்பத்தினர் வைவதற்கான வாய்ப்பும் உண்டு என்பதால், இப்போது என்ன செய்வது என இருதலைக்கொள்ளி எறும்பாய் முழிக்க நேரிடும்.

Representational Image
Representational Image

'எதுக்குடா நான் சரிப்பட்டு வரமாட்டேன்' போல, ஒருவருக்கு என்னவெல்லாம் தேவை என்பது அவரைவிட கடைக்காரருக்கு மட்டும் எப்படி நன்றாகத் தெரிகிறது என்ற கேள்வி மனதை உறுத்தும்.

பில்லுக்கும் பொருளுக்கும் எண்ணிக்கையில் நமக்கு மட்டுமே எப்போதும் வித்தியாசம் ஏற்படும். 'என்னவோ போடா மாதவா' என்று தமக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது போல கடைப் பையன்கள் நிற்பார்கள்!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு